Friday, July 11, 2014

உலகின் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு அதிசயங்கள்



 '7 wonders of the world'. உலக அதியசங்களாக கருதப்படும் புதிய ஏழு அதிசயங்கள் பற்றிய சிறு குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது.
சிச்சென் இட்ஷா (கிபி 800 -க்கு முந்தையது), யுகாட்டன் தீபகற்பம்மெக்சிகோ
chichenitza-pyramid
 சிச்சென் இட்ஷா என்பதுபண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல்மற்றும் பொருளாதார மையமாக விளங்கிய புகழ் மிக்க கோவில்நகரமாகும்குக்குல்கானுடைய பிரமிட்சாக் மூல் கோவில்ஆயிரம்தூண் மகால்கைதிகள் விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறுஅமைப்புகள்கட்டிடக் கலைக்கும் வடிவமைப்புக்கும் அவர்கள்காட்டிய அதீத ஈடுபாட்டை வெளிக்காட்டும் வகையில் இன்றும் காணமுடிகிறதுஇந்த கடைசி பிரமிட்மாயன் நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.

கிறிஸ்து மீட்பர் (1931), ரியோ-டி-ஜெனிரோபிரேசில்
christ-redeemerரியோ-டி-ஜெனிரோ நகரை பார்க்கும் வகையில் அமைந்தகார்கோவடோ மலை மீது, 38 மீட்டர் உயரத்தில் கிறிஸ்துவின்இந்த சிலை உள்ளதுபிரேசில் நாட்டின் ஹைட்டர் டா சில்வாகோஸ்டா (Heitor da Silva Costa) என்பவரால் வடிவமைக்கப்பட்டு,பால் லாண்டோவ்ஸ்கி (Paul Landowski) என்ற பிரஞ்சு சிற்பியால்உருவாக்கப்பட்ட இச்சிலைஉலகெங்கும் நன்கு அறியப்பட்ட நினவுச்சின்னமாகும்.உருவாக்க ஐந்து ஆண்டுகள் ஆன இச்சிலை, 12, அக்டோபர் 1931 அன்று திறந்துவைக்கப்பட்டதுவந்தாரை வரவேற்கும் பிரேசில் மக்களின் விருந்தோம்பலுக்கும்,ரியோ-டி-ஜெனிரோ நகருக்கும் அடையாளச் சின்னமாக இச்சிலை விளங்குகிறது.

ரோமக் கேளிக்கைக் கூடம் (கிபி 70-82), ரோம் நகரம்இத்தாலி

the-colosseumவெற்றி பெற்ற படையணியினர் மற்றும் ரோமசாம்ராஜ்ஜியத்தை பெருமைப்படுத்தும் விதமாகரோம் நகரமையத்தில் இந்த பிரசித்தி பெற்ற நடுவட்டரங்கம்நிர்மாணிக்கப்பட்டதுஇதன் வடிவமைப்புகாலத்தை கடந்து, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் வடிவமைக்கப்படும் நவீனவிளையாட்டரங்க வடிவமைப்புக்கு அடிப்படையாகஅதனைப்பிரதிபலிப்பதாக இருக்கிறதுபார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகஇங்குநடைபெற்ற மிகக் கொடுமையான பல சண்டைகள் மற்றும் விளையாட்டுக்களைப்பற்றி இன்று நாம் புத்தகங்கள்படங்கள் மூலம் அறிகிறோம்.

தாஜ்மகால், (கிபி 1630)
taj-mahalமறைந்த காதல் மனைவியின் நினைவை போற்றும் வகையில்,முகலாயப் பேரரசின் ஐந்தாம் பேரரசர் ஷாஜகான் உத்தரவுப்படி,இந்த பிரமாண்டமான மசூதி கட்டப்பட்டதுஇந்தியாவின்முகலாய கட்டிடக்கலையின் மகுடமாக விளங்கும் தாஜ்மகால்,நன்கு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் மத்தியில்வெள்ளைசலவைக்கற்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுஇறுதியில் கைது செய்யபட்டுசிறையிடப்பட்ட பேரரசர்தன்னுடைய சிறிய சிறைக்கூடத்தின் ஜன்னல் வழியாகமட்டுமே தாஜ்மகாலைக் காண முடிந்ததாக கூறப்படுகிறது.

சீனப் பெருஞ்சுவர் (கிமு 230 மற்றும் கிபி 1368-1644), சீனா
great-wall-of-chinaஏற்கனவே இருந்த கோட்டை அமைப்பை வலுப்படுத்தவும்,அடிக்கடி தொடர்ந்த மங்கோலிய படையெடுப்பிலிருந்துபாதுகாத்துக் கொள்ளவும் சீனப் பெருங்சுவர்நிர்மாணிக்கப்பட்டதுமனிதனால் கட்டப்பட்டஅமைப்புகளிலேயே மிகப்பெரிய இச்சுவர்,விண்வெளியிலிருந்து காணக்கூடிய ஒரே அமைப்பு என்றும்கூறப்படுகிறது.. இந்த சாதனைச் சுவரை நிர்மாணிப்பதில்பலர் தங்களுடையஉயிரையும் தந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

மச்சு பிச்சு (கிபி 1460-1470), பெரு
machu-picchuமச்சு பிச்சு (பழைய மலைஎன்று அழைக்கப்பட்ட மேகம்தவழும் மலை மீதுபேரரசர் பச்சகுட்டிக் (Emperor Pachacútec)என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு நகரைநிர்மாணித்தார்இந்த நகரம் ஆண்டஸ் பீடபூமிக்கு மேலே பாதிவழியில்அமேசான் காடுகளுக்கு மத்தியில்உருபம்பா நதிக்குமேல் உள்ளதுசின்னம்மை நோய் தொற்றால் இன்கா மக்களால் இந்நகரம் காலிசெய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறதுஸ்பானியரால் இன்கா பேரரசுதோற்கடிக்கப்பட்ட பிறகுஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக இந்நகரம் காணாமல்போனதாக கருதப்பட்டது. 1911-ல் ஹிரம் பிங்கம் (Hiram Bingham) என்பவரால் இது மீண்டும்கண்டுபிடிக்கப்பட்டது.

பெட்ரா (கிமு 9- கிபி 40), ஜோர்டான்
petra-the-treasuryஅரேபியன் பாலைவனத்தின் ஓரத்தில்நார்பாட்டியன் சாம்ராஜ்ஜியத்தின்(Nabataean empire) அரசர் நான்காம் அரிட்டாஸ் -ன் (King Aretas IV கிமு 9 முதல்கிபி 40 வரைதலைநகராக பெட்ரா நகர் விளங்கியதுநீர் நிர்வாகத்தில்நிபுணர்களாக விளங்கிய நார்பாட்டியர்கள்தங்கள் நகரில் நீர்வழித்தடங்களையும்சேமிப்புக்களையும் நிர்மாணித்திருந்தார்கள்கிரீக்-ரோமன் மாதிரிகள் அடிப்படையில் அமைந்த அரங்கம், 4000பார்வையாளர்கள் அமரக் கூடியதாக இருந்ததுஎல்-டீர் மடத்தில் (El-Deir Monastery)அமைந்துள்ள பெட்ரா அரண்மனையின் கல்லறைகள், 42 மீட்டர் உயரமுள்ளஹெலினியக் கோவிலின் முன்புறம் (Hellenistic temple facade) ஆகியவை மத்தியக் கிழக்குநாகரீகத்தின் அடையாளமாக இன்றும் காணக் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment