உலகின் ஆழமான கடல் பகுதி எது ?
உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் வடக்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ள மரியானா அகழி (Mariana Trench) ஆகும்.
பட உதவி: விக்கிபீடியா
எவ்வளவு ஆழம் ?
31,614 அடிகள் அதாவது 9,636 மீட்டர் என்று 1872-1876 -ல் சேலஞ்சர் ஆய்வுப்பயணத்தின் போது அறிவிக்கப்பட்டது.
பின்னர் சேலஞ்சர் இரண்டாவது பயணத்தின்போது எதிரிலொலிமானியை பயன்படுத்தி துல்லியமாக அளந்து 10,900 மீட்டர்கள், 35,760 அடிகள் என அறிவிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் வித்தியாசு (Vityaz) எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது
இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ஜப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைக்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது.
நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் இந்த விபர்ங்கள் இதுவரை மனிதன் அறிவுக்கு உட்பட்டு கண்டுபிடித்ததே ஆகும். கடலில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மனிதனாலோ, அவன் கண்டுபிடித்த உபகரணங்களாலோ செல்ல முடியவில்லை என்பதே உண்மை. காரணம் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெளிச்சம் உட்புக முடியாததாலும், நீரின் அழுத்தம் குறைவதாலும் ஏற்படும் பாதிப்புக்களை களைய இன்னும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment