Thursday, July 10, 2014

இயற்பியல்

Ø  காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.
Ø  காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
Ø  காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
Ø  காந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.
Ø  ஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.
Ø  இரும்பின் கியூரி வெப்பநிலை 770 டிகிரி சென்டிகிரேட்.
Ø  காந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.
Ø  இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
Ø  காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.
Ø  காந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.
Ø  காந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.
Ø  காந்தமாக்கப்படக் கூடிய பொருள் - நிக்கல்.
Ø  காந்தப் புலச் செறிவின் அலகு ஆம்பியர்/மீட்டர்
Ø  காந்த உட்புகு திறன் அலகு ஹென்றி/மீட்டர் ஆகும்.
Ø  ஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனைபுவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்.
Ø  மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் துவங்கி எதிர் மின்னூட்டத்தில் முடிவடையும்.
Ø  மின்விசைக்கோட்டுக்கு ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோடு அப்புள்ளியில் மின்புலத்தின் திசையைக் குறிக்கும்.இக்கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை.
Ø  கடத்தியின் பரப்புக்கு விசைக்கோடு எப்போதும் செங்குத்தாக இருக்கும்.
Ø  மின்னழுத்தத்தின் அலகு வோல்ட் ஆகும். சாதாரணமாக நாம் மின்னழுத்தத்தை வோல்டேஜ் என்று குறிப்பிடுகின்றோம்.
Ø  மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
Ø  ஒரு கூலும் மின்னூட்டம் கடத்தி ஒன்றின் வழியே ஒரு வினாடியில் பாய்ந்தால் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.
Ø  மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.
Ø  மின்திறனின் அலகு வாட் ஆகும்.
Ø  உலர்ந்த தோலுக்கு உயர் மின்தடை இருக்கும். அப்போது பாயும் மின்னோட்டம் குறைவாகும். மின்னதிர்ச்சி அங்கு மென்மையாக இருக்கும். ஈரத்தோலுக்கு மின்தடை மிகக் குறைவு.
Ø  மின்னோட்டம் மிக அதிகமானால் சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படக்கூடும்.
Ø  மின்னோட்டமே மனிதனைக் கொல்லும்உயர்ந்த மின்னழுத்தம் கொல்லுவதில்லை.
Ø  எபொனைட் தண்டை கம்பளியால் தேய்ப்பதால் உண்டாகும் மின்சாரம் எதிர்மின்னூட்டம்.
Ø  பொதுவாக உலோகங்கள் ஓர் நற்கடத்தியாகும்.
Ø  கூரிய முனையில் அதிக மின்னூட்டம் இருக்கும்.
Ø  உலோகங்களின் மின் கடத்தலுக்குக் காரணம் கட்டுறா எலெக்ட்ரான்கள்.
Ø  கடத்திகளின் கூரான முனைளிலிருந்து மின்னூட்டம் மிக விரைவாக வெளியேறுவதை பெஞ்சமின் பிராங்க்லின் கண்டுபிடித்தார்.
Ø  மனித உடல் ஒரு மின்கடத்தி.
Ø  மின் தூண்டுதலால் ஏற்படுத்தப்படும் மின்னூட்டம் தூண்டப்பட்ட மின்னூட்டம் என்கிறோம்.
Ø  நீர்த்துளிகள் சேர்ந்த தொகுப்பே முகில் எனப்படும்.
Ø  மின்னழுத்தத்திற்கும்மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் மின்தடை.
Ø  மின்சார மணி மின்காந்த விளைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
Ø  நீச்சல் விதியை உருவாக்கியவர் ஆம்பியர்.
Ø  மின்சார மணியில் மின்சாரத்தை விட்டு விட்டு பாய்ச்ச உதவும் அமைப்பு ஆர்மச்சூர்.
Ø  யுரேனியம்தோரியம்பொலோனியம்ரேடியம் போன்றவை இயற்கை கதிரியக்கத் தனிமங்கள் ஆகும்.
Ø  செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்ளைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
Ø  ஆல்ஃபா துகள்கள் ஹீலியத்தின் உட்கருவைப்பெற்றவை. ஹைட்ரஜன் அணுநிறையைவிட மடங்கு கனமானது.
Ø  ஆல்ஃபா துகளானது கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப்பெரிய துகள் ஆகும்.
Ø  ஆல்ஃபா துகளானது அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால்இவற்றின் இயக்க ஆற்றல் அதிகமாகும். எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகிறது.
Ø  பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களை பாதிக்கும்.
Ø  பீட்டா கதிர்கள் மெல்லிய அலுமினியத் தகடைக் கடக்கக் கூடியது.
Ø  காமா கதிர்கள் கண்ணிற்கு புலப்படாது.
Ø  காமா கதிர்கள் நின்றொளிர்தலை உண்டாக்கும்.
Ø  காமா கதிர்கள் காற்றினை அயனியாக்கும்.
Ø  காமா கதிர்கள் பொருள்களின் மீது விழும்போது பீட்டா கதிர் அல்லது எலெக்ட்ரான்களை வெளியேற்றுகின்றன.
Ø  எலெக்ட்ரோ மீட்டர்கெய்கர் முல்லர் எண்ணிமேகப்பெட்டகம்,குறைகடத்தி மின்சுற்றுகள் இவை யாவும் கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
Ø  பாஸ்பரஸ் 32 அல்லது ஸ்ட்ரான்சியம் - 90 ஆகியவை தோல் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
Ø  மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்க கதிர்வீச்சு பயன்படுகிறது.
Ø  டிரிட்டியம்கார்பன் 14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறிய பயன்படுகிறது,.
Ø  ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர்விளைச்சல் தரும் புதிய ரக நெல்கோதுமை,ஆகியவற்றை உருவாக்கலாம்.
Ø  காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறிய முடியும்.
Ø  கதிர்வீச்சுகளின் உதவியால் பொருள்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறியலாம்.
Ø  கதிரியக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டறியலாம்.
Ø  கதிரியக்க ஐசோடோப்புகள் வேதிவினைகளின் சுவடறி தனிமங்களாகப் பயன்படுகிறது.
Ø  நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்செனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
Ø  தொல்பொருள் மற்றும் பழம்பொருளின் வயதை அறிய கார்பன் -14ஐசோடோப்பு பயன்படுகிறது.
Ø  கதிரியக்க கார்பனின் அரை ஆயுள் காலம் 5,730 ஆண்டுகள்.
Ø  கார்பன் - 14  கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதை கண்டுபிடிக்கலாம். இது கதிரியக்க கார்பன் தேதியிடல் எனப்படுகிறது.
Ø  ரேடியோ தேதியிடுதல் முறையில் விண்கற்கள்நிலவில் உள்ள பாறைகள் ஆகியவற்றின் வயது கணக்கிடப்படுகிறது.                                                                                                           
வெர்னியர் அளவி
 Ø  ஒரு மில்லி மீட்டரை விட குறைவான  நீளத்தை அளக்க வெர்னியர் அளவுகோல் பயன்படுகிறது.
Ø  வெர்னியரை கண்டுபிடித்தவர் பியரி வெர்னியர்.
Ø  வெர்னியர் அளவுகோல் என்பது முதன்மை அளவுகோலுடன் பயன்படுத்தப்படும் துணை அளவுகோல் ஆகும்.
Ø  மீட்டர் அளவுகோலில் மீச்சிற்றளவு - மி.மீ.
Ø  வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவு - 0.01 மி.மீ.
Ø  வெர்னியர் அளவுகோலில் நேர்ப்பிழை மற்றும் எதிர்ப்பிழை என்ற இரண்டு பிழைகள் உண்டு.
Ø  நேர்ப்பிழை இருந்தால் கண்டுபிடிக்கப்பட்ட நீளத்தில் இருந்து பிழைத் திருத்தம் செய்ய கழிக்க வேண்டும்.
Ø  எதிர்ப்பிழை இருந்தால்கண்டுபிடிக்கப்பட்ட நீளத்திலிருந்து பிழைத் திருத்தம் செய்ய கூட்ட வேண்டும்.
Ø  வெர்னியர் அளவுகோல் உள்ளீடற்ற உருளையின் உள்விட்டத்தை அளக்க உதவுகிறது.
Ø  திருகு அளவியானது ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவுக்கு துல்லியமாக அளவிடவும் மெல்லிய கம்பிதகடுதாள் ஆகியவற்றின் தடிமனை அளவிடவும் பயன்படுகிறது.
இயற்பியல் தராசு
 Ø  ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லிகிராம் அளவிற்கு துல்லியமாக காண பயன்படுவது இயற்பியல் தராசு.
Ø  இயற்பியல் தராசின் கத்தி விளிம்பு அகேட் கல்லால் ஆனது.
Ø  தூசியில் இருந்து பாதுகாக்கவும்காற்றோட்டத்தினால்குறிமுள் அளவுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும்இயற்பியல் தராசு கதவுகளுடன் கூடிய கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
Ø  இயற்பியல் தராசின் மிகக் குறைவான எடைக்கல் 10 மி.கிராம்.
Ø  இயற்பியல் தராசின் மிக அதிகமான எடைக்கல் 200 கிராம்.
Ø  இயற்பியல் தராசில் எடைக்கற்களை வலது தட்டில் வைக்க வேண்டும்.
Ø  இயற்பியல் தராசில் எடைகளைத் தராசுத் தட்டில் போடவும்எடுக்கவும் இடுக்கியையே பயன்படுத்த வேண்டும்.
நிறை:
 Ø  ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அதன் நிறை.
Ø  ஒரு பொருளின் நிறை இடத்திற்கு இடம் மாறாது.
Ø  பொருளின் நிறையை அறிய இயற்பியல் தராசு பயன்படுகிறது.
Ø  ஒரு பொருளின் மீது செயல்படும் விசையின் அளவே எடை எனப்படும்.
Ø  ஒரு பொருளின் எடை துருவப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
Ø  ஒரு பொருளின் எடை இடத்துக்கு இடம் மாறும்.
Ø  பொருளின் எடையை அறிய வில்தராசுதராசு போன்றவை பயன்படுகிறது.
புவிஈர்ப்பு விசை
 Ø  புவிஈர்ப்பு விசையை கண்டறிந்தவர் - ஐசக் நியூட்டன்.
Ø  புவிஈர்ப்பு விசை இடத்திற்கு இடம் மாறுபடும்.
Ø  புவிஈர்ப்பு விசை துருவங்களில் அதிகமாக இருக்கும்.
Ø  சந்திரனின் மேல்பரப்பில் அதன் ஈர்ப்பு விசை புவிஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்காக உள்ளது.
Ø  புவிப்பரப்பிலிருந்து மேலே செல்லும்போது புவிஈர்ப்பு விசை குறைகிறது.
நீர்ம அளவிடல்
 Ø  பொதுவாக நீர்ம அளவீடுகள் லிட்டரில் குறிக்கப்படும்.
Ø  மிகச்சிறிய அளவில் நீர்ம அளவுகளை கண்டறிய பியூரெட்பிப்பெட் பயன்படுத்தப்படுகிறது.
Ø  பியூரெட்டில் அளவுக் குறியீடுகள் மேலிருந்து கீழாக குறிக்கப்பட்டிருக்கும்.

தனி ஊசல்:
Ø  ஊசலின் நீளம் என்பது தொங்கு புள்ளியிலிருந்து ஊசல் குண்டின் மையப் புள்ளி வரை உள்ள தூரமாகும்.
Ø  வினாடி ஊசலின் நீளம் 100 செ.மீ.
Ø  அலைவு நேரம் என்பது ஊசல் ஓர் அலைவைச் செய்ய ஆகும் நேரமாகும்.வினாடி ஊசலின் அலைவு நேரம் வினாடி.
Ø  தனி ஊசலின் நீளம் அதன் அலைவு நேரத்தின் இருமடிக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
Ø  ஊசலின் அசைவற்ற நிலையிலிருந்து எவ்வளவு தூரம் இழுத்து விடப்படுகிறதோ அத்தொலைவு ஊசலின் வீச்சு எனப்படும்.
Ø  தனி ஊசலின் அலைவு நேரம் அதன் வீச்சைப் பொருத்து மாறாது.
Ø  வினாடி ஊசலின் அதிர்வு நேரம் வினாடி.
Ø  மின்னணு கடிகாரம் மிகத் துல்லியமாக நேரத்தை அளக்கப் பயன்படுகிறது.
அளவிடல்கள்:
 Ø  வளிமண்டல அழுத்தத்தை அளக்க பார்ட்டின் பராமானி பயன்படுத்தப்படுகிறது.
Ø  வளிமண்டலக் காற்றின் அழுத்தம் 76 செ.மீ.பாதரச அழுத்தம்.
Ø  பாரமானியில் பாதரச மட்டத்திற்கு மேலே உள்ள வெற்றிடம் டாரி செல்லி வெற்றிடம்’ எனப்படுகிறது.
Ø  உயரமான மலைகளின் உயரத்தை அளக்க ஆல்டிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.
Ø  சாதாரண பாரமானியில் திரவமாக பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
Ø  அனிராய்டு பாரமானியில் திரவம் கிடையாது.
Ø  அனிராய்டு பாரமானி ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளக்கப் பயன்படுகிறது.
Ø  விசைக்கு எண் மதிப்பும் திசையும் உண்டு.
Ø  திரவம் நிலையான பரும மதிப்பினையும்பரப்பு இழுவிசையையும் கொண்டது.
Ø  எந்திரங்களின் திறன் பொதுவாக அளக்கப்படும் அலகு - குதிரைத் திறன்.
Ø  குதிரைத் திறன் என்பது - 746 வாட்.
Ø  மின்திறன் அளக்கும் அலகு கிலோவாட் மணி.
Ø  ஒரு கிலோவாட் என்பது 1000 வாட்.
விசையின் திருப்புத் திறன்:
 Ø  விசை ஒன்று பொருளை நகர்த்தலாம் அல்லது நகர்த்த முயற்சிக்கலாம். இதனையன்றி அப்பொருளை சுழற்ற முயற்சிக்கலாம் அல்லது சுழலுமாறு செய்யலாம். விசையின் இச்சுழற்றுத் திறன் அல்லது திருப்புத் திறன் விசையின் திருப்புத் திறன் எனப்படும்.
Ø  விசை செயல்படும் நேர்க்கோட்டில் உள்ள புள்ளியில் திருப்புத்திறன் சுழி.
Ø  இரண்டு சமமானஎதிர்த் திசை இணை விசைகள் வெவ்வேறு புள்ளிகளில் செயல்படும்போது ஓர் இரட்டை உருவாகிறது.
Ø  இரட்டையின் செயல்பாட்டுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: குழாய் அடைப்பானை திருப்புதல்பேனாபாட்டில் மூடியைத் திறத்தல்பென்சில் கூர்ப்பானின் பென்சிலைத் திருப்புதல்திருகாணியைத் திருப்புதல்,திருப்புள்ளியைச் சுழற்றுதல்கடிகாரத்தின் சாவியைச் சுழற்றுதல்.
Ø  ஒரு பொருளின் ஆற்றல் என்பது அது செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிக்கும்.
Ø  நிலை ஆற்றல் என்பது ஒரு பொருளின் நிலையை அல்லது திரிபு நிலையைப் பொருத்ததாகும்.
Ø  ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்போது செய்யப்படும் வேலை அதன் நிலையாற்றலாக மாறும்.
Ø  ஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றலைக் குறிப்பதாகும்.
Ø  பூமியின் முதன்மையான ஆற்றல் மூலம் சூரியன்.
Ø  விளையாட்டு வீரர்களால் உதைக்கப்பட்டு வெவ்வேறு வேகத்துடன் வெவ்வேறு திசைகளில் ஓடும் கால் பந்தின் இயக்கம்காற்றில் பரவும் ஊதுவத்தியின் புகை இவை யாவும் தன்னிச்சையான இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  வில்லின் நாணிலிருந்து புறப்படும் அம்புதுப்பாக்கியிலிருந்து விரையும் குண்டு இவையாவும் இடப்பெயர்ச்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  ஒரு பொருள் ஓர் அச்சைப் பற்றி சுழலுமானால்அவ்வியக்கம் சுழற்சி இயக்கம் எனப்படும். சுழலும் பம்பரம்மின் விசிறி ஆகியவை சுழற்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும் அளவுகளுக்கு ஸ்கேலார் அளவு அல்லது திசையிலி அளவுருகள் என்று பெயர்.
Ø  நிறைநீளம்நேரம்வெப்பநிலைகோணம்பரப்புபருமன்அடர்த்தி,வேலை போன்றவை திசையிலி அளவுருகள் ஆகும்.
Ø  எண் மதிப்பையும்திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுருகளுக்கு திசை அளவுருகள் அல்லது வெக்டர் அளவுகள் என்று பெயர்.
Ø  இடப்பெயர்ச்சிதிசைவேகம்முடுக்கம்விசைஉந்தம்எடை போன்றவை திசை அளவுருகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் முடுக்கம் எனப்படும். இதன் அலகு மீவிஆகும்.
Ø  ஒரு கனமான சிறிய உலோகக் குண்டு மீட்சித் தன்மையற்றஎடையற்ற நூலால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனி ஊசல் ஆகும்.
Ø  மையப் புள்ளியிலிருந்து ஊசல் குண்டு அடையும் பெரும் இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.
Ø  தனி ஊசலின் அலைவு நேரம்ஊசல் குண்டு செய்யப்பட்டுள்ள பொருளையோ அல்லது குண்டின் நிறை மற்றும் உருவத்தையோ பொருத்தத்தல்ல.
Ø  அலைவு நேரம் ஊசலின் வீச்சைப் பொருத்ததல்ல.
Ø  ஓரலகு பரப்பில் செங்குத்தாக செயல்படும் இறுக்கு விசையே அழுத்தம் ஆகும்.
Ø  புவியைச் சுற்றியுள்ள காற்று உறையே வளிமண்டலம் எனப்படும்.
Ø  உயரம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறையும்.
Ø  ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது ஏற்படும் காற்றின் எடையே ஒரு வளிமண்டல அழுத்தம் ஆகும்.
Ø  ஒரு வளிமண்டல அழுத்தம் 0.76 மீட்டர் பாதரச தம்பம் ஆகும்.
Ø  வளிமண்டல அழுத்தத்தை அளவிட பாரமானிகள் பயன்படுகின்றன
Ø  மை நிரப்பும் கருவிநீர் இரைக்கும் பம்புவடிகுழாய்உறிஞ்சி குழாய்,மருந்தேற்றும் ஊசி போன்றவை காற்றழுத்தத்தால் இயங்கும் கருவிகள் ஆகும்.
Ø  ஃபார்ட்டின் பாரமானி என்பது வளிமண்டல காற்றின் அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்.
Ø  சீரான மிக குறுகிய துவாரம் கொண்ட கண்ணாடிக் குழாய் நுண்புழைக் குழாய் எனப்படும்.
Ø  நுண்புழைக் குழாயில் திரவத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் நுண்புழை நிகழ்வு எனப்படும். திரவத்தின் பரப்பு இழுவிசை என்ற பண்பினாலேயே இந்நிகழ்வு ஏற்படுகிறது.
Ø  நுண்புழை ஏற்றத்தினால் மரங்களிலும் தாவரங்களிலும் நீர் மேலே உறிஞ்சப்படுகின்றன.
Ø  பொருள்களை வெப்பப்படுத்தும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது.
Ø  ஒரு பொருளின் வெப்பநிலை என்பதுஅதில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி வெப்ப ஆற்றலின் அளவாகும். அது பொருளின் வடிவத்தை சார்ந்ததில்லை.
Ø  வெப்பமும்,வெப்பநிலையும் ஒன்றல்லஅவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை ஒரு பொருளின் வெவ்வேறான இரு பண்புகளைக் குறிக்கின்றன.
Ø  ஒரு பொருளின் வெப்பநிலைதுகள்களின் வகையையோ அல்லது வடிவத்தையோ பொருத்ததல்ல.
Ø  ஒரு பொருளின் வெப்பம் என்பது அப்பொருளின் உள்ளாற்றலாகும். அப்பொருளை சூடாக்கி அல்லது குளிர்வித்து அதன் வெப்பநிலையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
Ø  ஒரு பொருளின் அதிக வெப்பநிலை என்பது மூலக்கூறுகளின் அதிகமான இயக்க ஆற்றலைக் குறிப்பிடுவதாகும்.
Ø  பொருளின் வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி வெப்பநிலைமானி ஆகும்.
Ø  வெப்பத்தால் சீராக மாறும் பொருள்களின் பண்புகளை அளவிட்டு,பல்வேறு வகையான வெப்பநிலைமானிகளை அமைக்கலாம்.
Ø  சாதாரண வெப்பநிலைகளை அளவிட பாதரச வெப்பநிலை மானிகளே அதிகம் பயன்படுகின்றன.
Ø  திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் ஆகும்.
Ø  பாதரசம் கண்ணாடியில் ஒட்டாது.
Ø  சிறிதளவு வெப்பநிலை உயர்ந்தாலும்பாதரசம் சீராக விரிவடையும்.
Ø  பாதரசத்தின் கொதிநிலை 357 டிகிரி சென்டிகிரேட்/ உறைநிலை - 39டிகிரி சென்டிகிரேட்.
Ø  ஆண்ட்ரூஸ் செல்சியஸ் என்பவர் வெப்பநிலையை அளவிடுவதற்கு செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தார்.
Ø  மனிதனின் இயல்பு வெப்பநிலை 36.9 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
Ø  உறைகலவையில் உப்பும் பனிக்கட்டியும் 1:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
Ø  உறைகலவையின் வெப்பநிலை  23 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
Ø  வெப்பப்படுத்துவதால் நீளத்தில் ஏற்படும் மாற்றம் நீள்விரிவு எனப்படும்.
Ø  பரப்பில் ஏற்படும் மாற்றம் பரப்பு விரிவு எனப்படும்.
Ø  பருமனில் ஏற்படும் மாற்றம் பரும விரிவு எனப்படும்.
Ø  நீராவி என்ஜின் முதன்முதலில் தாமஸ் நியூ கமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஜேம்ஸ்வாட் என்பவரால் திருத்தி வடிவமைக்கப்பட்டது.
Ø  ஒரு வாயுவிலுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அப்பொருளின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.
Ø  வாயுவின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கும். வெப்பநிலை குறையும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறையும்.
Ø  கலத்தின் சுவர்களில் ஓர் அலகு பரப்பில் செயல்படும் விசையே அழுத்தம் ஆகும்.
Ø  உறைகலவை என்பது தூளாக்கப்பட்ட பனிக்கட்டியும்சாதாரண உப்பு மற்றும் அமோனியம் நைட்ரேட் சேர்ந்த கலவையாகும்.
Ø  பெட்ரோலியத்தின் ஒளிவிலகல் எண்  1.38
Ø  தண்ணீரின் ஒளிவிலகல் எண்  1.33
Ø  வைரத்தின் ஒளிவிலகல் எண் 2.40
Ø  காற்றின் ஒளிவிலகல் எண் 1.00
Ø  நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் இருக்கும்போது நீரின் மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண்பதற்கு பெரிஸ்கோப் பயன்படுகிறது.
Ø  குவிலென்சானது மையத்தில் தடிமனாகவும்வெளிப்பகுதியில் மெல்லியதாகவும் இருக்கும்.
Ø  குழிலென்சானது மையத்தில் மெல்லியதாகவும்வெளிப்பகுதியில் தடிமனாகவும் இருக்கும்.
Ø  கிட்டப்பார்வை உள்ளவர்கள் குழிலென்சை பயன்படுத்தவேண்டும்.
Ø  தூரப்பார்வை உள்ளவர்கள் குவிலென்சை பயன்படுத்த வேண்டும்.
Ø  கலிலியோ தொலைநோக்கியில் கண்லென்சுகளாக குழிலென்சுகள் பயன்படுகின்றன.
Ø  டார்ச் விளக்குபட வீழ்த்திகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் உள்ள பல்பிலிருந்து வரும் ஒளியை எதிரொளித்து இணைக்கற்றையாக நெடுந் தொலைவிற்கு அனுப்ப குழி ஆடிகள் பயன்படுகின்றன.
Ø  மனிதனின் கண்ணின் விழிக்கோளம் வெளி அடுக்குமைய அடுக்கு மற்றும் உள் அடுக்கு என்ற மூன்று அடுக்குகளால் ஆனது.
நிறங்கள்:
 Ø  நிறமிகள் என்பது வெள்ளொளியின் சில கூறுகளை எதிரொளித்து ஏனையவற்றை உட்கவரும் ஒளிபுகாப் பொருள்கள் நிறமிகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள்: தாவரங்களில் உள்ள பச்சையம்வர்ணங்கள்சாயங்கள்.
Ø  பொதுவாக மனிதர்களின் கண்களால் காணக்கூடிய வானவில் முதன்மை வானவில் ஆகும். இது சூரியனிலிருந்து வரும் ஒளி ஒருமுறை அக எதிரொளிப்பும்இரண்டு முறை ஒளி விலகலும் பெற்று சிறுமத் திசை மாற்ற நிலையில் சூரிய ஒளிக்கதிர் வெளிவருவதால் முதன்மை வானவில் உருவாகிறது.
Ø  இரண்டாம் நிலை வானவில்லில் ஊதா நிறம் வெளிப்பக்கமும்சிவப்பு நிறம் உள்பக்கமும் இருக்கும்.
Ø  கண்ணுக்குப் புலனாகாத சிவப்பு நிறத்திற்கு அப்பால் உள்ள நிறமாலை அகச்சிவப்பு நிறமாலை எனப்படும்.
Ø  கண்ணுக்குப் புலனாகாத ஊதாவிற்கு அப்பால் உள்ள நிறமாலை புறஊதா நிறமாலை எனப்படும்.
Ø  அகச்சிவப்பு நிறமாலை சர்.வில்லியம் ஹேர்சல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
Ø  அகச்சிவப்பு சோதனைகளுக்கு நேன்ஸ்ட்குளோவர் மற்றும் குளோபார் பயன்படுகிறது.
Ø  அகச்சிவப்பு கதிர்களை கண்டுணரஉணர்வு நுட்பமுடைய வெப்ப மின்னிரட்டை அடுக்கு அல்லது போலோ மீட்டர் பயன்படுகிறது.
Ø  மூலக்கூறுகளின் அமைப்பை தெரிந்துகொள்வதற்கும்கரிம மூலக்கூறுகளை கண்டுபிடிக்கவும்அடையாளம் காணவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகிறது.
Ø  தோல் புற ஊதாக் கதிர்களை உட்கவர்வதால் வைட்டமின் டி தயாரிக்கப்படுகிறது.
Ø  சூரியனும் பிற நட்சத்திரங்களும் இயற்கை ஒளிமூலங்கள் என்று கூறப்படுகிறது.
Ø  மரம்கரி எண்ணெய் சமையல் எரிவாயு போன்றவை செயற்கை ஒளிமூலங்கள்.
Ø  ஒளி வெற்றிடத்திலும் பரவும்.
Ø  மரம்கல் உலோகங்கள் ஒளிபுகா ஊடகங்கள்.
Ø  ஒளி நேர்க்கோட்டில் பரவுகிறது. கண்ணாடிநீர்காற்று ஆகியவை ஒளிபுகும் ஊடகங்கள்.
Ø  மனிதனின் காதுகளால் கேட்கப்படும் ஒலி அளவு 20 முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ்.
Ø  உலர்ந்த காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீ/வி. ஆகும்.
Ø  ஒழுங்கற்ற அதிர்வுகளால் உண்டாகும் ஒலி ஓசை எனப்படும்.
Ø  கார்பன் டை ஆக்சைடில் ஒலி மிக மெதுவாக பரவும்.
Ø  காற்றில் ஒலியின் வேகம் 330 மீ/விநாடி.
Ø  நீரில் ஒலியின் வேகம் 1415 மீ /விநாடி.
Ø  இரும்பில் ஒலியின் வேகம் 5040 மீ/விநாடி.     

No comments:

Post a Comment