Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Friday, October 3, 2014

மருத்துவ குணம் வாய்ந்த புதினா, புதினாவில் இத்தனை குணங்களா?

மருத்துவ குணம் வாய்ந்த புதினா, புதினாவில் இத்தனை குணங்களா?



உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்களின் பால பாடம். நமது முன்னோர் தங்களுக்கு வரும் பிணிகளை உணவில் மாற்றங்களை செய்வதன் மூலமே போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்கள் உணவில் அடிக்கடி இடம் பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.
புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றனவாம். இதில் ஏ.பி.சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, புரதம் என்று பல சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
ஐந்து ரூபாய்க்கு கைநிறைய கிடைக்கும் புதினாவின் மருத்துவ சக்தி அபாரமானது. புதினாவை உணவில் அனைத்து கீரைகள் மற்றும் காய்கறிகளுடனும் சேர்த்து பயன்படுத்தலாம். பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்று வலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச் சிக்கல், உப்புசம், வயிற்றுப் போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்குவதுடன், காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும். செரிமானம் ஆவதில் பிரச்சினை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கி விடும்.
ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச் சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி குழந்தைகள் வீரிட்டு அழுவது நிற்கும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மென்தால் என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து பற்பசையுடன், காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீ வைத்து, நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். மூட்டு வலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும். புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஊளைச் சதை குறைந்து ‘சிலிம்’ ஆகலாம். புதினா பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் உலக அளவில் நடந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் புதினாவை பற்றிய பல புதிர்களை அவிழ்க்க வாய்ப்பு உள்ளது.

Wednesday, September 17, 2014

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
 
உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.
 
பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.
 
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்
 
அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.
 
புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த வனசா எர், அதே சமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது. அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப் பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Thursday, September 11, 2014

பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. ஆப்பிள் கிலோ 40 ரூபாய்க்கு மேலே விற்கும்போது அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ ரூபாய் 2.50 மட்டுமே. ஆகவே பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது.Image result for papaya images
பழங்களில் மிக மிக குறைவான கலோ¡¢ பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோ¡¢களே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
மத்திய மற்றும் தென் அமொ¢க்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன. அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-c மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எ¡¢ச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.
அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயா¡¢க்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீ¡¢ம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம்.
எப்படி நல்ல பப்பாளி பழத்தை தேர்ந்தெடுப்பது?


1. விரலால் அழுத்தி பார்க்கும்போது குழி விழாமலும். மிகவும் கெட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
2. நன்கு பழுத்த பப்பாளியை விட முக்கால் பாகம் பழுத்த பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.
3. தேவைப்பட்டால் பப்பாளி துண்டுகளுடன் சர்க்கரை, சாட்மசாலா அல்லது லெமன் சூஸ் சேர்த்து சாப்பிடலாம்.
4. குளிர் சாதன பெட்டிகளில் வைத்து சாப்பிடாமல் அவ்வப்போது பழுத்தவுடன் சாப்பிட்டால் பப்பாளி மிக சுவையாகவும் இருக்கும்.
பப்பாளி பழத்தை உபயோகித்து சுவையான மோர் தயா¡¢க்கலாம். ஒரு கப் தயிர், ஒரு கப் பழம் துண்டுகள், பாதி எலுமிச்சம் பழரசம், உப்பு, சர்க்கரை, தேன் மற்றும் மிளகு, புதினா, தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பப்பாளி மோர் தயா¡¢த்து பருகினால் மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது. குழந்தைகள் விரும்பி அருந்துவர்.
பப்பாளி பன்னீர் சாலட் செய்ய ஒரு கப் பன்னீர், வெள்ளா¢க்காய் அரை கப், கொட்டை இல்லாத மாதுளம் விழுதுகள் அரைகப், எலுமிச்சை ரசம் சோயா சாஸ், தேவைக்கேற்ப தேன், உப்பு, மிளகு ஆகியவைகளை கலந்து சாப்பிட்டால் சுவையோ சுவை. எந்த நோயும் நம்மை அண்டாது. பப்பாளி காயின் தோலை சீவி பஜ்ஜியும் செய்து சாப்பிடலாம்.

இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகா¢க்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீ¡¢ல் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொ¡¢யலில் சேர்த்து பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.



 
வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்
இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.
மலோ¢யா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
தாய்ப்பால் சுரக்கும்
மாதவிலக்குக் கோளாறுகளை சா¢ செய்கிறது .



