Monday, July 14, 2014

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல்


1. தன் வினை வாக்கியம்

               ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா) செல்வி பாடம் கற்றாள்.

             முருகன் திருந்தினான்

  2. பிறவினை வாக்கியம்

               ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.

              ‘பித்து’ ‘வித்து’ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) ஆசிரியை பாடம் கற்பித்தார்
               அவன் திருத்தினான்

தன்வினை                                                      பிறவினை
திருந்தினான்                                                   திருத்தினான்
உருண்டான்                                                    உருட்டினான்
பயின்றான்                                                       பயிற்றுவித்தான்
பெருகு                                                               பெருக்கு
செய்                                                                     செய்வி
வாடு                                                                    வாட்டு
நடந்தான்                                                            நடத்தினான்
சேர்கிறேன்                                                       சேர்க்கிறேன்
ஆடினாள்                                                           ஆட்டுவித்தாள்
பாடினான்                                                           பாடுவித்தான்
கற்றார்                                                                 கற்பித்தார்
தேடினான்                                                          தேடுவித்தான்
உண்டாள்                                                            உண்பித்தாள்
அடங்குவது                                                       அடக்குவது

3.செய்வினை வாக்கியம்

             ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
(எ.கா) பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.

              தச்சன் நாற்காலியைச் செய்தான்
             அவள் மாலையைத் தொடுத்தாள்
              ராதா பொம்மையைச் செய்தாள்

4. செயப்பாட்டு வினை வாக்கியம்

             செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம்
அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.

(எ.கா) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
           (செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)

            தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..

No comments:

Post a Comment