Saturday, July 12, 2014

பொதுத் தமிழ்

* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று தொ.பொ.மீ அவர்களால் பாராட்டப்பட்டவர்?
டாக்டர் மு.வரதராசன்

* டாக்டர் மு.வ. அவர்களின் முதல் நாவல் எது?
பாவை

* மணிபல்லவம் என்ற நூலை இயற்றியவர் யார்?
நா.பார்த்தசாரதி

* ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நூலை இயற்றியவர்?
தோப்பில் முகமது மீரான்

* தமிழில் தோன்றிய இரண்டாவது நாவல் எது?
கமலாம்பாள் சரித்திரம்

* நாவல் துறையின் தாயகமாக விளங்கும் நாடு எது?
இத்தாலி

* கல்கி அவர்கள் படைத்த முதல் வரலாற்று நாவலின் பெயர்?
பார்த்திபன் கனவு

* பாலகுமாரனின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற நாவல்?
மெர்க்குரிப் பூக்கள்

* டம்பாசாரி விலாசம் என்னும் நாடகத்தின் ஆசிரியர்?
காசி விசுவநாத முதலியார்

* கலைக்கரசு என்று போற்றப்படும் கலை எது?
நாடகக்கலை

* நந்தனார் சரித்திரம் என்னும் நாடகத்தை இயற்றியவர்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?
பம்மல் சம்மந்த முதலியார்

* இந்தியா இதழைத் தொடங்கியவர் யார்?
பாரதியார்

* சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியாகிய லெக்சிகனை உருவாக்கியவர்?
எஸ். வையாபுரிப் பிள்ளை

* ஞானசாகரம் என்ற இதழை நடத்தி வந்தவர்?
மறைமலையடிகள்

* ஒரு மனிதனின் கதை என்ற புதினத்தை எழுதியவர்?
சிவசங்கரி

* சோழ நிலா என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர்?
மு.மேத்தா

* கட்டமொம்மு கூத்து நாடகத்தை இயற்றியவர் யார்?
அடைக்கலபுரம் சிதம்பர சுவாமி

* சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
மறைமலையடிகள்

* மகேந்திவர்மன் வடமொழியில் எழுதிய நாடக நூல் எது?
மத்தவிலாசப் பிரகடனம்

* பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
கரிகாற்சோழன்

* தமிழகத்தின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர்?
அநுத்தமா

* ஊசிகள் என்ற புதுக்கவிதைத் தொகுதியை எழுதியவர்?
மீரா

* காந்தி மகான் கதையை இயற்றியவர் யார்?
கொத்தமங்கலம் சுப்பு

* இராவண காவியத்தை எழுதியவர் யார்?
புலவர் குழந்தை

* தண்ணீர் தண்ணீர் நாடகத்தின் ஆசிரியர் யார்?
கோமல் சுமாமிநாதன்

* மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர்?
பரிதிமாற் கலைஞர்

* காந்திபுராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
அசலாம்பிகை அம்மையார்

* காந்தியக் கவிஞர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
இராமலிங்கம் பிள்ளை

* குயில் என்ற கவிதை இதழைத் தொடங்கியவர் யார்?
பாரதிதாசன்

* தேன்மழை என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
கவிஞர் சுரதா

* புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?
பாரதியார்

* கம்பர் இயற்றிய இராமாயணம் எத்தனை காண்டங்கள் உடையது?
ஆறு காண்டங்கள்

* கோவலனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
பரதன்

* நாடகக் கணிகை என அழைக்கப்படுபவர்?
மாதவி

* சிலப்பதிகாரத்தை சிறப்பதிகாரம் என குறிப்பிடுபவர்?
டாக்டர் உ.வே.சாமிநாதையர்

* ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது?
சிலப்பதிகாரம்

* தமிழில் தோன்றிய முதல் அறநூல் எது?
திருக்குறள்

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
12                                                                                                                                                                                         
* காவியக் கலைஞன் என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படுபவர் யார்?
கம்பர்

* திருவண்ணாமலை புராணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
எல்லப்ப நாவலர்

* பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவன் என்ற சொற்றொடரால் பாராட்டப்படுபவர் யார்?
சேக்கிழார்

* அரிச்சந்திர புராணத்தை இயற்றியவர் யார்?
வீரகவிராயர்

* சிலப்பதிகாரம் அமைந்துள்ள பா வகை எது?
அகவற்பா

* தாண்டக வேந்தர் எனப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர்

* கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் எது?
இராமவதாரம்

* சீவகன் எத்தனை பெண்களை மணந்தான்?
எட்டு

* ஐந்திலக்கணத்திற்கு விளக்கம் கூறிய முதல் இலக்கண நூல் எது?
வீரசோழியம்

* பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார்?
பெரியாழ்வார்

* பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை?
10

* சகலகலாவல்லி மாலை என்ற நூலை இயற்றியவர் யார்?
குமரகுரூபரர்

* நந்தனார் சரித்திரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் என்ன?
மயில்வாகனன்

* சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை?
14

* திருவாடுதிறை ஆதின மடத்தை நிறுவியவர் யார்?
நமச்சிவாய மூர்த்திகள்

* காசி மடத்தை நிறுவியவர் யார்?
குமரகுரூபரர்

* இரட்சண்ய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* எழுத்துச் சீர்திருத்தம் செய்த கிறித்துவர் யார்?
வீரமாமுனிவர்

* சதுரகராதியின் ஆசிரியர் யார்?
வீரமாமுனிவர்

* இராபர்ட் டி நொபிலி அவர்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறார்?
தத்துவப் போதகர்

* கால்டுவெல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அயர்லாந்து

* வீரமாமுனிவர் இயற்றியுள்ள அம்மானை நூல் எது?
திருக்காவலூர்க் கலம்பகம்

* தனது கல்லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று குறிப்பிடச் செய்தவர் யார்?
ஜி.யு.போப்

* புதியதும் பழையதும் என்ற நூலை இயற்றியவர் யார்?
உ.வே.சாமிநாதையர்

* தொல்காப்பியப் பொருளதிகாரம் அல்லது பழந்தமிழர் நாகரிகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
கா.சு.பிள்ளை

* சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி யார் தலைமையில் உருவானது?
எஸ்.வையாபுரி பிள்ளை

* பாரி காதையின் ஆசிரியர்?
இரா.இராகவ ஐயங்கார்

* தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர்?
திரு.வி.க

* பல்லக்கு என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர் யார்?
ரா.கி.ரங்கராஜன்

* புதுமைப்பித்தனின் இயற்பெயர்?
சொ. விருத்தாசலம்

* முதன் முதலாக சிறுகதை இலக்கியம் தோன்றிய இடம்?
அமெரிக்கா

* தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப்படுபவர்?
வ.வே.சு.ஐயர்

* ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலை இயற்றியவர் யார்?
கலைஞர் கருணாநிதி  

No comments:

Post a Comment