Saturday, September 13, 2014

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்?

Image result for cat imagesமுலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.
புலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஏனைய முலையூட்டிகள் இந்த நிறமூர்த்தத்தினையே தமது நாக்குகளில் சுவை கலங்களினை உருவாக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பூனையினை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களில் சிலர், “எனது பூனை ஐஸ் கிறீம் சாப்பிடுகின்றது” , “எனது பூனை கேக் சாப்பிடுகின்றது” என்கின்றார்களே… இதற்கு ஆய்வாளர்கள் கூறும் பதில் என்னவெனில்,


அவை இனிப்பு சுவையினை ருசிபார்க்கின்றது என்பது மிக, மிக, மிக சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில், அவை கொழுப்புக்காகவே அவற்றினை உண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment