Monday, July 28, 2014

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: (Constitutional Bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.
1. தேர்தல் ஆணையம் Art.324
2. மத்திய தேர்வாணையம் Art.315-323
3. மாநில தேர்வாணையம் Art.315-323
4. நிதிக்குழு Art.280
5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338
6. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A
7. மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் Art.350-B
8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148
9. அட்டர்னி ஜெனரல் Art.76
10. அட்வகேட் ஜெனரல் Art.165
அரசியலமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1. திட்டக்குழு March 1950
2. தேசிய வளர்ச்சிக் குழு August 1952
3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993
4. மாநில மனித உரிமை ஆணையம் 1993
5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
6. மத்திய தகவல் ஆணையம் 2005
7. மாநில தகவல் ஆணையம் 2005
மத்தியிலும் மாநிலத்திலும்
Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்
Art.32 உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை
Art.226 உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை
Art.74 அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு தலைவர் செயல்படுதல்
Art.163 அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுதல்
Art.78 பிரதமரின் பணிகள்
Art.167 முதல்வரின் பணிகள்
Art.72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.123 குடியரசுத் தலைவரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.110 பண மசோதா
Art.199 பண மசோதா (மாநிலத்தில்)
Art.112 வருடாந்திர நிதிநிலை அறிக்கை
Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்)
Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
Art.267 அவசரகால நிதி
அரசியல் கட்சிகள்
தேசிய கட்சி அங்கீகாரம்

ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% வாக்குகள் மக்களவை தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மாநில கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட, மாநில பொதுத் தேர்தலில் குறைந்தது 6% வாக்குகள் பெற வேண்டும். மேலும் குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன. (2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.
1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
2. பாரதீய ஜனதா கட்சி (BJP)
3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)
5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
6. தேசியவாத காங்கிரஸ் (NCP)
7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)
தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.
மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம் பெறாத கட்சிகள் உள்ளன.
உச்சநீதிமன்றம் (Art. 124 -147)
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை நீதிபதியையும் 30 நீதிபதிகளையும் (30+1) கொண்டது.
Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம் (Court of Record)
Art.131 முதன்மைப்பணி (Original Jurisdiction)
Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்
Art.143 ஆலோசனை அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை
Art.137 தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல் (Revisory Jurisdiction)
Art.32 நீதிப்பேராணை அதிகாரம் உச்சநீதிமன்றம் டெல்லியில் அமைந்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65
உயர்நீதிமன்றம்
• இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள் உள்ளன
• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா
• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்
• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்
• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள் முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.
• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக பெஞ்சுகளைக் கொண்டுள்ளது
• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
• உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற கேபினட் தீர்மானித்துள்ளது.
நிதி ஆணையம் Art.280
5 வருடத்திற்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கைடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும்
நிதி ஆணைய முதல் தலைவர் நியோகி, 12வது தலைவர் கே.சி.ரங்கராஜன்
தற்போது 13வது நிதி ஆணையத்தின் தலைவர் விஜய் எல்.கெல்கர்
தேர்தல் ஆணையம் Art.324-329
தற்போது மூன்று தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்
1. எஸ்.ஒய்.குரேஷி தலைமை தேர்தல் ஆணையர்,
2. வி.எஸ்.சம்பத்,
3. அரிசங்கர் பிரம்மா
இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
பிரதமர் (Prime Minister)
• இந்திய அரசாங்கத்தின் தலைவர்
• பெயரளவு அதிகாரம் உள்ளவர் குடியரசுத் தலைவர்
• உண்மையான அதிகாரம் உள்ளவர் பிரதமர்
• திட்டக்குழுவின் தலைவர்
• தேசிய வளர்ச்சிக் குழுத் தலைவர்
• தேசிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
• அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்களுக்கான துறைகளை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பாக நாடாளுமன்றத்திற்கு (குறிப்பாக லோக்சபா) கட்டுப்பட்டவர்கள் தனித்தனியாக குடியரசுத் தலைவருக்கு பொறுப்பானவர்கள்
• ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் மொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்
• அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதும், துறைகளை மாற்றுவதும் பிரதமரே! அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்யவும் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார்.
