Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Monday, July 28, 2014

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!


  • இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது. 

  • *வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம். 

  • *வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது. 

  • *உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள். 

  • *வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 

  • *கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

  • *கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும். 

  • *ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன. 

  • *நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது. 

  • *கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது. 

  • *கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

  • *முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. 


  • *ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன. 

  • *ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.. 

  • *உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. 

  • *வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது. 

  • *வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?... அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது !

Sunday, July 13, 2014

தமிழகத்தின் சில முக்கிய இடங்கள் மற்றும் சிறப்புகள் !!

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனிதஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம்
( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) –தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில்
பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம்
(திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமானகடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் –கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

Saturday, July 12, 2014

பொது அறிவு

* இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி -   தாமிரபரணி
* “சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் - ஜீவா
* தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் -   கடலூர்
* “காந்தி மியூசியம்” - அரசு அருங்காட்சியகம் எந்த மாவட்டத்தில் உள்ளது - மதுரை
* தமிழகத்தில் ரசாயன பொருட்களுக்கான தொழில்நுட்ப பூங்கா எங்கு உள்ளது? -  காரைக்குடி
* சென்னை தரமணியில் டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட வருடம் - 2000
* சென்னையில் அமைந்துள்ள இந்துஸ்ஹான் டெலி பிரிண்டர்ஸ் எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட்து? - இத்தாலி
* இந்திய மாநிலங்களில் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் தமிழகத்தின் இடம் - 3 ஆவது இடம்
* இந்தியாவின் பரப்பளவில் தமிழகம் பெறும் இடம்  - 11
* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் தமிழகத்தின் பங்கு - 4.00%
* தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலையடிகள்
* தமிழகத்தில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் மாவட்டம் - நாகப்பட்டினம்
* ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எந்த வம்சத்தை சார்ந்தவர் - பாண்டிய வம்சம்
* வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் - பெரியார்.
* நீதி தேவன் மயக்கம் - நூலை எழுதியவர் - அண்ணாத்துரை
* எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - தஞ்சாவூர்
* இந்து ஆங்கில நாளிதழை துவக்கியவர் - ஜி.சுப்ரமணிய ஐயர்
* சென்னை மகாணத்தில் 'சைமன் குழு ' புறக்க்கணிப்பு போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர் -   சத்தியமூர்த்தி
* “எம்டன்” என அழைக்கப்பட்ட தமிழ்க சுதந்திர்ப்போராட்ட வீரர் - தீர்த்தகிரியார்
* தென்னிந்திய சிங்கம்” என போற்றப்பட்டவர் -   விஜயராகவாச்சியார்
* ஜெய்ஹிந்த' என முதன்முதலில் முழங்கியவர் - செண்பகராமன்
*. 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்படுபவர் - சின்ன மருது
*. தமிழ்நாட்டில் செயற்கைப் பட்டு உற்பத்தி செய்யும் இடம் -  மேட்டுப்பாளயம்
*. காமராஜர் பிறந்த நாளான ஜீலை -15 எந்த வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது - 2006 முதல்
*. தமிழகத்தின் பொதுப்பணித்துறையின் தலைவர் - தலைமைப் பொறியாளர்
*. “எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்” எங்கு அமைந்துள்ளது -  மதுரை
*. தமிழகத்தில் “நிழல் தாங்கல்கள்” என்ற பெயரில் வழிபாட்ட்டு தலங்களை நிறுவியவர் யார் -
வைகுண்ட ஸ்வாமிகள்
*. வருச நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கண்வாய் - செங்கோட்டைக் கண்வாய்
*. வண்டலூர் மலை அமைந்துள்ள மலைத்தொடர் - கிழக்குத் தொடர்ச்சி மலை
*. ஜவ்வாது மலை அமைந்துள்ள மாவட்டம் - வேலூர்.
*. ஏலகிரி அமைந்துள்ள மலை - ஜவ்வாது மலை
*. கல்வராயன் மலை அமைந்துள்ள மாவட்டம் - விழுப்புரம்.
*. ஏற்காடு அமைந்துள்ள மலை - சேர்வராயன் மலை
*. பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை - பச்ச மலை
*. உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கும் மலை - பச்ச மலை
*. கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம் - நாமக்கல்
*. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கும் மலை - கொடைக்கானல் மலை
* தேக்கடி சரணலாயம் அமைந்துள்ள மலை - ஏலக்காய் மலை
* குன்னூர்மற்றும் கோத்தகிரி அமைந்துள்ள மலை - நீலகிரி மலை
* உதகமண்டலம் அமைந்துள்ள மலை - நீலகிரி மலை
* தொட்டப்பெட்டா அமைந்துள்ள மலை - நீலகிரி மலை
* குற்றால மலை அமைந்துள்ள மலைத்தொடர் - மேற்கு தொடர்ச்சி மலை
* ஆங்கிலேயரால் மேலைப்படிகள் என அழைக்கப்பட்ட தமிழக இய.ற்கை அமைப்பு - மேற்கு தொடர்ச்சி மலை
* சித்திரகாரப் புலி என அடைமொழிக் கொண்டவர் - மகேந்திரவர்மன்
* தமிழகத்தில் அஇஅதிமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு - 1977
* தமிழகத்தில் அதிக மழைப்பொழிவை பெறக்கூடிய மாதங்கள் - அக்டோபர் - நவம்பர்
* விருத்தாச்சலம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது - வெள்ளாறு
* தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி சேசு துரை
* உலகிலேயே நீளமான பிரகாரத்தைக் கொண்ட கோயில் -  ராமேஸ்வரம்
* தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம்' - இயற்றப்பட்ட ஆண்டு - 1958
* தமிழ்நாட்டில் “அகர முதலி திட்டம்” எப்போது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1977
* ரிப்பன் பிரபு காலத்தில் சென்னை கடற்கரையை 'மெரீனா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆபரேசன் பெயர் - ஆபரேசன் கக்கூன்
* தமிழ்நாட்டில் தலைமைச்செயலகம் ஆரம்பித்த போது உருவாக்கப்பட்ட முதல் துறை - பொதுப்பணித்துறை
* தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது - 1971
* தமிழ் நிலம்' என்பதன் நோக்கம் - தமிழகத்தின் அரசுத்துறைகளை கணினிமயமாக்குதல்
* வேலூர் கோட்டை -  பொம்மி ரெட்டியாரால் கட்டப்பட்டது.
* காவல்துறையில் குமஸ்தாவாக இருந்து வேலையை துறந்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் - சுப்பிரமணிய சிவா
* தில்லையாடி வள்ளியம்மை' பிறந்த ஊர் - ஜோகன்ஸ்பர்க்
* மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட ஆண்டு - 1957
* கோவைக்குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி - சிறுவாணி ஆறு
* கூவம் நதி உருவாகும் மாவட்டம் - திருவள்ளூர்
* பாலாறு நதி உருவாகும் மாநிலம் - கர்நாடகம்
* பழங்காலத்தில் அன்பொருனை என்று அழைக்கப்படும் நதி - அமராவதி
* தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதி - பவானி
* முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட ஆண்டு - 1895
* கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உயர்ந்த மலை - சேர்வராயன் மலை
* தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து எந்த கணவாயின் வழியாய் நடைபெறிகிறது - ஆரியன்காவுக் கணவாய்
* கஞ்சமலை மற்றும் சாக்குக்குன்றுகள் அமைந்துள்ள மாவட்டம் - சேலம்.                                                                                                                     
* ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட தேதி?
ஜனவரி 1, 1949

* இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (ஐடிபிஐ) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1964

* ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்பரேஷன் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1977

* நாபார்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?
1982

* தொழில் நலிவு குறித்து நியமிக்கப்பட்ட குழு எது?
ஓம்கர் கோஸ்மாமி குழு

* ரிசர்வ் வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
மும்பை

* மறைமுக வரிகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு எது?
எல்.கே.ஜா. குழு

* இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட பங்குச் சந்தைகளின் எண்ணிக்கை?
24

* புதிய பங்குச் சந்தை தோற்றுவித்தல் பற்றிய குழு?
எம்.ஜே.ஃபிர்வானி குழு

* சேவை வரியை பரிந்துரை செய்த குழு எது?
இராஜா செல்லையா குழு

* உற்பத்தி திறனை பணத்தைக் கொண்டு அளவிட்டவர் யார்?
பால் சாமுவேல்சன்

* தில்லி மெட்ரோ ரயில்வே தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
2002

* கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எது?
கொல்கத்தா

* வடமேற்கு இரயில்வேயின் தலைமையகம் எது?
ஜெய்ப்பூர்

* எலக்ட்ரானிக்-போஸ்ட்(மின்னணு தபால்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
2001

* வணிக வங்கிகளை மறுசீரமைத்தல் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு எது?
எஸ்.என்.வர்மா குழு

* டோ ஜொன்ஸ் என்பது எதன் பங்குச் சந்தைக் குறியீடு?
நியூயார்க்

* மஞ்சள் புரட்சியுடன் தொடர்புடையது எது?
எண்ணெய் வித்துக்கள்

* 12வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
சி.ரங்கராஜன்

* ஜனஷ்ரி பீமயோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
2000

* இந்திய வரிகளில் மறைமுக வரிகள் வகிக்கும் சதவிகிதம்?
72 சதவிகிதம் 

இந்திய பெண் சாதனையாளர்கள்

* எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் - பச்சோந்திரிபால்
* ஆங்கில கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப்பெண் - ஆர்த்தி குப்தா
* உலகை கடல் வழியே சுற்றி வந்த முதல் இந்தியப்பெண் - உஜ்வாலா தேவி
* உலக அழகியான முதல் இந்தியப் பெண் - ரீட்டா பெரி
* பிரபஞ்ச அழகியான முதல் இந்தியப் பெண் - சுஷ்மிதா சென்.
* மேக ராகக் குறிஞ்சி என்ற ராகத்தின் புதிய பெயர் என்ன? - நீலாம்பரி
* நமது நாட்டில் முதன் முதலாக ரோடியோ ஒலிபரப்பு துவங்கப்பட்ட இடம் - மும்பை
* சமுத்திரகுப்தரை வரலாற்று ஆசிரியர்கள் எவ்வாறு அழைத்தனர் - இந்திய நெப்போலியன்
* 2001 -ஆம் ஆண்டு குஜராத் பூகம்பத்தின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி - புஜ்
* ஒரு சதுர மைல் என்பது எத்தனை ஏக்கர் - 640 ஏக்கர்
* கிரிகெட் விளையாட்டில் ரவி சாஸ்திரி செய்த சாதனை - ஒரு ஓவரின் 5 பந்துகளிலும் சிக்சர் அடித்தார்.
* மகாத்மா காந்தி எந்த நாட்டில் தனது பொது வாழ்க்கையைத் துவங்கினார் - தென் ஆப்பிரிக்கா
* வறுமை ஒழிப்பிற்காக ஐக்கிய நாடுகளின் விருது பெற்ற முதல் இந்தியர் - ஃபாத்திமா பீவி
* நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம் இந்த நிறத்தில் உள்ளது - கருநீலம்
* தமிழக அரசு சின்னத்தில் உள்ள கோயில் - ஸ்ரீவில்லிபுத்தூர்
* உலகின் முதல் கூட்டுறவு அமைப்பு எந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டது - இங்கிலாந்து
* எந்த இசைக்கலைஞருக்கு முதன் முதலாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது - எம்.எஸ். சுப்புலட்சுமி
* ராஜ்ய சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டு - 6 ஆண்டுகள்
* காரை முத்துப்புலவர் என்பது எந்த பிரபல தமிழ் கவிஞரின் புனைப் பெயர் - கண்ணதாசன்
* ஐரோப்பாவின் போர்க்களம் என்று அழைக்கப்படும் நாடு - பெல்ஜியம்
* உச்சக்கட்ட சக்தி ஒடும்போது உபயோகப்படுத்தப்படுகிறது
* கதிரியக்கம் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்படுகிறது
* 10-6 மீட்டர் என்பது ஒரு மைக்ரான்
* நீர்பரப்பின் மீது ஏற்படும் அலைகள் - குறுக்கலைகள்
* ஒரு விளிம்பை பொருத்து ஒளிக்கதிர் வளைவது - விளிம்பு விளைவு
* ஒளியின் நிறப்பிரிகை என்று அழைக்கப்படுவது - ஒரு முப்பட்டகத்தின் பல வண்ணங்கள் பிரிகின்ற நிகழ்ச்சியே.
* ஒலிபெருக்கி என்பது - மின்சக்தியை ஒலிசக்தியாக மாற்றும் நிகழ்வாகும்
* ஒளி மூலத்தின் நிறமாலை பட்டை நிறமாலை என அழைக்கப்டுகிறது.
* எக்ஸ் கதிர்களின் மின்னுட்டம் என்பது - ஒரலகு எதிர் மின்னுட்டம்
* தொலைநோக்கி பெட்டிகளுக்கு பெறப்படும் அலைகள் - மைக்ரோ அலைகள்
* மீதேனின் வடிவமைப்பு - சதுரமாகும்
* ஒடுக்காத சர்க்கரை - ஃப்ரக்டோஸ்
* ஹைட்ரஸீன் மற்றும் டை நைட்ரஜன் டெட்ராக்ஸைடு - ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
* உலக அழகியான முதல் இந்தியப் பெண் - ரீட்டா பெரி
* முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா
* முதல் பெண் சபாநாயகர் - ஷானோ தேவி
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (உ.பி)
* தில்லி அரியாசனத்தில் அமர்ந்து ஆண்ட முதல் பெண்மணி - ரஸியா சுல்தானா (1236-40)
* முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி
* முதல் பெண் எம்.ஏ. பட்டதாரி - சந்திரமுகிபோஸ்
* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா
* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு
* முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அமரி கெளர்
* முதல் பெண் அமைச்சர் (மாநிலம்) - விஜயலட்சும் பண்டிட் (உத்திரபிரதேசம்)
* முதல் பெண் முதல்வர் - சுசிதா கிருபளாணி (உ.பி)
* முதல் பெண் சபாநாயகர் - ஷானோ தேவி
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (உ.பி)
* முதல் பெண் பிரதமர் - இந்திரகாந்தி
* ஐ.நா. பொதுச்சபையின் தலைவியான முதல் இந்தியப் பெண் - விஜயலட்சுமி பண்டிட்
* முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி
* முதல் பெண் எம்.ஏ. பட்டதாரி - சந்திரமுகிபோஸ்
* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா
* முதல் பெண் ஐ,பி.எஸ் அதிகாரி - கிரண்பேடி
* முதல் பெண் வழக்கறிஞர் - கர்னெலியா சோரப்ஜி
* முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி
* முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி - அண்ணா சாண்டி
* முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி - ஆ.பாத்திமா பீவி
* முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - லீலாசேத்
* முதல் பெண் தலைமை பொறியாளர் - பி்.கே. தெரசியா
* முதல் பெண் - ஆங்கில பத்திரிகையின் தணிக்கையாளர் - தீண் வக்கில்
* முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா

Friday, July 11, 2014

அறிவுப் புதிர்

இந்தியாவின் பொற்கோயில் நகரம்

அமிர்தசரஸ்
 இந்தியாவின அரண்மனை நகரம்

கோல்கத்தா
 இந்தியாவின் நுழைவு வாயில்

மும்பை
 இந்தியாவின் விளையாட்டு மைதானம்

காஷ்மீர்
 இந்தியாவின் நறுமணத் தோட்டம்

கேரளா

 உலகில் பூந்தோட்ட நகரம்

சான்பிராஸ்சிஸ்கோ (அமெரிக்கா)

 55000 ஏரிகளைக் கொண்ட நகரம்

பின்லாந்து

  இந்தியாவில் ஐந்து நதிகளின் பூமி

பஞ்சாப்

 பிரம்ம புத்திரா உற்புத்தியாகும் நாடு

திபேத்                                                                                                                                                                                                                                                                                                                         1  மாலத்தீவுகளின் தலை நகரம் எது?

 மாலி

 தமிழ் நாவலுக்கு வித்திட்டவர்யார்?

 வேதநாயகம்பிள்ளை


 உலக வங்கி எங்கு உள்ளது?

 அமெரிக்கா

 எருதுகரடி என்ற வார்த்தை எதனுடன் 
தொடர்பு கொண்டது?

ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சந்தை


 பிலாய் எந்த தயாரிப்பில் சிறந்து 
விளங்குகிறது?

இரும்பு மற்றும் எஃகு

 இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எங்கு 
 உள்ளது?

பெங்களூரு                                                                                                                                                                                                                                                                                                                     ஹைபிஸ்கஸ் ரோசா சைனேசிஸ் (Hibiscus Rosasinesis) ..
இந்த அறிவியல் பெயர் கொண்ட பூ எது? 
 செம்பருத்தி

 கல்லக்குடி என்னும் டால்மியாபுரத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது?சிமெண்ட்

 இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?1975

 டால் ஏறி எங்குள்ளது?காஷ்மீர் பள்ளத்தாக்கு
                                                                                                                                                                                                                                                                                                                                        

 பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

 இராஜாராம் மோகன்ராய்

 தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது 
எந்த நகரம்? 

கோயம்புத்தூர்

 தமிழ்நாட்டின் நெல்களஞ்சியம் எது? 

தஞ்சாவூர்


 சுவாமி தயானந்த சரஸ்வதியின் இளமைக்கால 
பெயர் என்ன?

 சுவாமி தயானந்த சரஸ்வதியின் 
இளமைக்கால பெயர் மூல சங்கர்
             

பொது அறிவு

1.
சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
சாலையைக் கடக்க வேண்டும்


2. 
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? 
சீனா 


3. 
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? 
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் 


4. 
ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை? 
பயன்படுத்துதல் 


5. 
ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? 
லீவைஸ்ட்ராஸ், 1848 


6. 
காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது? 
கர்நாடகா 


7. 
வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
Tax Deducted at Source 


8. 
விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்? 
ஹெர்பார்ட் 


9. 
ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது? 
கரடி 


10. 
பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? 
லூயி பாஸ்டியர் 


11. 
சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை? 
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள் 


12. 
நமது தேசியத் தலைநகர்? 
புது டில்லி 


13. 
ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா? 
சரி 


14. 
இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________? 
தார் 


15. 
ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது? 
ஸ்காட்லாண்ட் 


16. 
கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்? 



17. 
“வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்? 
அர்ச்சனா 


18. 
உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்? 
புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை


19. 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்? 
COUPLES RETREAT 


20. 
மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது? 
1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது 






21.
யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி


22. 
தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது? 
1955 


23. 
தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? 
பிப்ரவரி 28 ஆம் நாள் 


24. 
நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? 
இந்தியா 


25. 
பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு? 
ரிக்டர் 


26. 
சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? 
இஸ்லாமியக் காலண்டர் 


27. 
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்? 
நீல் ஆம்ஸ்ட்ராங் 


28. 
சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது? 
2008 அக்டோபர் 22 


29. 
தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ. 


30. 
காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்? 
தமிழ்நாடு 


31. 
தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது? 
48% 


32. 
இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று? 
நிலக்காற்று 


33. 
இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? 



34. 
நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது? 
ராஜஸ்தான் 


35. 
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? 
பச்சேந்திரி பாய் 


36. 
வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்? 
1936 


37. 
பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது? 



38. 
பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது? 
திருநெல்வேலி 


39. 
தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது? 
14.01.1969 


40. 
_______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்? 
டேகார்டு 






41.
காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது


42. 
இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா? 
கார்பெட் தேசிய பூங்கா 


43. 
தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 
1983 


44. 
சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது? 
ஸ்ரீவில்லிபுத்தூர் 


45. 
SPCA என்பது? 
Society for the Prevention of Cruelty to Animals 


46. 
பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது? 
தலைமையாசிரியர் 


47. 
எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது? 
வீடு 


48. 
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது? 
லாசேன் (சுவிட்சர்லாந்து)


49. 
பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது? 
350 


50. 
கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்? 
10 


51. 
______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்? 
டெர்மன் 


52. 
நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்? 
16 


53. 
இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது? 



54. 
ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம் 


55. 
நமது நாட்டுக் கொடி ____________ வண்ணங்களைக் கொண்டது? 
மூன்று 


56. 
உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்? 
உயிரியல் 


57. 
நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்? 
கன்னத்தில் முத்தமிட்டால்


58. 
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்? 
ராஜகோபாலச்சாரி 


59. 
ISRO-ன் விரிவாக்கம்? 
Indian Satellite Research Organization 


60. 
PSLV-ன் விரிவாக்கம்? 
Polar Satellite Launch Vehicle 






61.
NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?
ஃபின்லாந்து


62. 
1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்? 
எம்.எஸ்.சுப்புலட்சுமி 


63. 
”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்? 
கிரேஸி கிரியேஷன்ஸ் 


64. 
பட்டம்மாளின் பேத்தி யார்? 
நித்யஸ்ரீ மஹாதேவன் 


65. 
2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்? 
ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்) 


66. 
”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்? 
பி.ஜி.வுட் ஹவுஸ் 


67. 
இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்? 
திரிபுரா 


68. 
சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்? 
ஜி.ஆர்.விஸ்வநாத் 


69. 
சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்? 
டைகர் 


70. 
இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்? 
கூத்தனூர் 


71. 
ராகங்கள் மொத்தம் எத்தனை? 
16 


72.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது? 
குடை 


73. 
இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன? 
காண்டாமிருகம், யானை, புலி 


74. 
அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்? 
ஸ்வீடன்


75. 
”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான் 


76. 
”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்? 
அங்கோலா 


77. 
”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது? 
தாய்லாந்து 


78. 
மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது? 
மெக்சிகோ 


79. 
அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது? 
அமெரிக்கா 


80. 
அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது? 
ரஷ்யா 






81.
”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்


82. 
உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது? 
பேரீச்சை மரம் 


83. 
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது? 
1801 


84. 
ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது? 
Write Once Read Many 


85. 
பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்? 
பனிச் சிறுத்தை 


86. 
நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்? 
கூகோல் 


87. 
விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு? 
இத்தாலி


88. 
தாஜ்மஹால் ______________ கல்லினால் கட்டப்பட்டது? 
கூழாங் 


89. 
எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா? 
தவறு 


90. 
மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா? 
சரி 


91. 
இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்? 
சகுந்தலா தேவி 


92. 
மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி? 
யாமினி 


93. 
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்? 
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம் 


94. 
டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? 
முகம்மது அசாருதீன் 


95. 
ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்? 
வெர்னர் வான் பிரவுன் 


96. 
எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்? 
ஜேம்ஸ் பக்கிள் 


97. 
நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்? 
எட்வர்ட் டெய்லர் 


98. 
அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்? 
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர் 


99. 
துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்? 
பி.வான்மாஸர் 


100. 
பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்? 
ஏ.ஜே.கார்னரின்






101.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்


102. 
சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்? 
அவாமி முஸ்லிம் லீக் 


103. 
2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்? 
ரெயில்வே மந்திரி 


104. 
பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்? 
லஸ்கர்-இ-தொய்பா 


105. 
இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்? 
ஆலம் ஆரா (1931) 


106. 
செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது? 
தொல் பொருள் ஆய்வுத் துறை 


107. 
புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்? 
புற்றுநோய் 


108. 
புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது? 
புகையிலை 


109. 
காமராசர் பிறந்த ஆண்டு? 
1903 


110. 
காமராசரின் தந்தை பெயர் என்ன? 
குமாரசாமி 


111. 
அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்? 
காமராசர் 


112.
காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்? 
3000 


113. 
காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்? 
1954 


114. 
காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது? 
கல்வி வளர்ச்சி நாள் 


115. 
திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது? 
காமராசர் 


116. 
“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார் 


117. 
வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்? 
காலா காந்தி 


118. 
பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்? 
காமராசர் 


119. 
உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
தீக்கோழி 


120. 
தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது? 
1930 






121.
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்


122. 
மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்? 
சேலம் 


123. 
தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன? 
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ) 


124. 
தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்? 
மலைப் பொந்து 


125. 
வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன? 
தேன் எடுத்தல் 


126. 
தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்? 
வேறு கூடு கட்டும் 


127. 
மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்? 
ரோபோ 


128. 
நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________? 
பெருமளவில் இல்லை 


129. 
செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது? 
விழுப்புரம் 


130. 
புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு? 
97.3% 


131. 
1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்? 
போபால்


132. 
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 
1972 


133. 
எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்? 
2000 (சிட்னி) 10,651 வீரர்கள்


134. 
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென் 


135. 
பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது? 
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு 


136. 
போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்? 
கருத்துசார்


137.
”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்? 
சிம்ம விஷ்ணு 


138. 
கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்? 
செங்குத்தான 


139. 
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்? 
சின்னூக் 


140. 
யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்? 
பதஞ்சலி முனிவர் 






141.
தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு


142. 
உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? 
இந்தியா 


143. 
தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? 
பைன் 


144. 
உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? 
மார்ச் 22 


145. 
முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்? 
நீலகிரி 


146. 
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்? 
ராஜஸ்தான் 


147. 
சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்? 
டுவிஸ்டர் 


148.
உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு? 
ஜெர்மனி 


149. 
தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது? 
நெய்வேலி 


150. 
சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது? 
நீர் மின்சக்தி 


151. 
தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்? 
ஆலோசனை வழங்குபவர் 


152. 
”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்? 
அந்தமான் நிக்கோபார் 


153. 
____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது? 
1978 


154. 
பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்? 
சேமிப்பு 


155. 
__________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது? 
பணம் 


156. 
ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது? 
ஜனவரி 


157. 
கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்? 
கிரேஸ் கோப்பர் 


158. 
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்? 
மீஞ்சூர் 


159. 
போலந்து நாட்டின் தலைநகர்? 
வார்சா 


160. 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி? 
விம்பிள்டன் 






161.
ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
ஸ்பெயின்


162.
லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
செக் குடியரசு


163. 
மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது? 
கிண்டி 


164. 
எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை? 
மதிப்புக் கூட்டப்பட்ட வரி 


165. 
ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது? 



166. 
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது? 
புதுக்கோட்டை 


167. 
சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்? 
1959 


168. 
கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது? 
ஆஸ்திரேலியா 


169. 
சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்? 
அட்லாண்டிக் 


170. 
உலகின் நீண்ட கடற்கரை எது? 
மியாமி 


171. 
தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்? 
டிசம்பர் 27 1911 


172. 
உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு? 
பிரான்ஸ் 


173. 
ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்? 
திட்டம் வகுப்போர் 


174. 
உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்? 
பசிபிக் 


175. 
மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது? 
மெக்ஸிகோ (7349 அடி) 


176. 
விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்? 
ரோஜர் பெடரர் 


177. 
ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? 
சுவிட்சர்லாந்து 


178. 
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்? 
யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்) 


179. 
எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன? 
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா 


180. 
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது? 
டோன் லேசாப் 






181.
மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
பர்மா


182. 
முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்? 
பென்னி குவிக் 


183. 
”சுதர்மம்” என்றால் என்ன? 
கடமை உணர்வு 


184. 
மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? 
ஜூலை 1 


185. 
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா? 
ஹீல் 


186. 
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்? 
சந்தால் 


187. 
மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்? 
சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் 


188. 
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன? 
போபால் 


189. 
மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 
1956 


190. 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை? 
230 


191. 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை? 
29 


192. 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை? 
11 


193. 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை? 
50 


194. 
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி? 
ஹிந்தி 


195. 
மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்? 
நர்மதா, தப்தி, மகாநதி 


196. 
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு? 
சதுப்பு நில மான் 


197. 
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை? 
பாரடைஸ் பிளைகேட்ச்சர் 


198. 
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்? 
இல்லினாய்ஸ் 


199. 
இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்? 
என்.கோபாலசாமி ஐயங்கார் 


200. 
இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்? 
டாக்டர். வேணுகோபால் 






201.
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு


202. 
எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்? 
பச்சேந்திரி பால் 


203. 
சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்? 
லி கொர்புசியர் 


204. 
இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்? 
ஜே.ஏ.ஹிக்கி 


205. 
இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்? 
ஜோதி பாசு 


206. 
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்? 
ஐசென் ஹோவர் 


207. 
இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்? 
ராஜ்குமாரி அம்ரித் கவுர் 


208. 
இந்திய-பாகிஸ்தான் எல்லை? 
வாகா 


209. 
அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்? 
போயிங் 


210. 
அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்? 
ஆக்டா 


211. 
கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? 
திருநெல்வேலி 


212. 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்? 
யுரேனியம் 


213. 
குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது? 
திருநெல்வேலி 


214. 
பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா? 
தவறு 


215. 
நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? 
கோதாவரி 


216. 
வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்? 
மூன்றாம் நிலை தொழில்புரிவோர் 


217. 
அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? 
பாபநாசம் 


218. 
உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்? 
குஜராத் 


219. 
தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்? 
பிலாஸ்பூர் 


220. 
சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை? 
NH45 






221.
வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
தூத்துக்குடி


222. 
எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது? 
லிக்னைட் 


223. 
தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்? 
மதுரை 


224. 
விட்டிகல்சர் என்பது? 
திராட்சை வளர்த்தல் 


225. 
”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது? 
சென்னை 


226. 
கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன? 
22 கஜம் 


227. 
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது? 
ஈரோடு 


228. 
இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்? 
ராதா கிருஷ்ணன் 


229. 
தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்? 
ஜார்கண்ட் 


230. 
இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?
ஐதராபாத் 


231.
தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது? 
குற்றாலம் 


232. 
பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன? 
பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் 


233. 
ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு? 
42.19 செ.மீ. 


234. 
யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்? 
ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல் 


235. 
ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது? 
புகுஷிமா 


236. 
ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்? 
ஹிரோசிமா மற்றும் நாகசாகி 


237. 
ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்? 
இரண்டு லட்சம் பேர் 


238. 
ஜப்பானியர் வணங்கும் பறவை? 
கொக்கு 


239. 
ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்? 
ஜப்பான் சிறுமி சடகோ சகாகி 


240. 
காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்? 
ஓரிகாமி 






241.
இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?
ஆல்ட்டோ


242. 
“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது? 
பசிபிக் பெருங்கடல் 


243. 
”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா? 
சரி 


244. 
உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு? 
கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா) 


245. 
1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது? 
மைக்கேல் ஜாக்ஸன் 


246. 
தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்? 
காளிதாஸ் 


247. 
தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்? 
பிப்ரவரி-18 


248. 
நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு? 
நாய் 


249. 
எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்? 
60 


250. 
பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு? 
இந்தியா 


251. 
இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? 
டில்லி 


252. 
தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்? 
புனே 


253. 
மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்? 
ஒரிசா 


254. 
அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்? 
விருதுநகர் 


255. 
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 
1998 


256. 
கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்? 
44% 


257. 
சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்? 
ஹவுசான் 


258. 
எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்? 
மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும் 


259. 
இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்? 
7516 கி.மீ. 


260. 
மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்? 
2200 முறை 






261.
கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
5 வது இடம்


262. 
இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன? 
3,80,000 டன் 


263. 
இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது? 
மும்பை 


264. 
உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? 
மூன்றாமிடம் 


265. 
தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது? 
சேலம் 


266. 
ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது? 
1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது 


267. 
ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன? 
புவி உச்சி மாநாடு 


268. 
ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது? 
கர்நாடகா 


269. 
அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது? 
வனவிலங்கு 


270. 
சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்? 
ஆர்.கே. சண்முகம் செட்டியார் 


271. 
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? 
கன்னியாகுமரி 


272. 
காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்? 
டாக்டர்.ராமச்சந்திரன் 


273. 
தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்? 
முதல்வர் 


274. 
தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? 
காளியம்மாள் 


275. 
ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்? 
பராங்குசம் நாயுடு 


276. 
தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது? 
சென்னை 


277. 
தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? 
புதுக்கோட்டை 


278. 
தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன? 
சிவகாசி 


279. 
கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்? 
கும்பகோணம் 


280. 
ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது? 
ஆரல்வாய் மொழி 






281.
தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
காரைக்குடி


282. 
தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது? 
வேலூர் 


283. 
மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது? 
கொல்லங்குடி 


284. 
ரமண மகரிஷி பிறந்த இடம்? 
திருச்சுழி 


285. 
போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்? 
டென்னிஸ் 


286. 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்? 
பட்டோடி நவாப் 


287. 
ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை? 
மனோரமா 


288. 
தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? 
நவம்பர்-19 


289. 
தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்? 
பிப்ரவரி-28 


290. 
அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்? 
சித்திரப்பாவை 


291. 
ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்? 
பத்மா சுப்ரமணியம் 


292. 
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்? 
செப்டம்பர் 5 


293. 
1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்? 
ஜே.ஆர்.டி.டாட்டா 


294. 
சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? 
டாக்கா 


295. 
சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது? 
பாண்டிச்சேரி 


296. 
பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்? 
மானக்‌ஷா 


297. 
உருக்காலை உள்ள இடங்கள்? 
பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா 


298. 
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்? 
இந்தியன் ரயில்வே 


299. 
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? 
சென்னை 


300. 
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? 
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 






301.
முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா


302. 
நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது? 
19 ஆம் நூற்றாண்டு 


303. 
ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை? 
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்) 


304. 
பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்? 
ஆண்கள் 


305. 
இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது? 
அமிர்தசரஸ் (பஞ்சாப்) 


306. 
தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது? 
வேலூர் 


307. 
காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன? 
கயத்தாறு 


308. 
நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா? 
சரி 


309. 
இந்தியாவின் செயற்கை கோள்? 
INSAT 


310. 
சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்? 
நிலவை ஆய்வு செய்ய 


311. 
நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது? 
ஸ்ரீஹரிகோட்டா 


312. 
இலங்கையின் தலைநகர்? 
கொழும்பு 


313. 
இங்கிலாந்தின் தலைநகர்? 
லண்டன் 


314. 
ஜப்பானின் தலைநகர்? 
டோக்கியோ 


315. 
பாகிஸ்தானின் தலைநகர்? 
இஸ்லாமாபாத் 


316. 
ஆஸ்திரேலியாவின் தலைநகர்? 
கான்பெரா 


317. 
தென்னாப்பிரிக்காவின் தலைநகர்? 
ஜோகன்னஸ்பர்க் 


318. 
தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்? 
நெல்சன் மண்டேலா 


319. 
பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது? 
ஆஸ்திரேலியா 


320. 
குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது? 
ஆஸ்திரேலியா 






321.
எகிப்து நாட்டின் தலைநகர்?
கெய்ரோ


322. 
ஜே.பி.எல்-விரிவாக்கம்? 
ஜெய்ப்பூர் பிரிமியர் லீக் 


323. 
ராஜஸ்தானின் தலைநகர்? 
ஜெய்ப்பூர் 


324. 
பிரான்ஸ் நாட்டின் தலைநகர்? 
பாரிஸ் 


325. 
மலேசியாவின் தலைநகர்? 
கோலாலம்பூர் 


326. 
காஷ்மீரின் கடைசி மஹாராஜா? 
ஹரிசிங் 


327. 
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்? 
இயான் போத்தம் 


328. 
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது? 
ஜூலை 7, வயது 31 


329. 
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்? 
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி 


330. 
டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு? 
207 கி.மீ 


331. 
மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது? 
பிரான்ஸ் 


332. 
உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்? 
ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில் 


333. 
ரஷ்யாவின் தலைநகரம்? 
மாஸ்கோ 


334. 
பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது? 
பஞ்சாப் 


335. 
வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது? 
ஒட்டப்பிடாரம் 


336. 
உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? 
இந்தியா 


337. 
கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது? 
பெல்ஜியம் 


338. 
பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? 
மகாத்மா காந்தி 


339. 
மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது? 
துபாய் 


340. 
அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது? 
11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு 






341.
தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?
நாமக்கல்


342. 
உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்? 
ஷாங்காய் 


343. 
தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்? 
எபிகல்சர் 


344. 
உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது? 
தென் ஆப்பிரிக்கா 


345. 
தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? 
சென்னை 


346. 
இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன? 
ஆலம் ஆரா (1931) 


347. 
இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்? 
குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா 


348. 
டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன? 
ஏடோ 


349. 
சீனாவின் அன்றைய பெயர் என்ன? 
கத்தே 


350. 
முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? 
பெனாசீர் புட்டோ 


351. 
தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது? 
மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது) 


352. 
மால்குடி என்பது? 
கற்பனை ஊர்


353.
காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா? 
தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்) 


354. 
கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா? 
தவறு 


355. 
கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது? 
கோல்கொண்டா (ஆந்திரா) 


356. 
பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்? 
நெருப்பு 


357. 
எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது? 
ஆஸ்திரேலியா 


358. 
பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்? 
வஞ்சிக் கோட்டை வாலிபன் 


359. 
குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது?
கொள்ளு திண்ண 


360. 
கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது? 
குசேலன் 






361.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?
விருது நகர் (விருதுப் பட்டி)


362. 
உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா? 
சரி 


363. 
M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்? 
மதராஸ் 


364. 
நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா? 
சரி 


365. 
சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்? 
ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்) 


366. 
திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? 
தின்திருணிவனம் 


367. 
விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன? 
முதுகுன்றம் 


368. 
பியானோ சட்டங்களின் எண்ணிக்கை? 
88 


369. 
ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? 
22 


370. 
சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா? 
ஹார்ட்டின் ராஜா 


371. 
அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்? 
வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47 


372. 
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்? 
ஜான் வில்லியம்ஸ் 


373. 
1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்? 
இஸ்ரேல் 


374. 
பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்? 
கறுப்பு, வெள்ளை 


375. 
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி? 
இந்தியா 


376. 
குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்? 
மரியா மாண்டிச்சேரி 


377. 
அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்? 
மூளை 


378. 
எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது? 
கடலூர் 


379. 
2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? 
பிரேசில் 


380. 
மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்? 
ரவீந்திரநாத் தாகூர் 






381.
கார்டெல் என்றால் என்ன? 
நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது. 


382. 
கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை? 
தங்கம், கச்சா எண்ணை 


383. 
அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்? 
அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி 


384. 
உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்? 
வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா) 


385. 
ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன? 
LONDON INTER BANK OFFER RATE 


386.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?
5


387. 
தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்? 
ராஜஸ்தான் 


388. 
எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது?
1862 


389. 
இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்? 
டாக்டர்.ராஜேந்திர பிரசாத் 


390.
கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?
கர்நாடகா


391. 
ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது? 
1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு 


392. 
IOC ன் விரிவாக்கம்? 
International Olympic Committee 


393. 
எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்? 
1908 


394. 
கலைவாணர் பிறந்த ஊர்? 
ஒழுகினசேரி 


395. 
சிங்கப்பூரின் தலைநகர்? 
சிங்கப்பூர் சிட்டி 


396. 
தமிழ்நாடு அரசு சின்னம்? 
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும் 


397. 
கேரளா அரசு சின்னம்? 
இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம் 


398. 
கர்நாடகா அரசு சின்னம்? 
மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம் 


399. 
ஆந்திரா அரசு சின்னம்? 
பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம் 


400. 
ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு? 
கபடி 






401.
கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?
12


402. 
கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்? 



403. 
மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது? 
ஆலம் கே என்பவரின் டைனாபுக் 


404. 
முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி? 
ஒஸ்போர்ன் (1981) 


405. 
மடிகணிணிகளின் எடை? 
2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை 


406. 
மடிக்கணிணியின் திரை அளவு? 
35 செ.மீ முதல் 39 செ.மீ வரை 


407. 
வெள்ளை யானைகளின் நிலம்? 
தாய்லாந்து 


408. 
கடலின் ஆபரணங்கள்? 
மேற்கிந்திய தீவு 


409. 
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்? 
சுவிட்சர்லாந்து 


410. 
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு? 
நார்வே 


411. 
அரபிக் கடலின் அரசி? 
கொச்சி 


412. 
அதிகாலை அமைதி நாடு? 
கொரியா 


413. 
இந்தியாவின் சுவிட்சர்லாந்து? 
காஷ்மீர் 


414. 
புனித பூமி? 
பாலஸ்தீனம் 


415. 
ஆஸ்திரேலியாவின் முன் கதவு? 
டார்வின் நகரம் 


416. 
மரகதத் தீவு? 
அயர்லாந்து 


417. 
தடுக்கப்பட்ட நகரம்? 
லாசா 


418. 
பண்பாடுகளின் தாய்நகரம்? 
பாரிஸ் 


419. 
தண்ணீர் தேசம், மிதவை நகரம்? 
வெனிஸ் 


420. 
ஏரிகளின் நகரம்? 
ஸ்காட்லாந்து 






421.
தீவுகளின் நகரம்?
மும்பை


422. 
வானளாவிய நகரம்? 
நியூயார்க் 


423. 
ஆக்ராவின் அடையாளம்? 
தாஜ்மகால் 


424. 
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது? 
நீலகிரி 


425. 
புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது? 
நாக்பூர் 


426. 
பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC)உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? 
சந்தோஷ் சிவன் 


427. 
முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது? 
இந்தியா கேட் 


428. 
K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்? 
புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு 


429. 
ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது? 
மதுரை 


430. 
ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்? 
தர்மத்தின் தலைவன் 


431. 
லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்? 
உயிரே உனக்காக 


432. 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? 
நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்) 


433. 
அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்? 
திரிபுரா 


434. 
கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன? 
72 


435. 
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்? 
இதய மலர் 


436. 
ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது? 
மோகன் 


437. 
எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது? 
ஃப்ரெஞ்ச் 


438. 
கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? 
சிவ பக்தர்கள் 


439. 
சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்? 
சிவலிங்கம் 


440. 
ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்? 
க 






441.
ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்?



442. 
ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்? 
ங 


443. 
ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்? 
சு 


444.
ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்? 
ரு 


445. 
ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்? 
சா 


446. 
ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்? 
எ 


447. 
ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்? 
அ 


448. 
ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்? 
கி 


449. 
ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்? 
ய 


450. 
ஒரு ஜதை(ஜோடி) என்றால் என்ன? 
2 பொருட்கள் 


451. 
1 டஜன் என்றால் என்ன? 
12 பொருட்கள் 


452. 
1 குரோசு என்றால் என்ன? 
12 டஜன் (144 பொருட்கள்) 


453. 
1 ஸ்கோர் என்றால் என்ன? 
20 பொருட்கள் 


454. 
ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? 
365 நாட்கள் 


455. 
லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? 
366 நாட்கள் 


456. 
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்? 
லீப் வருடம் 


457. 
100 சதுர மீட்டர் என்பது? 
1 ஆர் 


458. 
100 ஆர் சதுர மீட்டர் என்பது? 
1 ஹெக்டேர் 


459. 
ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை 


460. 
கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
பர்மா 






461.
பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
இங்கிலாந்து 


462. 
டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? 
அமெரிக்கா, மலேசியா 


463. 
யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
சீனா 


464. 
யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? 
பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ் 


465. 
லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? 
துருக்கி, இத்தாலி 


466. 
யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
ஜப்பான் 


467. 
ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
ரஷ்யா 


468. 
கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
டென்மார்க் 


469. 
ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
ஹங்கேரி 


470. 
பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
மெக்ஸிகோ 


471. 
குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? 
சுவீடன் 


472. 
உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது? 
ஜூலை 11 


473. 
உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது? 
1840 


474. 
உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? 
1927 


475. 
உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? 
1960 


476. 
உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? 
1987 


477.
உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது?
1999


478. 
உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது? 
2011 


479. 
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு? 
சீனா 


480. 
உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு? 
இந்தியா 






481.
மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
மால்தஸ்


482. 
இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது? 
ரா 


483. 
கல்லணையைக் கட்டியவர் யார்? 
கரிகால சோழன் 


484. 
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்? 
ராஜராஜ சோழன் 


485. 
நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது? 
சென்னை 


486. 
அணுகுண்டை விட ஆபத்தானது எது? 
பிளாஸ்டிக் 


487. 
இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்? 
அசோசெம் 


488. 
கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்? 
அடா லவ்லேஸ் 


489. 
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்? 
ஜெகதீஷ் சந்திரபோஸ் 


490. 
நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா? 
தேசிய விழா 


491.
ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது? 
டாக்டர்.இராதாகிருஷ்ணன் 


492. 
நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன? 
அரபி 


493. 
தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்? 
ஆனைமுடி 


494. 
தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது? 
14.01.1969 


495. 
டென்மார்க் நாட்டின் தலைநகர்? 
கோபன்ஹேகன் 


496. 
”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்? 
ராகுலால் 


497. 
NCBH - விரிவாக்கம்? 
New Centurian Book House 


498. 
தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது? 
கட்டா மீட்டா (அக்‌ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்) 


499. 
”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது? 



500. 
சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது? 
சீன எல்லையில் 






501.
கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?
விளையாட்டு பலூன்கள்


502. 
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது? 
லிஸ்பன் 


503. 
பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்? 
பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் 


504. 
ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்? 

5

1) பி.ஐ.எஸ். முத்திரை

2) தங்கத்தின் சுத்தத் தன்மை

3) எந்த நிறுவனம் (அ) எந்த பகுதியில் அந்த நகைக்கு தரச்சான்று வழங்கியுள்ளது

4) நகையை விற்கும் கடையின் பெயர்

5) எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது 


505. 
தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது? 
தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது 


506. 
பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு? 
முறையே 23, 22, 21, 18, 14, 9 


507. 
ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்? 
2000-A ,2001-B ,2002-C ... 


508. 
இ.பி.எப் என்றால் என்ன? 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 


509. 
வி.பி.எப் என்றால் என்ன? 
வாலண்டரி புராவிடெண்ட் பண்ட் 


510. 
டி.ஏ. என்றால் என்ன? 
அகவிலைப்படி 


511. 
கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்? 
உச்சிப் பிள்ளையார் கோயில் 


512. 
ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? 
சினிமா 


513. 
புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? 
கட்டடக் கலை 


514. 
இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்? 
செபஸ்டியான் வெட்டால் 


515. 
காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்? 
கமலேஷ் சர்மா 


516. 
”தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்? 
எஸ். ராமதுரை 


517. 
தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்? 
பிரதமர் 


518. 
வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்? 
வர்கீஸ் குரியன் 


519. 
ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?
1)டியூஸ் 2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால் 
பெனால்டி கார்னர் 


520. 
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது? 
எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்