Wednesday, July 2, 2014

வேதியியல்

பூமிக்கு வரும் புறஊதாக் கதிர்களைத் தடுப்பது ஓஸோன்.

அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் சல்பர் - டை - ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு.

சிரிப்பூட்டும் வாயு நைட்ரஸ் ஆக்ஸைடு.

வளிமண்டலத்தில் அதிகமுள்ளது நைட்ரஜன்.

வாகனப் புகையில் அதிகமுள்ளது கார்பன் மோனாக்ஸைடு.

தீயணைக்கப் பயன்படுவது கார்பன் - டை - ஆக்ஸைடு.

தீயணைப்புக் கருவியில் இருப்பது சோடியம்பைகார்பனேட் கரைசல்.

சோடா பானங்களில் அதிகமுள்ளது கார்பன் - டை - ஆக்ஸைடு.

உலர்பனிக்கட்டி எனப்படுவது திட கார்பன் - டை - ஆக்ஸைடு.

பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுவது எத்திலீன்.
அழுகிய மீன் மணமுள்ளது பாஸ்பீன்.

மழை நீரின் PH அளவு 5.6க்குக் குறைவாக இருப்பின், அது அமில மழை.

ஹைட்ரஜன் அயனிகளைத் தரவல்லவை அமிலங்கள்.

அமில மழையில் காணப்படும் அமிலங்கள் சல்பியூரிக், நைட்ரிக்.

'வேதிப்பொருட்களின் அரசன்' சல்பியூரிக் அமிலம்.

'விட்ரியால் எண்ணெய்' எனப்படுவது சல்பியூரிக் அமிலம்.

'வலிமையான திரவம்': நைட்ரிக் அமிலம்.

எறும்பு கடிக்கும்போது, நம் உடம்பினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.

வினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.

கார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.

ஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியைக் கரைக்கும்.

மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் ராஜ திராவகம்.

ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.

எலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.

புளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.

ஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.

மயக்க மருந்தாக உதவுவது பார்பியூச்சுரிக் அமிலம்.

நைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.

பினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.

பீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.

கலோரிமீட்டரில் நியமமாக (Standard) பயன்படுவது பென்ஸாயிக் அமிலம்.

அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்.


No comments:

Post a Comment