• அனைத்து உயர் அதிகாரிகள் நியமானத்தில் குடியரசுத் தலைவருக்கு உதவுவார்.
• தேசிய நெருக்கடி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி, நிதி நெருக்கடி போன்றவற்றை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.
• நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் நேரு
• வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா காந்தி
• ஜமீன் தாரி முறையை ஒழித்தவர் நேரு
• கொத்தடிமை முறையை ஒழித்தவர் இந்திரா காந்தி
• இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா", பாகிஸ்தானின் உயர்ந்த விருதான 'நிசாமி பாகிஸ்தானி' இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்
• தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் லால்பகதூர் சாஸ்திரி
• சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் இந்திரா காந்தி
• மிக அதிக வயதில் பிரதமரானவர் மொரார்ஜி தேசாய், இவர் காங்கிரஸ் கட்சியை சாராதவ்ர் என்பதும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது
• பாராளுமன்றத்தை எதிர் கொள்ளலாமலேயே பதவிக்காலம் முடிவுற்றவர் சரண்சிங்
• நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்
• தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல் இன்சைடர்
• இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி. தேர்தலில் தோல்வியடைந்த முதல் பிரதமரும் இவரே.
• தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் பி.வி.நரசிம்மராவ்
• ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் (ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது)
• திட்டக்கமிஷன் துணை தலைவராகவும் பின் தலைவராகவும் பதவி வகித்தவர் மன்மோகன் சிங்
ஓய்வு பெறும் வயது:
மாநில அரசுப் பணியாளர்...................58
மாநில அரசுப் பணியாளர் 'டி' பிரிவு..........60
மத்திய அரசுப் பணியாளர்...................60
உயர்நீதிமன்ற நீதிபதி..........62 தற்போது (65)
உச்சநீதிமன்ற நீதிபதி.......................65
மாநிலப் பொதுப்பணி ஆணையத் தலைவர்.......62
மத்திய பொதுப்பணி ஆணையத் தலைவர்........65
மாநிலத் தேர்தல் ஆணையர்..................62
மத்திய தேர்தல் ஆணையர்...................65
தலைமைக் கணக்கு தணிக்கையாளர்.............65
மாநில மனித உரிமை ஆணையத் தலைவர்.......70
மத்திய மனித உரிமை ஆணையத் தலைவர்.......70
மாநில முதல்வர் வயது வரம்பு இல்லை
மாநில ஆளுநர் வயது வரம்பு இல்லை
பிரதமர் வயது வரம்பு இல்லை
குடியரசுத் தலைவர் வயது வரம்பு இல்லை.
மாதம் ஒன்றுக்கு சம்பளம்:
குடியரசுத் தலைவர் ரூ.1,50,000
துணைக் குடியரசுத் தலைவர் ரூ.1,25,000
ஆளுநர் ரூ.1,10,000
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரூ.1,00,000
உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகள் ரூ.90,000
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ.90,000
உயர்நீதிமன்ற மற்ற நீதிபதிகள் ரூ.80,000
• துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கென சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால், ராஜ்ய சபா தலைவர் என்ற முறையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
• குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அப்போது குடியரசு தலைவருக்குரிய சம்பளம் மட்டும் வழங்கப்படும்.
• துணைக் குடியரசுத் தலைவர் ராஜ்ய சபையின் தலைவர் (Ex Officer Chairman)
• பொதுவாக துணைக் குடியரசுத் தலைவருக்கு ராஜ்ய சபையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில், அவர் ராஜ்ய சபையின் உறுப்பினரல்ல.
• ஆனால், வாக்குகள் சமநிலையின் போது வாக்களிக்கிறார் (Casting Vote)
• குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், இரண்டு பதவிகளும் காலியாக உள்ள காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அவ்வாறு பணியாற்றிய நீதிபதி எம்.ஹிதயதுல்லா.
