தினந்தோறும் வாழ்வில் பயன்படும் சில சேர்மங்கள்
* சலவைத்தூள் அல்லது கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCl2) சலவைத் தொழிலிலும், கிருமிநாசினியாகவும், ஆக்சிஜனேற்றியாகவும் பயன்படுகிறது.
* அயோடோஃபார்ம், குளோரோஃபார்ம் ஆகிய சேர்மங்களைத் தயாரிக்கவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் சலவைத்தூள் பயன்படுகிறது.
* மண்ணின் வேதிப்பெயர் சிலிக்கன் டை ஆக்சைடு (SiO2)
* நீரின் வேதிப்பெயர் சிலிக்கன் டை ஆக்சைடு (H2O)
* சோப்பின் வேதிப்பெயர் சோடியம் பால்மிடேட் (C15H31COONa).
* சர்க்கரையின் வேதிப்பெயர் சுக்ரோஸ் (C12H22O11)
* சலவைத் தூளின் வேதிப்பெயர் கால்சியம் ஆக்சி குளோரைடு (CaOCl2)
* சாதாரண உப்பின் வேதிப்பெயர் சோடியம் குளோரைடு (Nacl)
* பி.வி.சி. பிளாஸ்டிக்கின் வேதிப்பெயர் பாலி வினைல் குளோரைடு.
* சோடியம் பைகார்பனேட் (ரொட்டிச் சோடா) NaHCO3 தீயணைக்கும் கருவியில் பயன்படுவதுடன், வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை நீக்கப் பயன்படுகிறது. மேலும் * சோடியம் பைகார்பனேட் ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்கப் பயன்படுகிறது.
* பேக்கிங் புவடரில் சோடியம் பை கார்பனேட்டும், டார்டாரிக் அமிலமும் உள்ளன. பேக்கிங் பவுடரில் நீரை சேர்க்கும்போது சோடியம் பை கார்பனேட்டும் அமிலமும் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயு உருவாகிறது. கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்போது அவற்றை உப்பச் (மேலெழும்ப வைத்து) மிருதுவாக்குவது கார்பன் டை ஆக்சைடே ஆகும்.
* சோடியம் கார்பனேட் அல்லது சலைவச் சோடா (Na2 Co3) சலவைத் தொழிலில் சலவைச் சோடாவாகப் பயன்படுகிறது. சோடியம் கார்பனேட், வீடுகளில் சுத்தம் செய்யும் பொருளாகவும் பன்படுகிறது. பலவித உலர்ந்த சோப்புப் பவுடர்களில் இது முக்கியப் பகுதிப் பொருளாக உள்ளது. மேலும் கடின நீரை மென்னீராக்கவும், எரிசோடா, போராக்ஸ், கண்ணாடி, சோப்பு போன்ற பல சோடிய சேர்மங்கள் தயாரிக்கவும் காகிதம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) (Nacl) உணவு சயாரிப்பிலும், எரிசோடா, வாஷிங் சோடா, சலவைச் சோடா போன்ற பல சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகவும், ஹைட்ரோகுளோரிக் அமிலம் தயாரிக்கவும், குளோரின் வாயு தயாரிப்பிலும், சோப்பு தயாரிப்பிலும், மிகக்குறைந்த வெப்பநிலையை உருவாக்கும் உறை கலவை (பனிக்கட்டி + சோடியம் குளோரைடு) தயாரிப்பிலும் பயன்படுகிறது.
* மேலும் மீன் இறைச்சி போன்றவற்றைக் கெடாமல் பாதுகாக்கவும் சோடியம் குளோரைடு பயன்படுகிறது.
No comments:
Post a Comment