Monday, July 14, 2014

எண்ணும்மை,உம்மைத்தொகை,உரிச்சொற்றொடர்

 எண்ணும்மை:

        கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்'  எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(எ.கா)

         அல்லும் பகலும்
         காதலும் கற்பும்
         அவனும் இவனும்

 சிறப்பு எண்ணும்மை

சொற்கள் “உடனும்” என முடியும்.
(எ.கா) வானுடனும், கடவுளுடனும்

உயர்வு சிறப்பும்மை

சொற்கள் “னினும்” என்று முடியும்.
(எ.கா) வானினும், ஊனினும், தேனினும


உம்மைத்தொகை:

          கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

(எ.கா)

          அவன் இவன்
           இரவு பகல்
           இராப்பகல்

            எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்.அதுவே மரைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

உரிச்சொற்றொடர்:

           ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

 (எ.கா)

           மாநகரம்

   அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம்.இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்..

                                              1.சால
                                              2.உறு
                                              3.தவ
                                              4.நனி
                                              5.கூர்
                                              6.கழி
                                              7.கடி
                                              8.மா
                                              9.தட

        மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக்கூடிய சொற்கள்.எனவே கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் ஆரம்பிக்கும்..

(எ.கா)
    
   தடக்கை
   தவப்பயன்
   உறுபடை


அன்மொழித்தொகை

       வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை,உம்மைத்தொகை ஆகிய ஐந்து தொகைகளும் தொடருக்கு புறத்தே அமையாமல்மறைந்திருந்து பொருள் தருமாயின் அது அன்மொழித் தொகையாகும்.

(எ.கா) பொற்றொடி வந்தாள்.
(பொன்னால் செளிணியப்பட்ட வளையல்)
பூங்குழலி வந்தாள், சேயிழைக் கணவன்
தேன்மொழி நகைத்தாள், இன்மொழி சொன்னான்
சுடுகதிர் எழுந்தான்்

No comments:

Post a Comment