அரசியலின் முக்கியச்சொற்கள் எடுக்கப்பட்ட மூலமொழி :
பாலிடிக்ஸ் (Politics) கிரேக்கம்
ஸ்டேட் (State) டியூடோனிக்
சவரினிட்டி (Soverignity) லத்தீன்
நேசன் (Nation) லத்தீன்
லிபர்டி (Liberty) லத்தீன்
லா (Law) டியூடோனிக்
டெமாக்கரசி (Democracy) கிரேக்கம்
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (Public Admin) லத்தீன்
பீரோக்கிரசி (Bureaucracy) பிரெஞ்ச்
பட்ஜெட் (Budget) பிரெஞ்ச்
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.
• Art, 36 முதல் 51 வரை காணப்படுகிறது.
• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.
• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.
• Art 40 கிராமப் பஞ்சயத்து.
• Art 41 முதுமை நோயுற்ற நிலையில் அரசு உதவி.
• Art 42 பெண்களுக்கு பேறுகால விடுப்பு.
• Art 43 வாழ்க்கைக்கான கூலி.
• Art 44 நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.
• Art 45-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி.
• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி, பொருளாதார வசதி
• Art 47 வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
• Art 48 பசுவதை தடுத்தல்
• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல்
• Art 50 நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல்
• Art 51 உலக அமைதியில் நாட்டம் கொள்ளுதல்.
குடியரசுத் தலைவர். (PRESIDENT)
• இந்தியாவின் முதல் குடிமகன்
• அரசின் தலைவர் (Executive Head of the State)
• 42-வது சட்ட திருத்ததின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். (Art. 74 (I))
• குடியரசுத் தலைவர் தேர்தல் முறை பற்றி Art 54 மற்றும் 55 குறிப்பிடுகிறது. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது, மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட Electoral College.
• பிரதமர், பிரதமரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
• உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள்.
• உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள்.
• அட்டர்னி ஜெனரல்.
• தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள்.
• மத்திய பொதுப்பணி ஆணையத் (UPSC) தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்.
• மாநில ஆளுநர்.
• முப்படைகளின் தளபதிகள்.
• தலைமை தணிக்கை அதிகாரி CAG.
• நிதி ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள். வெளிநாட்டுக்கான இந்திய தூதர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
• முப்படைகளின் தலைவர் இவரே.
• போர்க்காலத்தில் போர் அறிவிப்பு செய்வதும், போர் நிறுத்தம் செய்வதும் குடியரசுத் தலைவரே.
• ராஜ்ய சபாவுக்கு 12 பேரை நியமனம் செய்கிறார்.
• லோக்சபாவுக்கு 2 ஆங்கிலோ இந்தியரை நியமனம் செய்கிறார்.
அவசரக் கால அதிகாரிகள் (EMERGENCY POWERS) நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை
• Art 352 தேசிய நெருக்கடி NATIONAL EMERGENCY
• இது அமல்படுத்திய ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
• இது வரை மூன்று முறை (1962, 1971, 1975) தேசிய நெருக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Art.356 மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி STATE EMERGENCY
• இது அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
• இதுவரை 100 முறைக்கு மேல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
• இதனை அதிக அளவில் பயன்படுத்திய பிரதமர் இந்திராகாந்தி.
Art . 360 நிதி நெருக்கடி FINANCIAL EMERGENCY
• நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில் அமல்படுத்தப்படவில்லை.
• இதனை அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்:
• குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
• குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
• குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
• குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
• குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
• Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
• Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.
• பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.
• பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் லோக்சபா சபாநாயகர்.
• முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
• முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே.
• அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
• முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
• முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்.
• முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
• முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
• பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
• பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும் சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
• Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்.
• Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
• குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.
• குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
இந்திய அரசியலமைப்பின் அட்டவனைகள்: Schedules – 12
1. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள்.
2. குடியரசுத்தலைவர், துணைக் குடியரசித் தலைவர், ஆளுநர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகள், சம்பளம்.
3. பதவிப் பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள்.
4. இந்திய மாநிலங்களின் ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றியது.
5. அட்டவனைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் பற்றியது.
6. அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் (ம) அருணாச்சல பிரதேச மாநில பழங்குடியினர் நலம் பற்றியது.
7. மத்தியப் பட்டியல் - 97, மாநிலப் பட்டியல் - 66, பொதுப்பட்டியல் 47 பற்றியது.
8. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது.
9. நில சீர்திருத்தச்சட்டங்கள் பற்றியது (முதல் சட்டத் திருத்தம் 1951 ல் சேர்க்கப்பட்டது)
10. கட்சித் தாவல் தடைச்சட்டம் (52வது சட்ட திருத்தம் 1985)
11. பஞ்சாயத்து ராஜ் 73 வது சட்டத் திருத்தம் 1992.
12. நகராட்சி 74 வது சட்டத் திருத்தம் 1992.
இந்தியாவும் அதன் ஆட்சிப் பகுதிகளும் (THE UNION & ITS TERRITORIES)
• இது பகுதி 1 ல் அமைந்துள்ளது.
• Article 1 முதல் 4 வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் ஆட்சிப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது.
• தற்போது 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் (டெல்லி, தேசிய தலைநகரப் பகுதி உட்பட) உள்ளன.
மொழி வாரி மாநிலங்கள் தொடர்பான கமிட்டிகள் :
1. 1948 ஜூன் ல் தார் கமிட்டி அமைக்கப்பட்டு 1948 டிசம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
2. 1948 டிசம்பர் கமிட்டி அமைக்கப்பட்டு 1949 ஏப்ரல் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
3. 1953 டிசம்பர் பசல் அலி கமிட்டி அமைக்கப்பட்டு 1955 செப்டம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
1950ல் பகுதி A யில் உள்ள மாநிலங்கள், B யில் உள்ள மாநிலங்கள் C யில் உள்ள மாநிலங்கள் D யில் உள்ள மாநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
1956ல் 7வது சட்டத் திருத்தத்தின்படி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1956ல் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் என வகைப்படுத்தப்பட்டன.
மாநிலங்கள் உருவான ஆண்டு:
ஆந்திரா 1953 குஜராத் 1960 மகாராஷ்டிரா 1960
கேரளா 1956 மைசூர் 1956 நாகலாந்து 1963
அரியானா 1966 இமாச்சலப் பிரதேசம் 1971 மேகலாயா 1971
மணிப்பூர் 1971 திரிபுரா 1971 சிக்கிம் 1975
மிசோரம் 1987 அருணாச்சலப் பிரதேசம் 1987 கோவா 1987
சட்டீஸ்கர் 2000 உத்தரகாண்ட் 2000 ஜார்கண்ட் 2000 • மைசூர் மாநிலம் 1973ல் கர்நாடகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. • மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு பெயர் மாற்றச்சட்டம் 1968 படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. • ஜனவரி 14, 1969ல் தமிழ்நாடு பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
குறைந்த பட்ச வயது.
குடியரசுத் தலைவர் 35 துணைக் குடியரசுத் தலைவர் 35
ஆளுநர் 35 பிரதமர் 25 லோக்சபா உறுப்பினர் 25
ராஜ்யசபா உறுப்பினர் 30 சட்டமன்ற உறுப்பினர் (எம். எல்.ஏ) 25
முதலமைச்சர் 25 சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி) 30
பஞ்சாயத்து உறுப்பினர் 21 வாக்காளர் 18
திருமண வயதுப் பெண் 18 திருமண வயது ஆண் 21
கட்டாய அடிப்படைக் கல்வி 6 - 14 வரை
குழந்தை தொழிலாளர் என்போர் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள்
அரசுப் பணியாளராக குறைந்தப்பட்ச வயது 18
குறிப்பிட்ட பணிகளுக்கு வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணம்: VAO- 21, EO- 25, SR- 20
குடியுரிமை (Citizenship)
• இது பகுதி 2ல் அமைந்துள்ளது.
• இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை நடைமுறையில் உள்ளது.
• Art 5 முதல் 11 வரை இந்தியக் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது.
அடிப்படை உரிமைகள்? (Fundamental Rights)
• இது பகுதி 3ல் அமைந்துள்ளது.
• Art 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுகிறது.
• இது நடைமுறைக்கு வரும் போது 7 அடிப்படை உரிமைகள் இருந்தன.
