Tuesday, July 29, 2014

12

கரிம வேதியியல்
ஒரு  மதிப்பெண் வினா-விடைகள்
1.   லூகாஸ் கரணியுடன் வேகமாக வினைபுரியும் சேர்மம் எது?  2-மீத்தைல்-2-புரோப்பனால்.
 
 
2.  எத்திலின் கிளைக்கால் PI3    வினப்பட்டு கிடைப்பது  --- எத்திலின்
 
 
3.  லூகாஸ் கரணியுடன் ஆல்கஹால் வினைபுரியும் வரிசை  3>2>1
 
 
4.  கிளிசராலை பிஸ்மத் நைட்ரேட் கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்தால் கிடைப்பது எது?
         மீஸோ ஆக்சாலிக் அமிலம்.
 
 
 
 
5.  மெத்தனால் & எத்தனால் வேற்படுத்த உதவும் சோதனை அயோடோபார்ம் சோதனை.
 
 
6.  பென்சைல் ஆல்கஹாலுடன் காரீய நைட்ரேட் சேர்த்து வினைப்படுத்த கிடைப்பது எது? பென்சால்டிஹைடு.
 
7.  மல்லிகை மணமுடையது-பென்சைல் அசிட்டேட்.
 
 
8.  கார்பாலிக் அமில் மணம்- பீனால்.
 
 
9.  மீன் மணம்- அமீன்
 
10. கசந்த பாதாம் எண்ணை மணம்-பென்சால்டிஹைடு,
 
 
11.  கசந்த பாதாம் பருப்பின் மணம்- நைட்ரோ பென்சீன்.
 
12. மிர்பேன் எண்ணை- நைட்ரோ பென்சீன்.
 
 
13. எத்திலின் டை அமினை எத்திலின் கிளைக்காலாக மாற்றுவது? நைட்ரஸ் அமிலம்.
 
 
14. புரோமினேற்றத்திற்கு எளிதில் உட்படும் சேர்மம் –பீனால்
 
 
15. பீனாலை Zn தூளுடன் காய்ச்சி வடிக்க கிடைப்பது---- பென்சீன்.
 
 
16. டைனமைட்டிலுள்ள வினத்திறன் மிக்க பகுதிப் பொருள்? நைட்ரோ கிளிசரின்.
 
 
17. கிளிசராலிலுள்ள ஈரிணய ஆல்கஹால் தொகுதிகளின் என்ணிக்கை ? 1
 
 
18. லூயி அமில கார கொள்கையின்படி ஈதர்கள்—காரத்தன்மையுடையவை.
 
 
19. எத்தனாலுடன் கலந்து பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுவது—ஈத்தாக்ஸி ஈத்தேன்.
 
 
20. ஈதரை காறில் நீண்ட நேரம் விடு வைக்கும்போது உண்டாகும் வெடிபொருள்—பெராக்சைடு.
 
 
21. ஈதரின் ஆக்சிஜன் அணு—மந்த தன்மையுடையது.
 
 
 
22. அல்காக்சி ( மீத்தாக்சி) தொகுதியை கண்டறிய பயன்படும் முறை? ஜெய்சல் முறை
 
 
 
23. ஜெய்சல் முறையில் பயன்படுத்தப்படும் வினைபொருள்— HI
 
 
 
24. வில்லியம்சன் தொகுப்பு முறை எதற்கு எடுத்துக்காட்டு? கருக்கவர் பதிலீட்டு வினை.
 
 
25.  C4H10O   எனும் வாய்ப்பாட்டிற்குரிய ஈதர் மாற்றுகளின் எண்ணிக்கை--- 3
 
 
 
26. அனிசோலை புரோமினேற்ரத்திற்கு உட்படுத்தினால்கிடைப்பது o- ப்ரோமோ & p -புரோமோ 
 
 
அனிசோல்.
 
 
 
27. டைஎத்தில் ஈதரை சிதப்பதற்கு உகந்த காரணி HI
 
 
28. வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுவது?  மெத்தில் பினைல் ஈதர்.
 
 
 
29. சோடியம் அல்காக்சைடை உலர் சில்வர் ஆக்சைடுடன் வெப்ப்படுத்தி டைஎத்திலீதர்
த்யாரிக்கும் முறையின் பெயெர் யாது?  வில்லியம்சன் தொகுப்பு.
 
 
30. பினட்டோலின் IUPAC   பெயர்? ஈத்தாக்சி பென்சீன்.
அனிசோலின்  IUPAC    பெயர்?  மீத்தாக்சி பென்சீன்.
 
 
 
31.  ஆல்டாலின் IUPAC  பெயர்  3 ஹைட்ராக்சி பியுட்டனேல்.
 
 
 
32. கீழ்கண்டவற்றுள் எது மெத்தில் மெக்னீசியம் அயோடைடுடன் செர்ந்து மூவிணைய பியுட்டைல் ஆல்கஹாலை கொடுக்கும்? அ)HCHO ஆ)CH3COCH3இ)CO2
 
 
 
 
33. ஷிப் கரணி எதனுடன் இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கிறது? அசிட்டால்டிஹைடு (ஆல்டிஹைடுகள்)
 
 
 
34. பெலிங் கரைசலை ஒடுக்காத சேர்மம் எது? பென்சால்டிஹைடு.
 
