Wednesday, July 9, 2014

தமிழ் இலக்கணம்


சொற்களும் எழுத்துக்களும்

தமிழ்மொழிப் பதங்கள்:

          தமிழென்ற செம்மொழியின் பதங்களைசொற்களைஇங்குதரப்பட்டிருக்கின்றனதவறேதுமிருப்பின் மின்மடலில் சுட்டுங்கள்.திருத்திக் கொள்ளப்படும்.                                                                                                                                                                                                                                                                                                                                       
  1. நிலைமொழியும் வருமொழியும்
          இரு சொற்களின் புணர்ச்சியில்முதலிலுள்ள சொல்நிலைமொழியெனவும்இரண்டாவதாக வந்து சேரும் சொல்வருமொழியெனவும் அழைக்கப்படும்: -

§  (-ம்)படிப்பது + யாது
இதில் படிப்பது = நிலைமொழியாது =வருமொழி.

  1. பதமும்பகுபதமும்பகாப் பதமும்:-
          ஒரு சொல் அல்லது வார்த்தையை பதமென்றுசொல்கிறோம்அதில் பல்வேறு உறுப்புக்களாக பிரிக்கக்கூடிய சொல் பகுபதம்அப்படி பிரிக்க முடியாத சொல் பகாப்பதம்.: -

§  (-ம்)பகுபதம் - கண்டான் = காண் + ட் + ஆன்,பகாப்பதம் - கல்மண்.

  1. பகுதிவிகுதி என்பது என்ன?:-
          ஒரு சொல்லில் முதலில் இருக்கும் உறுப்பு பகுதிஎனப்படுகிறதுஇதனை முதல்நிலை என்றும் சொல்லலாம்.அதே சொல்லின் இறுதியுறுப்பு விகுதியாகும்இதனைஇறுதிநிலை என்றும் சொல்லலாம்.: -

§  (-ம்)
"
கண்டான்இதனை காண் + ட் + ஆன் எனப்பிரித்தால்
காண் - முதல்நிலைஆன் - இறுதிநிலை.

  1. பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்:-
          உலகிலுள்ள பொருட்களின் பெயர்களைசெயல்களின்பெயர்களைக் கூறுவன எல்லாம் பெயர்ச்சொற்கள்.அதுபோலவே பெயர்கள் செய்யும் செயல்களத்தனையும்வினைச் சொற்களாம்வினையைக் குறிக்கும் பெயர்ச்சொல்வினைப்பெயர்குணத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் பண்புப்பெயர்.

§  பெயர்ச் சொல்:-   (-ம்)மரம்கடல்.
§  வினைச் சொல்:-   (-ம்)ஓடினான்ஆடினான்.
§  வினைப் பெயர்:-   (-ம்)ஓடுதல்ஆடுதல்.
பண்புப் பெயர்:-   (-ம்)கருமைசதுரம்
  1. எழுவாய்பயனிலைசெயப்படுபொருள்:-
           ஒரு செயலை செய்யும் பொருள் எழுவாயென்றும்,செயலைச் சொல்லும் வினைமுற்று பயனிலையென்றும்,எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளேசெயப்படுபொருள் என்றும் வழங்கப்படும். "கண்ணன்புத்தகத்தைப் படித்தான்", இச்சொற்டொரரில்;

§  கண்ணன் - எழுவாய்
§  படித்தான் - பயனிலை
§  புத்தகத்தை -செயப்படுபொருள்

  1. வேற்றுமைஉவமைஉம்மைதொகை:-
           பெயர்ச்சொற்களில் பொருள் வேறுபாடு செய்வனவேவேற்றுமை எனப்படும்மரத்தைமரத்தோடு என்று வழங்கும்போதுமரம் என்னும் பெயர்ச் சொல் பொருளில் பலமாறுதல்கள் அடைகிறதுஅதனைச் செய்கிற ஆல்என்பவையே வேற்றுமையாகும்இவை வேற்றுமைஉருபெனவும் சொல்வர்ஒரு பொருளைப் போலவேஇருக்கும் மற்றொன்றிற்கு உவமை என்கிறோம்.அதுபோலவே ஒன்றிற்கு மேல் பல சொற்களைச் சேர்க்கும்போது இடையில் "உம்சேர்க்கிறோம்அதுவே உம்மைஎன்றழைக்கப்படுகிறதுஇரு சொற்கள் சேர்ந்து வருவதுதொகையெனப்படும்.

