Wednesday, July 2, 2014

வேதியியல்

நீர்ம நிலையிலுள்ள உலோகம் பாதரசம்.

தகடாக மாறும் தன்மை அதிகம் கொண்டது தங்கம்.

பூமியின் மேற்பரப்பில் அதிகம் காணப்படுவது அலுமினியம்.

மின்கடத்தும் திறன் அதிகம் கொண்ட உலோகம் வெள்ளி.

மின்சாரக் கம்பியாக அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம் தாமிரம்.

மின்னிழை செய்யப் பயன்படும் உலோகம் டங்ஸ்டன்.

நம் உடம்பிலுள்ள செல் உள்திரவத்தில் அதிகமுள்ள உலோகம் பொட்டாசியம்.

செல்வெளி திரவத்தில் அதிகமுள்ளது சோடியம்.

ஹீமோகுளோபினில் உள்ளது இரும்பு.

பச்சையத்தில் காணப்படும் உலோகம் மெக்னீசியம்.

இதயம் சுருங்குவதற்குத் தேவையான உலோக அயனி கால்சியம்.

இதயம் விரிவடைவதற்கு தேவையான உலோக அயனி பொட்டாசியம்.

மண்ணெண்ணெய்க்கு அடியில் வைத்துப் பாதுகாக்கப்படுவது சோடியம்.

தங்க நகைகளில் KD916 என்று குறிக்கப்பட்டு இருப்பதில் KD என்பது காட்மியம்.

அணுக்கரு உலைகளில் கட்டுப்பாட்டுக் கழியாகப் பயன்படும் உலோகம் காட்மியம்.

வனஸ்பதி தயாரிப்பில் வினைவேக மாற்றியாக (Catalyst) பயன்படும் உலோகம் நிக்கல்.

X கதிர்கள் ஊடுருவாத உலோகம் காரீயம்.

பேட்டரிகளில் பயன்படுவது காரீயம்.

மிகவும் லேசான உலோகம் லித்தியம்.

மிகவும் கனமானது ஆஸ்மியம்.

அணுசக்தி உலையில் எரிபொருளாகப் பயன்படுவது யுரேனியம்.

இரும்புக்கு முலாம் பூசப் பயன்படுவது துத்தநாகம்.

அணுவியல் கடிகாரங்களில் பயன்படுவது சீசியம்.

தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை நாணய உலோகங்கள்.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுவது கோபால்ட்.

நீர்ம நிலையிலுள்ள ஒரே அலோகம் புரோமின்.

ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது சல்ஃபர்.

நீருக்கடியில் வைத்துப் பாதுகாக்கப்படுவது பாஸ்பரஸ்.

கம்ப்யூட்டர் மெமரி சிப்ஸில் பயன்படுவது சிலிகான்.

டிரான்சிஸ்டரில் குறைகடத்திகளாக (Semiconductors) பயன்படுபவை சிலிகான், ஜெர்மானியம்.

பளபளப்பான அலோகங்கள்: அயோடின், கிராபைட்.

தாவர எண்ணெய்களை வனஸ்பதியாக மாற்றுவது ஹைட்ரஜன்.

வைரம், கிராபைட் எனும் புறவேற்றுமை வடிவங்களைக் கொண்ட அலோகம் கார்பன்.

கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரே ஹாலஜன் ஆஸ்டடைன் (As).

மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம் கிராபைட்.

பூமி ஓட்டில் அதிகம் காணப்படுவது ஆக்ஸிஜன்.

ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக பூமி ஓட்டில் அதிகமுள்ள அலோகம் சிலிகான்.

நேர்மின்வாயுவில் (Anode) விடுபடும் ஒரே அலோகம் ஹைட்ரஜன்.

ஜெராக்ஸ் இயந்திரத்தில் பயன்படுவது செலினியம்.

தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுவது குளோரின்.

மிகவும் லேசான தனிமம் ஹைட்ரஜன்.

செயற்கை பெட்ரோல் தயாரிக்க உதவுவது ஹைட்ரஜன்.

தொல்பொருட்களின் வயதை கணக்கிட உதவுவது கார்பன்.

ஸ்டார்ச்சுடன் நீலநிறத்தைக் கொடுப்பது அயோடின்.

மைக்காவின் தாது மஸ்கோவைட்.

மெக்னீசியத்தின் ஹாலைடு தாது கமலைட் (KCl.MgCl2.6H2O).

வெள்ளியின் ஹாலைடு தாது ஹார்ன்சில்வர் (AgCl), குளோராகைரைட்

செலினியத்தின் தாதுக்கள் யுக்கரைட் (Eucariote), பெர்சிலனைட் (Berzelianite).

தாமிரத்தின் சல்பைடு தாது தாமிர பைரைட் (CuFeS2).

மெக்னீசியத்தின் கார்பனேட் தாதுக்கள் டோலமைட் (CaCo3.MgCo3), மேக்னஸைட் (MgCo3).

வெள்ளியின் சல்பைடு தாது அர்ஜென்டைட் (Ag2S).

துத்தநாகத்தின் சல்பைடு தாது துத்தநாக பிளண்ட் (Zn2S).

இரும்பின் ஆக்ஸைடு தாது ஹேமடைட் (Fe2O3), மேக்னடைட் (Fe2O4).

இரும்பின் சல்பைடு தாது இரும்பு பைரைட் (FeS2).

அலுமினியத்தின் ஆக்ஸைடு தாது பாக்ஸைட் (Al2O3 2H2O).

டைட்டானியத்தின் ஆக்ஸைடு தாது ருடைல் (TiO2).

பாதரசத்தின் சல்பைடு தாது சின்னபார் (HgS).

காரீயத்தின் சல்பைடு தாது கலீனா (Pbs).

கால்சியத்தின் கார்பனேட் தாது லைம்ஸ்டோன் (CaCo3).

துத்தநாகத்தின் கார்பனேட் தாது காலமைன் (ZnCo3).

சோடியத்தின் ஹாலைடு தாது பாறை உப்பு (NaCl).

கால்சியத்தின் சல்பேட் தாது ஜிப்சம் (CaSo4.2H2O).

மெக்னீசியத்தின் சல்பேட் தாது எப்சம் (MgSo4.7H2O).

அலுமினியத்தின் ஹாலைடு தாது கிரீயோலைட் (Na2AlF6).

கால்சியத்தின் பாஸ்பேட் தாது பாஸ்போரைட் (Ca3(Po4)2).

கால்சியத்தின் ஹாலைடு தாது புளூர்ஸ்பார் (CaF2)

இரும்பின் கார்பனேட் தாது ஸிடரைட் (FeCo3).

தாமிரத்தின் கார்பனேட் தாது மாலகைட் (CuCo3.Cu(OH)2).

தேரியத்தின் தாது மோனோஸைட்.

Gas பலூன்களில் நிரப்பப்படும் வாயு ஹீலியம்.

நீர் வாயுவில் காணப்படும் வாயுக்கள்: ஹைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு.

உற்பத்தி வாயுவில் (Producer Gas) காணப்படும் வாயுக்கள்: நைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு.

திரவ பெட்ரோலிய வாயுவில் (LPG) காணப்படும் வாயுக்கள் பியூட்டேன், புரப்பேன், பியூட்டிலின், ஐஸோபியூட்டிலின்.

இயற்கை எரிவாயுவில் (CNG) காணப்படும் வாயுக்கள்: கார்பன்டைஆக்ஸைடு, ஹைட்ரஜன்.

சாண எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள்: மீத்தேன், கார்பன்டைஆக்ஸைடு.

நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமான வாயு மீத்தேன்.

சதுப்பு நில வாயு (Marsh Gas) மீத்தேன்.

போபாலில் கசிந்த விஷ வாயு மீதைல் ஐஸோசயனைடு.

ஜப்பான் சுரங்கப்பாதை விபத்துக்குக் காரணமான விஷ வாயு சரீன் (Sareen).

உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விஷ வாயு மஸ்டர்ட் வாயு.

ஓஸோனில் ஓட்டை விழக் காரணமானவை குளோரோ புளூரோ கார்பன்கள்.பூமிக்கு வரும் புறஊதாக் கதிர்களைத் தடுப்பது ஓஸோன்.


அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் சல்பர் - டை - ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு.

சிரிப்பூட்டும் வாயு நைட்ரஸ் ஆக்ஸைடு.

வளிமண்டலத்தில் அதிகமுள்ளது நைட்ரஜன்.

வாகனப் புகையில் அதிகமுள்ளது கார்பன் மோனாக்ஸைடு.

தீயணைக்கப் பயன்படுவது கார்பன் - டை - ஆக்ஸைடு.

தீயணைப்புக் கருவியில் இருப்பது சோடியம்பைகார்பனேட் கரைசல்.

சோடா பானங்களில் அதிகமுள்ளது கார்பன் - டை - ஆக்ஸைடு.

உலர்பனிக்கட்டி எனப்படுவது திட கார்பன் - டை - ஆக்ஸைடு.

பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது எத்திலீன்.

அழுகிய முட்டை மணமுள்ள வாயு ஹைட்ரஜன் பெராக்ஸைடு.

அழுகிய மீன் மணமுள்ளது பாஸ்பீன்.

மழை நீரின் PH அளவு 5.6க்குக் குறைவாக இருப்பின், அது அமில மழை.

ஹைட்ரஜன் அயனிகளைத் தரவல்லவை அமிலங்கள்.

அமில மழையில் காணப்படும் அமிலங்கள் சல்பியூரிக், நைட்ரிக்.

'வேதிப்பொருட்களின் அரசன்' சல்பியூரிக் அமிலம்.

'விட்ரியால் எண்ணெய்' எனப்படுவது சல்பியூரிக் அமிலம்.

'வலிமையான திரவம்': நைட்ரிக் அமிலம்.

எறும்பு கடிக்கும்போது, நம் உடம்பினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.

வினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.

கார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.

ஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியைக் கரைக்கும்.

மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் ராஜ திராவகம்.

ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.

எலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.

புளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.

ஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.

மயக்க மருந்தாக உதவுவது பார்பியூச்சுரிக் அமிலம்.

நைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.

பினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.

பீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.

கலோரிமீட்டரில் நியமமாக (Standard) பயன்படுவது பென்ஸாயிக் அமிலம்.

அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்.

சாதாரண உப்பு: சோடியம் குளோரைடு.

சமையல் சோடா: சோடியம் பைகார்பனேட்.

சலவை சோடா: சோடியம் கார்பனேட்.

பிளீச்சிங் பவுடர்: கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரைட்.

ஜிப்சம்: கால்சியம் சல்பேட்.

எப்சம்: மெக்னீசியம் சல்பேட்.

மயில்துத்தம்: தாமிர சல்பேட்.

பச்சை துத்தம்: பெர்ரஸ் சல்பேட்.

வெண்துத்தம்: துத்தநாக சல்பேட்.

காஸ்டிக் சோடா: சோடியம் ஹைட்ராக்ஸைடு.

காஸ்டிக் பொட்டாஷ்: பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு.

சாக்பீஸ்: கால்சியம் கார்பனேட்.

சுட்ட சுண்ணாம்பு: கால்சியம் ஆக்ஸைடு.

நீர்த்த சுண்ணாம்பு: கால்சியம் ஹைட்ராக்ஸைடு.

கார்போரண்டம் :சிலிகான் கார்பைடு.

மணல்: சிலிகான் - டை - ஆக்ஸைடு.

டால்க் (Talc): மெக்னீசியம் சிலிகேட்.

படிகாரம்: பொட்டாசியம் அலுமினியம் சிலிகேட்.

டார்டார் எமட்டிக்: பொட்டாசியம் ஆண்டிமனி டார்டரேட்.

சிலி சால்ட் பீட்டர்: சோடியம் நைட்ரேட்.

இந்தியன் சால்ட் பீட்டர்: பொட்டாசியம் நைட்ரேட்.

தூய்மையான தங்கம் 24 காரட் ஆகும்.

ஆபரணத் தங்கம் என்பது 22 காரட்.

18 காரட் தங்கத்தில் 75% மட்டுமே தங்கம் உள்ளது.

ஒட்டாத தன்மைகொண்ட சமையற்கலன்களின் உட்புறம் பூசப்படுவது Teflon .

Teflon என்பது டெட்ரா புளூரோ எத்திலின் என்பதன் சுருக்கம்.

Teflon னின் உராய்வு குணகம் (Cofficient of Frictio) பூஜ்யம்.

பாலித்தீன் என்பது எத்திலீன் பாலிமர் ஆகும்.

புகையிலை உலராமல் பாதுகாக்க கிளிசரால் பயன்படுகிறது.

துருப்பிடிக்காத எஃகில் உள்ளவை: இரும்பு, நிக்கல், குரோமியம்.

தாமிரமும் துத்தநாகமும் கலந்த உலோகக் கலவை பித்தளை.

தாமிரமும் வெள்ளீயமும் சேர்ந்தால் கிடைப்பது வெண்கலம்.

பாதரசம் வெள்ளியோடு சேருவதால் கிடைக்கும் வெள்ளி ரசக்கலவை, பல் இடைவெளிகளை அடைக்கப் பயன்படுகிறது.

வைரம் என்பது கார்பனின் புறவேற்றுமை வடிவம் (Allotrope).

வைரத்தில் கார்பன் அணுக்கள் மிக நெருக்கமாக உள்ளன.

போரன் கார்பைடை (B4C) தவிர, வேறெந்தப் பொருளும் வைரத்தின்மீது கீறலை ஏற்படுத்த முடியாது.

உலகில் வைரம் அதிகமாகக் கிடைப்பது தென்னாப்பிரிக்காவில்.

இந்தியாவில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 'பன்னா' என்ற இடத்தில் வைரச் சுரங்கம் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வைரம் குல்லிமேன் (Culliman) வைரமாகும்.

ஆண்ட்டிமனி: தனிமையான எதிரி.

ஆர்கான்: சோம்பேறி.

நிக்கல்: சாத்தானின் தாமிரம்.

ப்ரஸியோடைமியம் (Praseodymium ): பச்சை இரட்டையர்.

சூரியக் கடவுள் பெயரால் ஹீலியமும் (Helios - Sun God) சந்திரக் கடவுள் பெயரால் செலினியமும் (Selenos - Moon God) அழைக்கப்படுகின்றன.

கிரேக்க புராண கதாபாத்திரங்களான தந்தை மகன் நினைவாகப் பெயர் பெற்ற தனிமங்கள் டான்டலம், நியோபியம்.

மேடம் க்யூரி கண்டுபிடித்த தனிமம், அவரது நாடான போலந்தின் நினைவாக போலோனியம் என்று பெயர் பெற்றது.

மார்குரைட் பெரே என்ற பெண் விஞ்ஞானி கண்டறிந்த தனிமம், அவரது நாடான பிரான்ஸ் நினைவாக பிரான்ஸியம் எனப்படுகிறது.

காலியம், பிரான்ஸியம் ஆகிய இரு தனிமங்களும் பிரான்ஸ் நாட்டின் பெயரைப் பெற்றுள்ளன. ‘Gaul’ என்பது பிரான்ஸின் பழைய பெயர்.

அணு எண் 101 கொண்ட தனிமம், தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மெண்டலீப் பெயரால் மெண்டலீவியம் எனப்படுகிறது.

அணு எண் 99 கொண்ட தனிமத்தை விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன் பெயரால் ஐன்ஸ்டீனியம் என்கிறோம்.

அணு எண் 100 கொண்ட தனிமத்தை விஞ்ஞானி ஹென்றிகோ ஃபெர்மி நினைவாக ஃபெர்மியம் என்கிறோம்.

No comments:

Post a Comment