சளித்தொல்லை நீங்க:
1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.
2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலூ¢க்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
காது அடைப்பு, வலி நீங்க:
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.
குறிப்பு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எ¡¢ச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
           

Wednesday, September 10, 2014

வாழைப்பழம் மருத்துவ பயன்கள்


1.செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி
6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
7.மஞ்சள் வாழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.                                     




வாழைப்பழம் :- மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசாp உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தௌpவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.
வாழைப்பழம் மருத்துவ பயன்கள் 

1.செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி

6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 

7.மஞ்சள் வாழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.

Monday, July 28, 2014

அஜினா மோட்டோ!

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும்
மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின்
ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.
இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம்
குளுடோமேட் ஆகும்.
இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக்
கொள்வதால் உடல் நலத்திற்குக்
கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உணவில் 3
கிராமுக்கு அதிகமாக
அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி,
நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப்
போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட
வாய்ப்புளளது.
இது போன்ற பல்வேறு காரணங்களால்
உணவுப் பொருட்களில்
அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக்
கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம்
அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப்
பொருட்களில்
அஜினாமோட்டா சேர்ப்பதற்குத்
தடை விதிக்கப்பட்டுள்ளது.
ருசிக்காக உங்களை நீங்கள் அழித்துக்
கொள்ளாதீர்கள்...

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
                                                     
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 

இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது.
வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. 
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; 
பரோட்டாவும் பிரபலமடைந்தது. 

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.



இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
  
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை 


குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , 

எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,
நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் 
நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 


இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள் .

ஆர்கானிக் உணவுப்பொருட்கள் பயன்


undefined
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.
உப்பு:
இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.
ரீபைண்ட் ஆயில்:
செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.
வெண்ணெய், நெய், வனஸ்பதி:
வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.
உலர்ந்த தானியங்கள்:
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி:
அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சந்தை காய்கறி, பழங்கள்:
உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.
பால்:
பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.
கோலா, காபி, டீ:
இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.
சர்க்கரை:
சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.
ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

தயிர்

undefined
ஜீரண சக்தி அதிகரிக்கும் தயிர் (Curd)! தயிர் உணவில் உள்ள மருத்துவ தன்மைகள்..

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(இந்த கட்டுரையை படித்த பின்பு உங்களுக்கும் தயிர் இல்லாமல் உணவு இல்லை என்ற நிலை வரும் என நம்புகிறோம் )

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பாலை திரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.(பனீரை தனியாக எடுத்த பிறகு இருக்கும் whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.



பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.



மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் சி’யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

Sunday, July 13, 2014

வெங்காயம்

காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். அது மட்டுமின்றி திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.மேலும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம்.அதே போல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.அதிலும் உண்மையில்லையாம்.
இவைகளையெல்லாம் விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம்தான் என்பதை மடடும் உறுதி படுத்தி இருக்கிறார்கள். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளதால் தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது;.
நமமை மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.
முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.
சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.
புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப் பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.
முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்

BOVONTO – குளிர்பானம் பற்றிய ஒரு பார்வை !!!

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது…
தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான்  ”BOVONTO”.
1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு  முன்பு கொடி கட்டி பறந்த கலர், சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது.
உலகமயமாக்கலுக்க கு  பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI, COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.
ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான். அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்ட னர்.
அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்கள டம் `BOVONTO‘ அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..
குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர்.
அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்கு கொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக  வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர். இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர்.
உள்ளூர் பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன. இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது.
பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன் றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.
( கர்நாடகாவில் சில விவசாயிகள் பூச்சி மருந்துக்கு பதிலாக கோக்- கை பயன்படுத்தியதால் அமோக விளைச்சல் பெற்ற செய்தியை அறிந்தும், பெப்ஸியில் கரப்பான் பூச்சிகளை கண்டெடுத்த பின்பும் அதனை நம் மக்கள் வாங்கி குடிப்பது இன்றும் தொடர்கிறது)
ஆனால் இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO’வை குடித்துப்பாருங ்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.
கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.
ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும். மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை. பூச்சி கொல்லி மருந்துகளான PEPSICOKE போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும்.
ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும் ……

சப்போட்டா பழம் பற்றிய தகவல்


சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும்
தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.
100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது.  எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.
சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.
சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில்
அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்தஉதவிபுரிகிறது. 
தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும்.
சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிரக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். 
காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம்
மின்னும்.
இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன
ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு எனஅமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப்
பருகினால், இரத்தபேதி குணமாகும்.