Thursday, July 10, 2014

பொது அறிவு

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’. 

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’. 

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ. 

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது. 

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர். 

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை'1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம். 

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி. 

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia! 

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotismஎன்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை. 

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’. 

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’ 

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’ 

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
 என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26. 

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன். 

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர். 

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ்அறிமுகமானார்                                                                                                                                                                                                                                                                                                                                                                                      நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.

* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.

* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.

* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.

* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.

* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.

* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.

* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.

* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.

* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.

வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.

* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.

* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

* ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.

* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.

* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.

* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.
ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.

* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).


* இரவீந்தரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1913-ம் ஆண்டு பெற்றார். 
* திருக்குறள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன். 
* நோபல் பரிசு ஆல்பிரெட் நோபல் என்பவரின் நினைவாக 1901-ம் ஆண்டு முதல் வழங்கப் படுகிறது.
* இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற முதல் நபர் சுல்லி புருடோம்மே.
* பிரபல அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெம்மிங்வே ஆங்கில இலக்கியத்துக்காக 1954-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
* புனைப் பெயர் சூட்டும் பழக்கம் தோன்றிய முதல் நாடு சீனா.
* இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் நாடு ஃபிரான்ஸ் ஆகும்.
* ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் சித்திரப் பாவை.
* தமிழில் வெளியான முதல் செய்தித் தாள் சுதேசமித்திரன் 
* முதன்முதலில் அச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கி.பி.1450. கண்டுபிடித்தவர் ஜான் கூட்டன் பர்க். 
* முதன்முதலில் இங்கிலாந்தில் வெளியான செய்தித்தாள் "கோரண்டோ' என்பதாகும். ஆண்டு 1621.
* முதன்முதலில் இந்தியாவில் வெளியான செய்தித்தாள் "வங்காள கெஜட்' ஆண்டு 1780. 
* தமிழகத்தில் வெளியான முதல் ஆங்கில செய்தித்தாள் "மெட்ராஸ் கூரியர்'. வெளியான ஆண்டு 1785. 
* முதன்முதலில் மும்பையில் வெளியான செய்தித்தாள் "பம்பாய் ஹெரால்டு'. ஆண்டு கி.பி.1789. 
                                                                                                                                                                                                                                                                                                                                                             

No comments:

Post a Comment