 
 
35. சல்போனால் எனும் அமைதிபடுத்தி & கார்டைட்  தயாரிக்க பயன்படுவது எது? அசிட்டோன்.
 
 
 
36. கன்னிசாரோ வினைக்கு உட்படாத சேர்ம்ம் ? அசிட்டால்டிஹைடு.
 
 
 
37.  BaSO4, Pd  பென்சாயில் குளோரைடு ஹைட்ரஜனேற்றமடைந்து தருவது எது?  பென்சால்டிஹைடு.
 
 
 
38. எவ்வினையில் சுய ஆக்சிஜனேற்றம் மற்றும் சுய ஆக்சிஜன் ஒடுக்கம் நடைபெறும்? கன்னிசாரோ வினை.
 
 
39. பார்மால்டிஹைடு பலபடியாதல் வினைக்குட்பட்டு தருவது? பாரா பார்மால்டிஹைடு.
 
 
 
 
40. டாலன்ஸ் கரணி என்பது—அம்மோனியா+ சில்வர் நைட்ரேட்.
 
 
41. அசிட்டோன் +அடர் H2SO4              மெசிட்டிலின்
 
 
 
42. கீழ்கண்டவற்றுள் குரைவான அமிலத்தன்மை உடையது? C2H5OH ஆ)  CH3COOH இ) C6H5OH ஈ)  CLCH2COOH
 
 
43. டோலன்ஸ் கரனியை ஒடுக்கம் செய்யும் அமிலம் எது? பார்மிக் அமிலம்.
 
 
 
44. கீழ்கண்டவற்றுள் அதிக அமிலத்தன்மை உடையது? Cl3CCOOH ஆ) CH3COOHஇ) Cl2CHCOOH ஈ)ClCH2COOH 
 
 
 
45. சிறுநீரக கற்களில் காணப்படுவது எது? கால்சியம் ஆக்சலேட்.
 
 
46. கிரிக்னார்டு வினைப்பொருளை பயன்படுத்தி தயாரிக்க இயலாத அமிலம் எது? பார்மிக் அமிலம்.
 
 
 
47. எத்திலின் டைசயனைடை நீராற்பகுக்க கிடைப்பது ----  சக்சினிக் அமிலம்.
 
 
 
48. அசிட்டிக் அமிலத்தின் சோடிய உப்பை மின்னாற்பகுக்க கிடைப்பது யாது? ஈத்தேன்.
 
 
49. உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாக்கப் பயன்படுவது? சோடியம் பென்சோயேட்.
 
 
50. விண்டர் கிரின் தைலம் எனப்படுவது? மெத்தில் சாலிசிலேட்.
 
 
 
 
 
51. ஆல்கஹால் மற்றும் அமினோ தொகுதியை கண்டறியப் பயன்படுவது எது? அசிடைல் குளோரைடு.
 
 
 
52. நைட்ரோ அசிநைட்ரோ இயங்கு சமநிலையை காட்டும் நைட்ரோ சேர்மங்கள் யாவை? ஓரிணைய & ஈரிணைய நைட்ரோ சேர்மம்.(நைட்ரோ மீத்தேன், 2- நைட்ரோ ப்ரோப்பேன் ......)
 
 
 
 
53. பென்சீன் டையசோனியம் குளோரைடை நீராற்பகுக்க கிடைப்பது? பீனால்.
 
 
 
54. டையசோ ஆக்கல் வினையில் ஈடுபடாதது எது? பென்சைலமின்
 
 
 
55. கார்பைலமின் வினையில் ஈடுபடும் கரிமச் சேர்மம் எது? C2H5NH2 ,  CH3NH2
 
 
56. நைட்ரோ தொகுதியை ஓரிணைய அமினோ தொகுதியாக மாற்றும் காரணி எது? Sn/HCl
 
 
57. அனிலினும் எத்திலமினும் எந்த காரணியுடன் வினைபுரியும்போது வேறுபடும்? நைட்ரஸ் அமிலம்.
 
 
 
58. பென்சீன் நைட்ரோ ஏற்றத்தின்போது இடைநிலைச் சேர்மமாக உருவாவது எது? அர்ரீனியம் அயனி.
 
 
 
 
59. பென்சீன் நைட்ரோஏற்றத்தின்போது எலக்ட்ரான் கவர் கரணியாக செயல்படுவது?நைட்ரோனியம் அயனி.(NO2+
 
 
 
60. எலக்ரான் கவர் நைட்ரோ ஏற்ற வினையில் மிக வீரியமிக்க சேர்ம்ம்? டொலுயீன்( மெத்தில் பென்சீன்)
 
 
 
61. அடர் சல்பியூரிக் அமில முன்னிலையில் நைட்ரோ பென்சீனை மின்னாற்பகுப்பு ஒடுக்கம் செய்யும்போது இடைச்சேர்ம்மாக உருவாவது? பினல் ஹைட்ராக்சிலமின்.
 
