Friday, August 1, 2014

பட்ஜெட் 2014: வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள்

பட்ஜெட் 2014 வருமான வரியை மிச்ச ப்படுத்தித் தரும் சலுகைகள்
மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தி ல் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் அறிவிப்புகள் இல்லை என்றா லும், நடுத்தர மக்க ளுக்கு வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகை கள் நிறை யவே இருக்கின்றன.
 
அடிப்படை வருமானவரி வரம்பு, வீட்டுக் கடன் வட்டி, வருமான

வரி விலக்கு முதலீடு போன்றவற்றில் தலா ரூ.50,000 சலுகை அளிக்கப்பட்டு இருக்கி றது.
பட்ஜெட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களு க்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத் திலிருந்து 2.5லட்சமாக உயர்த்தப்பட்டிருபப தன் மூலம் குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரியில் மிச்சமாகும்.
மேலும், கடந்த ஆண்டு 5 லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ள வர்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2000 வரித் தள்ளுபடிஇந்த ஆண்டும் தொடரும். இதெல் லாம் மாதச் சம்பளக்காரர்களு க்கு சந்தோஷ மான செய்தியே.
எதில் முதலீடு செய்யலாம்?
அதிகரித்து வழங்கப்பட்டிருக்கும் 50,000 ரூபாய் எதில் லாபகர மாக முதலீடு செய்யலாம் என்று பார்ப்போ ம்.
ஏற்கெனவே 80சி பிரிவு முதலீட்டு வரம்பான 1 லட்சம் ரூபாயைத் தாண் டி, வருமான வரி கட்டிக் கொண்டிருப்பவர் களுக்கு அரசின் இந்தச் சலுகை நிச்சயம் லாபகரமாக இருக்கும். இந்த ஆண்டில் உங்களின் வருமா னம் அதிகரிக்காது. கடந்த ஆண் டு வரி எதுவும் கட்டவில்லை என் கிறபோது, அரசின் புதிய சலுகை யால் பலன் எதுவும் இல்லை. நட ப்பு ஆண்டில் உங்களின் வருமான அதிகரிப்பைக் கணக்கில் எடுத்து க் கொண்டு, கூடுதல் வரிச் சலு கை ரூ. 50,000க்கான முதலீட் டை மேற்கொள்ளவும்.   நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்து, அதற்கான திரும்பச் செலுத் தும் அசலி ல் 80சி பிரிவில் வரிச் சலுகை பெற்றுவருகிறீர்கள் என்றால், நடப்பு ஆண்டில் கூடுதலாக 50,000 ரூபாய்க் கு வரிச்சலுகை பெறமுடியும். அப்படி வாய்ப்பு இருப்பவர்கள்  அதனை முதலில் பயன்படுத் திக் கொள்வது புத்திசாலித்த னம்.
இப்படி கழிக்க வழியில் லை என்கிற நிலையில் முதலீட் டை தேர்வு செய்யும் போது, இ ந்தத் தொகை உங்களுக்கு எவ்வளவு நாட்கள் கழித்து தேவை, உங்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், பங்கு ச் சந்தையைப் புரிந்து கொண் டிருக்கும் அளவு போன்றவற் றின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளவும்.
விபிஎஃப் 
சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகையுடன் விபிஎ ஃப்ல் முதலீடு செய்வதன் மூலம் 50,000 ரூபாய் வரிச் சலுகையை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விபிஎஃப் என்பது அதிக பட்சம் சம்பளத்தில் பிடிக்கப் படும் பிஎஃப் தொகை அளவுக்கு இருக்கும். பிஎஃப்க்கு உள்ள  8.5% வட்டி இதற்கும் அளிக்கப்படும். வட்டி க்கும் வரி கிடையாது என்பது கூடுதல் லாபம்.