• 44வது சட்டத் திருத்தத்தின் மூலம் சொத்துரிமை 1978 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
• தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் 6 அவை
• சமத்துவ உரிமை Art 14- 18
• சுதந்திர உரிமை Art 19- 22
• சுரண்டலுக்கு எதிரான உரிமை Art 23- 24
• சமய உரிமை Art 25- 28
• அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் Art 32
1. சமத்துவ உரிமை
Art. 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்
Art. 15 சாதி, சமய, இன, பால் (அ) பிறப்பு வேற்பாடு காட்ட தடை
Art. 16 அரசு வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
Art. 16 (4) SC, ST -க்கு முன்னுரிமை
Art. 17 தீண்டாமை ஒழிப்பு
Art. 18 பட்டங்கள் ஒழிப்பு
2. சுதந்திர உரிமை (Art. 19- 22)
Art.19 இது 6 சுதந்திரங்களை வழங்கியுள்ளது.
1.பேச்சு (Freedom of Speech and expression)
2. ஒன்று கூடும் சுதந்திரம் (Freedom of Assembly)
3. சங்கம் அமைக்க (Freedom to form Association)
4. இந்தியா எங்கும் செல்ல (Freedom of Movement)
5. இந்தியா எங்கும் வசிக்க (Freedom of Residence & Settlement)
6. தொழில் செய்ய (Freedom of Profession, Occupation, Trade, Business)
Art. 20 - சட்ட விரோதமாக குற்றம் சமத்துவதிலிருந்து பாதுகாப்பு
Art.21 - தனி நபர் சுதந்திரம்
Art.21A - 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி
Art. 22கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art. 23 – 24)
Art.23 - சுரண்டலுக்கு எதிராகவும் கொத்தடிமை முறையை தடை செய்கிறது.
Art.24 - 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணியில் அமர்த்த தடை
4. சமய உரிமை (Art.25-28)
Art.25 - விரும்பிய மதத்தை தழுவ உரிமை
Art.26 - மத விஷயங்களை நிர்வகிக்க உரிமை
Art.27 - மத அடிப்படையிலான வரிகளை தடுத்தல்
Art.28 - குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் கூட உரிமை
5. கல்வி, கலாச்சார உரிமை (Art.29 -30)
Art.29 - சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தல்
Art.30 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்த உரிமை
Art.31 - நீக்கப்பட்டது.
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் உரிமை (Art 32) இது இந்திய அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் போன்றது. டாக்டர் அம்பேத்கர்
இது 5 நீதிப் பேரானைகளை வழங்குகிறது.
1. Writ of Habeas Corpus -ஆட்கொணர் நீதிப் பேராணை
2. Writ of Mandamus - கட்டளை நீதிப் பேராணை
3. Writ of Prohibition - தடை நீதிப் பேராணை
4. Writ of Quowarranto - உரிமையேது வினா நீதிப்பேராணை
5. Writ of Certiorari - ஆவணக் கேட்பு நீதிப் பேராணை
இந்திய அரசியலமைப்பு
1.அரசின் கூறுகள் மொத்தம் 4, அவை.
நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம், இறைமை.
2.அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அரசியல் நடைமுறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அடிப்படையான சட்டம்.
3.உலகில் முதன்முதலில் அரிஸ்டாட்டில், 158 கிரேக்க அரசியல் முறைகளை ஆராய்ந்து ஏதென்ஸின் அரசியலமைப்பை (Constitution of Athens) ஏற்படுத்தினர்.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[சுதந்திரத்திற்கு முன்]
1. 1773 ஒழுங்குமுரை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது இந்தியாவில் கம்பெனி நிர்வாகத்தின் மீது ஆங்கிலேய நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக இருந்தது.
2. 1784 பிட் இந்திய சட்டம்.
3. 1793, 1813, 1833, 1853 சாசனச் சட்டங்கள்
• 1793 முதல் சாசனச் சட்டம்.
• 1813 இந்தியர்களின் கல்விக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கியது.
• 1833 சாசன சட்டம் நிறைவேற்றம்.
• சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு அறிமுகம்.
• வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆனார்.
• இதன்படி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு.
• 1853 இறுதியான சாசனச் சட்டம்.
4.1858 சிப்பாய்க் கலகத்தின் (1857) விளைவாக ஆட்சி கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசிற்கு மாறியது.
5. 1861ம் ஆண்டு கவுன்சில் சட்டம்.
• இந்திய மக்களின் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள கவர்னர் ஜெனரலுக்கு வழிவகுத்தது.
6. 1872ம் ஆண்டு கவுன்சில் சட்டம்.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்ற கவுன்சிலுக்குள் நுழைந்தனர்.
8. சட்டமியற்றும் பணிகளுடன் பட்ஜெட் பற்றிய விவாதங்களை (நிபந்தனைகளுக்குட்பட்டு) நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
9.1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம்.
• வகுப்பு வாரி பிரதிநித்துவம் புகுத்தப்பட்டது.
• முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி வழங்கப்பட்டது.
10. 1919 மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்.
• இரட்டை ஆட்சி முறையைப் புகுத்தியது.
11. 1935 இந்திய அரசாங்கச் சட்டம்.
• அனைத்திந்திய கூட்டாட்சி (All India Federation)உருவாக வழிவகை செய்தது.
• பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது.
• மாகாண சுயாட்சி வழங்கப்பட்டது.
12. 1946 கேபினட் மிஷன்(Cabinet Mission Plan) திட்டம்.
• தற்போதைய இந்திய அரசியலமைப்பு சட்டம் 1946 மே 16ல் கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டது.
13. 1947 இந்திய விடுதலைச்சட்டம்.
• இந்தியாவை இரு நாடுகளாகப் பிரித்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு டொமினியன்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[ சுதந்திரத்திற்கு பின்]
1. 1947 ஜூலை 16ல் பாகிஸ்தான் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ல் டாக்டர் சச்சிதானந்த சிங்காவை இடைக்கால தலைவராகக் கொண்டு நடைபெற்றது.
3. 1946 டிசம்பர் 11ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
i. மத்திய அதிகாரக் குழு தலைவர் J.L.நேரு.
ii. அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர் குழு தலைவர் V.B.பட்டேல்.
iii. மாகாண அரசியலமைப்புக் குழு தலைவர் V.B.பட்டேல்.
iv. மத்திய அரசியலமைப்புக் குழு தலைவர் J.Lநேரு.
v. வரைவுக் குழு தலைவர் B.R.அம்பேத்கர்.
vi. கொடி குழு தலைவர் J.B.கிருபளானி.
vii.வகைப்படுத்தல் குழு தலைவர் K.M.முன்ஷி
இவற்றுள் முக்கியமானது வரைவுக்குழு. இந்த வரைவுக்குழு (Drafting Committee)7 பேர் கொண்டது.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[ சுதந்திரத்திற்கு பின்]
1. 1947 ஜூலை 16ல் பாகிஸ்தான் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ல் டாக்டர் சச்சிதானந்த சிங்காவை இடைக்கால தலைவராகக் கொண்டு நடைபெற்றது.
3. 1946 டிசம்பர் 11ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
1. மத்திய அதிகாரக் குழு தலைவர் J.L.நேரு.
2. அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர் குழு தலைவர் V.B.பட்டேல்.
3. மாகாண அரசியலமைப்புக் குழு தலைவர் V.B.பட்டேல்.
4. மத்திய அரசியலமைப்புக் குழு தலைவர் J.L.நேரு.
5. வரைவுக் குழு தலைவர் B.R.அம்பேத்கர்.
6. கொடி குழு தலைவர் J.B.கிருபளானி.
7.வகைப்படுத்தல் குழு தலைவர் K.M.முன்ஷி
இவற்றுள் முக்கியமானது வரைவுக்குழு. இந்த வரைவுக்குழு (Drafting Committee)7 பேர் கொண்டது.
1.B.R.அம்பேத்கர் தலைவர்
2.N.கோபாலசாமி அய்யங்கார்
3. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
4.K.M.முன்ஷி
5. முகமது சதவுல்லா
6. N.மாதவ ராவ்
7. T.கிருஷ்ணமாச்சாரி
• இந்திய அரசியலமைப்புக்கான கருத்தினை முதன் முதலில் (Idea) தெரிவித்தவர் M.N.ராய்.
• இந்திய அரசியலமைப்புக்குழு ஆலோசகர் ( Advisor) B.M.ராவ்.
• இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது (Adopted).
• 1950 ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது (Came into Force).
• இந்திய அரசியலமைப்பை உருவாக்க ஆன காலம் 2 வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள்.
• ஜூலை 22, 1947ல் தேசியக் கொடி அரசியலமைப்பு சபையால் ஏற்கப்பட்டது.
• ஆந்திராவை சேர்ந்த பிங்காலி வெங்கையாவினால் இது வடிவமைக்கப்பட்டது.
• இந்திய அரசியலமைப்பு ஆரம்பத்தில் (Article) 395 ஷரத்துக்கள் (Schedule) 8 பட்டியல் (தற்போது 12), Part 22 பகுதிகள் கொண்டிருந்தது.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்:
1. இந்திய அரசியலமைப்பு உலகிலேயே நீளமான மற்றும் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு.
2. பகுதி நெகிழும் நெகிழா தன்மை (Partly Flexible and Partly Rigid) கொண்டது?
3. இதில் சில பிரிவுகளை 2,3,4 போன்றவற்றை சாதாரணமாக திருத்தி விடலாம்.
4. சில பிரிவுகளை 52,63 போன்றவற்றை பிரிவு 368ன் சிறப்பு திருத்தத்தின் படி கையாள வேண்டும். எனவே, இது பகுதி நெகிழும் நெகிழா தன்மையுடையது.
5. இது அரைகுறை கூட்டாட்சி (Quazi Federal) எனப்படுகிறது.
• அரைக் கூட்டாட்சி என்பது கூட்டாட்சி முறை சாராமல் ஒற்றையாட்சி முறையையும் சாராமல் (Unitory) இரண்டும் கலந்த முறையில் உள்ளது.
6. நாடாளுமன்ற முறை (Parliamentary Type)
7. இரு அவைகள் (Bicameralism) லோக் சபா, ராஜ்ய சபா கொண்டது.
8. நீதித்துறை மேலாண்மை (Superemacy of Constitution) இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்
9. வயது வந்தோர் வாக்குரிமை
18 வயது வந்தோர் ஓட்டுப் போட 61வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் வழி வகுத்தது.
10. அடிப்படை உரிமைகள் (Fundamental Rigihts)
• இது பகுதி IIIல் அமைந்துள்ளது.
11. வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles of State Policy)
12. ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship)
13. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
• இது பகுதி IV ‘A’ ல் Art 51 ‘A’ 42வது சட்டத் திருத்தம் 1976ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
• தற்போது 11 அடிப்படைக் கடமைகள்
• இது ரஷ்ய அரசியலமைப்பிலிருந்து கொண்டு வரப்பட்டது.
14. சிறப்பான முகப்புரை (The Preamble)
• இது இந்திய அரசியலமைப்பின் சாவி எனப்படுகிறது.
• இந்தியாவை, இறைமையுடைய சம தர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசு எனக் குறிப்பிடுகிறது.
• SSSDR SOVERIGN SOCIALIST SECULAR DEMACRATIC REPUBLIC என இந்தியாவை குறிப்பிடுகிறது.
• முகப்புரை ஒரே ஒரு முறை திருத்தப்பட்டுள்ளது.
• 1976ம் ஆண்டு 42வது சட்டத் திருத்தத்தின் மூலம் சமதர்ம (Socialist) சமயச் சார்பற்ற (Secular) ஒற்றுமை & ஒருமைப்பாடு Unity & Integrity ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
• முகப்புரை கருத்து (Idea) அமெரிக்க அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது. முகப்புரை மொழி (Language of the Preamble)
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் முக்கிய அம்சங்கள் பெறப்பட்ட நாடுகள்:
1. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) அமெரிக்கா.
2. முகப்புரை (Preamble) அமெரிக்கா.