 
 
62. பென்சீன் டையசோனியம் குளோரைடை குளோரோபென்சீனாக மாற்றும் வினை? சாண்ட்மேயர் வினை மற்றும் காட்டர்மான் வினை.
 
 
 
63. குளோரோ பிக்ரின் பயன் யாது? மண் நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
 
 
 
64. ஓரிணைய அமின் ஒரு ---- லூயி காரம்.
 
 
 
65. அமின்களின் காரத்தன்மைக்கு காரணம் என்ன? நைட்ரஜன் மீதுள்ள தனித்த இணை எலக்ரான்கள்.
 
 
 
 
66. அனிலின் அமிலம் கலந்த பொட்டாசியம் டைகுரோமேட் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது?                பென்சோ குயினோன்
 
 
 
67. சல்பா மருந்துகள் செய்யப் பயன்படுவது ? அனிலின் ( அமினோ பென்சீன்).
 
 
 
68. பின்வருவனவ்ற்றுள் எது மூவினைய அமின்? C2H5NH2  (CH3)3 C -NH2  (CH3)2-N-C2H5
 
 
 
69. அடர் காரத்தின் முன்னிலையில் அமிலமாக செயல்படும் நைட்ரோ சேர்மங்கள்? 1மற்றும் 2நைட்ரோ சேர்மம்.
 
70. சீர்மையற்ற கார்பனைக் கொண்டிராத அமினோ அமிலம் எது? கிளைசீன்.
 
 
71. புரதங்களை நீராற்பகுக்கும்போது இறுதியாக கிடைப்பது? அமினோ அமிலம்.
 
 
 
72. ஒடுக்கும் சர்க்கரைக்கு எடுத்துக்காட்டு தருக. குளுக்கோஸ் & பிரக்டோஸ்.
 
 
 
73. சம அளவு D(+) குளுக்கோஸ்  சம அளவு D(-) பிரக்டோஸ் மூலக்கூறுகளும் உள்ள கலவையின் பெயர்? எதிர் சுழற்சி சர்க்கரை.
 
 
 
 
74. அமினோ அமிலத்திற்கு பொருத்தமற்றது எது? அ) இருமுனை அயனி ஆ) சம மின் புள்ளி இ)ஈரியல்புத் தன்மை ஈ) சோடியம் ஹைட்ராக்சைடில் கரையாத தன்மை.
 
 
 
75. சுக்ரோஸில் குளுக்கோசும் பிரக்டோசும் இணைக்கப்பட்டிருப்பது? C1-C2
 
 
 
 
76. புரதங்களின் கட்டுமான மூலக்கூறுகள்?  α-அமினோ அமிலம்.
 
 
 
 
77. குளுக்கோஸ் அசிட்டிக் அமிலநீரிலி மற்றும் சோடியம் அசிட்டேட்டுடன் சேர்ந்து தருவது?பெண்டாஅசிட்டேட்.
 
 
 
78. புரதம் வீழ்படிவாதல் ----- எனப்படும்.  (தன் இயல்பை இழத்தல்).
 
 
79. சார்பிட்டால் மானிட்டால் இரண்டும் –எபிமர்கள்.
 
 
 
 
80. குளுக்கோசை குளுக்கோனிக் அமிலமாக மாற்றாதது எது? அடர் நைட்ரிக் அமிலம்
 
 
 
 
 
81. ஒளி சுழற்றும் தன்மையற்ற அமினோ அமிலம் எது? கிளைசீன்.
 
 
 
 
 
82. செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள் எது? செல்லுலோஸ்.
 
 
 
83. ஸ்டார்ச்சை 200C 250C வெப்பப்படுத்த கிடைப்பது-டெக்ஸ்ட்ரின்
 
 
84. சுக்ரோசை 200 C வெப்பப்படுத்த கிடைப்பது- காரமல். மேலும் வெப்பப்படுத்த எரிக்கப்பட்ட சர்க்கரை.
 
 
85. இரண்டு டைபெப்டைடில் இல்லாதது? இரண்டு பெப்டைடு அலகுகள்.
 
 
86. சுக்ரோசின் எதிர் சுழற்சி மாற்றம் என்பது? சுக்ரோஸ் நீராற்பகுப்படைந்து குளுக்கோசும் பிரக்டோசும் உருவாவது.
 
 
87. முடி மற்றும் நகத்தில் உள்ளது ? கெரட்டின்.
 
 
88. பென்சோபீனோன் அயோடோபார்ம் சோதனைக்கு உட்படாது.
 
 
89. CH3CH2-N=O       மற்றும்    CH3CH2ON=O  உள்ள மாற்றியம் ---- வினைத் தொகுதி மாற்றியம்.
                


90. CH3CH (OH) COOH           ( O)/H2O2/Fe2+             X?       Ans. CH3COCOOH.

No comments:

Post a Comment