Friday, August 1, 2014

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள்

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள்
# வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான் றுகள் தேவை?
இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்று கள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களு டன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு ‘படி வம் 2’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படி வம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும்
இரு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 30-ம், அதனுடன் சேர்த்து நான்கு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 60-ம் கட்டணமாக செலுத் த வேண்டும்.
# பழகுநர் உரிமம் பெற்று எத்தனை மாதங்களுக்குள் ஓட்டுநர்உரிமம் பெற லாம்?
பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லு படியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவ undefinedதற்காக வழங்கப்படுகிறது. பழகுநர் உரிமம் பெறும்போ து, வாக னத்தை ஓட்டிக் கா ட்டுவதோடு சாலைவிதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வே ண்டும்.
# மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற முடி யுமா?
மாற்றுத் திறனாளிகளின் உடல் சார்ந்த பிரச்சினைக்கு ஏற்ப அவர் கள் எளிதில் இயக்கும்படி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்க வே ண்டும். நடக்க இயலாத மாற்றுத் திற னாளிகள் இரு சக்கர வாகன ங்களை இயக்க கூடுதல் சக்கரங்கள் பொருத்த ப்பட்டிருக்க வே ண்டும்.
காது கேளாத, வாய் பேச இயலாத மாற் றுத் திறனாளிகள் பின்னால் வரும் வா கனங்களின் ஒலியைக் கேட்க இயலா து என்பதால் அவர்களது வாகனத்தின் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாகனம் சம்பந்தப்ப ட்ட மாற்றுத் திறனாளி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வா று இருந்தால் மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
# ஓட்டுநர் உரிமத்தின் கால அளவு எத்தனை ஆண்டுகள்?
அது வயதை பொருத்தது. ஒருவர் 20 வயதில் ஓட்டு நர் உரிமம் பெற்றால் அவ ருக்கு 40 வயது வரை ஓட் டுநர் உரிமம் வழங்கப்படு ம். பின்னர், புதுப்பிக்க 20 ஆண்டு கால அளவு வழங் கப்படும். 39 வயதில் ஒரு வர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் ஓர் ஆண்டு வரை- அதாவது 40 வயது வரை மட்டுமே உரிமம் வழ ங்கப்படும். 40 வயதுக்கு பின்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக் கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத் தை புதுப்பிக்க வேண்டும். அதற் கு ரூ.250 கட்ட ணம்.

No comments:

Post a Comment