§  வேற்றுமை - (-ம்கண்ணால்கண்ணோடு
§  உவமை - (-ம்மதிமுகம் (மதி போன்ற முகம்)
§  உம்மை - (-ம்தமிழும்அழகும்எழிலும்
§  தொகை - (-ம்செந்தாமரை (செம்மை +தாமரை)

  1. அசைசீர்அடிஎதுகைமோனை:-
           ஒரேழுத்து அல்லது ஈரெழுத்து கொண்ட சொல்லின்தொகுதிக்கு பெயர் அசைசெய்யுளில் வரும் ஒரு சொல்லேசீரெனப்படுவதுஅதுபோலவே செய்யுளில் உள்ளஒவ்வொரு வரியும் அடியெனப்படும்அடிதோறும் முதல்சொல்லின் இரண்டாமெழுத்து ஒன்றிவருவதுஎதுகையெனவும்சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவதுமோனையெனவும் அழைக்கப்படும்.

§  அசை - (-ம்)"கடவுள்" - இதில் கட வுள் .
§  சீர் - (-ம்)குறளில் - அகர முதற்சீர்முதல இரண்டாம்சீர்
§  அடி - (-ம்)பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து -இது முதலடி
மின்னார் செஞ்சடைமேற் மிளிர்க்கொன்றையணிந்தவனே! - இது இரண்டாமடி.
§  எதுகை- (-ம்)அழகுபழகு - இவ்விரு சொற்களில் இரண்டாம்எழுத்து ழகரம் ஒன்றி வருகிறதுஇதுவே எதுகை.
§  மோனை - (-ம்)அழகுஅன்பு - இவ்விரு சொற்களில்முதலெழுத்து அகரம் ஒன்றி வருகிறதுஇதுவேமோனை                        அடிமோனை
         அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.
(எ.கா) டி விளையாடு பாப்பா - நீ
             ய்ந்திருக்கலாகாது பாப்பா
இணை மோனை 1, 2
          ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணை மோனை ஆகும்.
(எ.கா) “றந்தார் றந்தா ரனையர் சினத்தை”
பொழிப்பு மோனை 1, 3
          ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு
மோனை ஆகும்.
(எ.கா) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஓரூஉ மோனை 1, 4
         ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஓரூஉ மோனை
ஆகும்.
(எ.கா) ழுக்கம் விழுப்பம் தரலான் ழுக்கம்
கூழை மோனை 1, 2, 3
          ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் மோனை கூழை மோனை ஆகும்.
(எ.கா) “ல்விக் ரையில ற்பவர் நாற்சில”
கீழ்க்கதுவாய் மோனை 1, 2, 4
         ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர் போன்றவற்றில் வரும்
மோனை கீழ்க்கதுவாய் மோனை ஆகும்.
(எ.கா) “ற்றார் ழிபசி தீர்த்தல் ஃதொருவன்”
மேற்கதுவாய் மோனை 1, 3, 4
        ஓரடியில் ஒன்று, மூன்று, நான்காம் சீர்களில் வரும் மோனை மேற்கதுவாய் மோனை ஆகும்.
(எ.கா) “வானின்று உலகம் ழங்கி ருதலால்”
முற்று மோனை
        ஓரடியில் நான்கு சீர்களிலும் வரும் மோனை முற்று மோனை
(எ.கா) ற்க சடற ற்பவை ற்றபின்

அடி எதுகை
        அடிதோறும் முதல் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி
எதுகை ஆகும்.
(எ.கா.) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கு
               ஏழையினைக் கண்டனம் எனமே”
இணை எதுகை 1, 2
        ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் எதுகை இணை எதுகை ஆகும்
(எ.கா) “இன்மையுள் இன்மை விருந்தொறால்”
பொழிப்பு எதுகை 1, 3
        ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் எதுகை பொழிப்பு எதுகை
ஆகும்.
(எ.கா) “தோன்றின் புகமொடு தோன்றுக”
ஒரூஉ எதுகை 1.4
           ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் எதுகை ஓரூஉ எதுகை
ஆகும்.
(எ.கா) “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்”
கூழை எதுகை 1, 2, 3
         ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.
(எ.கா) “பற்றுக பற்றற்றான் பற்றிணை”
கீழ்க்கதுவாய் எதுகை 1, 2, 4
        ஓரடியில் முதலாம் இரண்டாம், நான்காம் சீர்களிலும் வரும் எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை ஆகும்.
(எ.கா) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
மேற்கதுவாய் எதுகை 1, 3, 4
         ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்களில் வரும் எதுகை
மேற்கதுவாய் எதுகை ஆகும்.
“கற்க கசடற கற்பவை கற்றபின்”
முற்று எதுகை 1, 2, 3, 4
          ஓரடியில் நான்கு சீர்களிலும் எதுகை வந்தால் அது முற்று எதுகை ஆகும்.
(எ.கா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
இயைபுத் தொடை         ஒரு செய்யுளின், அடிகளிலும் சீர்களிலும் அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடையாகும்.
(எ.கா) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்.   

No comments:

Post a Comment