Saturday, September 13, 2014

சங்குகள் பற்றி தொடரும் ஆராய்ச்சிகள்

Image result for சங்குகள் images
மின்னணுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் புதிய பொருட்களை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் நிபுணர்கள் சிலர், கடற்கரைகளில் போய் சோழிகளையும், சங்குகளையும் தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.



கரிம வேதிப்பொருட்கள் சேர்ந்து எவ்வாறு வியப்பூட்டும் வடிவங்களில் சங்குகளையும், சோழிகளையும் உருவாக்குகின்றன என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தொழில்துறைக்குத் தேவையான பல படிவங்களை உருவாக்குவதற்கான புதிய முறைகள் தெரியவரலாம் என்பது அந்த நிபுணர்களின் எண்ணம்.




உயிரிகள், வேதிவினை புரியாத ஜடப்பொருள்களை ஓடுகளாகவும், எலும்புகளாகவும், வேறு பல உறுப்புகளாகவும் மாற்றிக்கொள்கின்றன. இந்தச் செயல்முறைக்கு உயிரி கனிமமாக்கம் என்று பெயர். உயிரிகளில் குறைந்தது 40 கனிமங்களாவது திசுக்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.




சுண்ணாம்புக் கற்களிலும், சுண்ணாம்புப் பாறைகளிலும் உள்ள கால்சியம் கார்பனேட்டை பல்வேறு உயிரிகள் உட்கவர்ந்து கொள்கின்றன. அது மெல்லுடலிகளில் கூடுகளையும், நுண் ஆல்கைகளில் செல்களையும் உருவாக்க உதவுகிறது. தாவரங்களில் கால்சியம் கார்பனேட்டுகளாக சேமித்து வைக்கப்படுகிறது.



முதுகெலும்பிகளின் எலும்புகள் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. ஆல்கைகள், சில கூழ்பஞ்சுகள் ஆகியவற்றின் கட்டமைப்புகள் சிலிக்கானால் ஆனவை. இரும்பு, பேரியம், ஸ்டிரான்சியம் ஆகியவை உயிரிகளின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
Image result for சங்குகள் imagesபிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மான், இம்பீரியல் வேதித் தொழிலகத்தின் டெரக் பிர்ச்சால் ஆகியோர், புரதங்களைப் போன்ற உயிரி மூலக்கூறுகள், உயிரி கனிமமாதலை ஒழுங்குபடுத்தி, எலும்புகளும், உடல்கூடுகளும் சரியான முறையில் உருவாக வைப்பதை ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு கனிமத்தின் அணுக்கள், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டும் கூடி இணையுமாறு உயிரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதை மான் குழுவினர் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.




அதற்கான விடை கிடைக்கும்போது தொழில்துறையில் ஒரு புரட்சிக்கு வித்திடுவதாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை

No comments:

Post a Comment