3.நீதிபதிகள் பதவி நீக்கம் (Removal of judges of SC - HC) அமெரிக்கா. 4.தனித்தியங்கும் நீதித்துறை () அமெரிக்கா.
5.நீதிப்புனராய்வு (Judicial Review) அமெரிக்கா.
6. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) ரஷ்யா.
7.ஐந்தாண்டுத் திட்டம் (Five Year Plan) ரஷ்யா.
8.வழிகாட்டு நெறிமுறைகள் (DPSP) அயர்லாந்து.
9. ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் (Nomination of Rajyasabha Member) அயர்லாந்து.
10. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை (Method of election of the president) அயர்லாந்து.
11.பாராளுமன்ற முறை (Parlimentary Type) இங்கிலாந்து.
12. சட்டத்தின் ஆட்சி (Rule of Law) இங்கிலாந்து.
13.ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) இங்கிலாந்து.
14. கீழ் சபைக்கு அதிக அதிகாரம் (Lower house more powerful) இங்கிலாந்து.
15. பாராளுமன்ற இரு அவை (Bicameral Parliament) இங்கிலாந்து.
16.மக்களவை தலைவர் (Speaker in the Lok Sabha) இங்கிலாந்து.
17.கூட்டாட்சி முறை (Federal System) கனடா
18. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து ஜெர்மன்.
19. பொதுப்பட்டியல் (Concurrent List) ஆஸ்திரேலியா.
20.முகப்புரையின் மொழி (Language of the Preamble) ஆஸ்திரேலியா.
21.மத்திய மாநில உறவுகள் (Centre State Relations) ஆஸ்திரேலியா
22.அரசியலமைப்பு சட்ட திருத்தம் (Amendment of Constitution) தென் ஆப்பிரிக்கா.
இந்திய அரசாங்கச்சட்டம் 1935:
• தற்போதைய அரசியலமைப்பு 75% 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்க சட்டத்தின் மறுபதிப்பு.
• நெருக்கடி நிலை
• அரசு நிர்வாக அமைப்பு முறை
• ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தோற்றம்.
• 1946 செப்டம்பர் 2ல் இடைக்கால அரசு நேரு தலைமையில் அமைக்கப்பட்டது.
• இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி பெயர் துணை குடியரசுத் தலைவர்,
• ஏனெனில், வைசிராய் அமைச்சரவையின் தலைவராக அப்போதும் தொடர்ந்தார்.
• இடைக்கால அரசில் நேரு வெளியுறவுத்துறை, காமன் வெல்த் உறவுகள் துறைகளைக் கவனித்தார்.
• இடைக்கால அரசில் கல்வி அமைச்சர் சி.ராஜாஜி, சட்டம்- ஜோகிந்தர்நாத் மண்டல்.
• பிரிட்டிஷ் இந்தியாவில் பட்ஜெட் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1860.
• இந்திய விடுதலை மசோதா பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய நாள் ஜூலை 4, 1947.
• அரசு ஒப்புதல் கிடைத்தது. ஜூலை 18, 1947
• இந்திய விடுதலை சட்டம் நடைமுறைக்கு வந்தது ஆகஸ்ட் 15, 1947.
சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 உற்ப்பினர்கள்:
1. ஜவர்கலால் நேரு பிரதமர் (ம) வெளியுறவு
2. சர்தார் வல்லபாய் பட்டேல் உள்துறை (ம) தகவல் தொடர்பு.
3. டாக்டர் ராஜேந்திர பிரசாத் உணவு.
4. மௌலானா அபுல்கலாம் ஆஷாத் கல்வி.
5. டாக்டர் ஜான் மத்தாய் ரயில்வே.
6. ஆர்.கே. சண்முகம் செட்டி நிதி.
7. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டம்.
8. ஜெகஜீவன் ராம் தொழிலாளர்.
9. சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்பு
10. சி.எஸ்.பாபா வணிகம்
11. ராஜ்குமாரி அம்ரித் கௌர் சுகாதாரம்.
12. டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி தொழிலாளர்
13. வி.என்.காட்கில் சுரங்கம்.

1 comment:

Unknown said...

சூப்பர்

Post a Comment