ஒருவர் 50,000 ரூபாயை (மாத ம் சுமார் ரூ.4,165) விபிஎஃப்ல் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செ ய்வதாக வைத்துக் கொள்வோ ம். அவர் மொத்தம் 7.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். இது வட்டியுடன் 15 லட்சம் ரூபாயை தாண்டி இருக்கும்.
பிபிஎஃப் 
தற்போதைய நிலை யில் பிஎஃப் ஐவிட பிபிஎஃப்க்கு அதிக வட்டி (8.7%) கிடைக்கிறது. மேலும், பட் ஜெட்டில் பிபிஎஃப் முதலீட்டு வ ரம்பு ரூ.1.5 லட்சம் ரூபாயாக அதி கரிக்கப்பட்டிருப்பதால், இத னை முதலீட்டுகாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த முதலீடு 15 ஆண்டுகளுக் கானது என்பதை மனத்தில் கொண்டு முதலீட்டை ஆரம்பிக்கவு ம். இடையில் தேவைப்பட்டால் கடன் வாங்கிக்கொள்ள முடியு ம்.  சம்பளத்தில் பிஎஃப் பிடி க்காமல் இருப்பவர்கள் அ ல்லது குறைவாக பிடிக்கப் படு பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் இதில் முதலீ ட்டை அதிகரித்து வருமான வரியை மிச்சப்படுத்தலாம்.
இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி வருமா னத்துக்கு வரி கிடையாது. விபிஎஃப் போலவே, இதில் முதலீட் டை மேற்கொண் டால் 15 ஆண்டுகள் கழித்து ரூ.15.36 லட்சம் கிடைக்கும்.  
இஎல்எஸ்எஸ் 
அடுத்துவரும் ஆண்டுகளில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் என் று எதிர்பார்க்கப் படுவதால், பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ்ல் முதலீட்டை அதிகரிப்பது லாபகரமாக இருக்கு ம். இந்த முதலீடு மூலம் கிடைக்கு ம் டிவிடெண்ட்டுக்கு வரி கிடை யாது. மேலும், குரோத் ஆப்ஷனை தேர்வு செய்திருக்கும் பட் சத்தில் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்று லாபம் பார்க்கும்போது, அந்த லாபத்துக்கு வரி கிடையாது. இதில் குறைந்த பட்சம் எஸ்ஐபி மூலம் ரூ.500 கூட முதலீடு செய் ய முடியும்.
ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர் கள் இதில் முதலீட்டை மேற்கொ ள்ளலாம். கடந்த 3 , 5 ஆண்டுகளி ல் டாப் ஃபண்டுகள் ஏறக் குறைய 20% வருமானத்தைத் தந்திருக்கி ன்றன.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்! 
60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள், இதில் முதலீடு செய்யப்படும் முதலீ ட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். தற்போதைய நிலையில் ஆ ண்டுக்கு 9.2% வட்டி கிடைக் கும். ஐந்தாண்டு லாகின் கா லம் இருக்கிறது. வட்டி வரு மானத்துக்கு வரி கட்டவே ண்டி இருக்கும்.  
  
என்பிஎஸ் 
ஓய்வூதியம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், தேசிய ஓய்வூ திய திட்டத்தில் சேரலாம். இதில் ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீ டு 6,000 ரூபாய். இதிலிருந்து முத லீட்டை பணி ஓய்வுக்குப் பிறகு தான் எடுத்துக்கொள்ள முடியும். முதலீடு ஒருவரின் வயதுக்கே ற்ப ஈக்விட்டி, கடன் பத்திரங்களி ல் பிரித்து முதலீடு செய்யப்படும் என்பதால் நீண்ட காலத்தில் ரிஸ் க் குறைந்து நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் 
ஐந்தாண்டுகள் முதிர்வை கொண்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் டில் முதலீட்டை அதிகமாக்கு வதன் மூலமும் வரிச் சலுகை பெற முடியும். ஐந்தாண்டு மு தலீட்டுக் காலத்தைக் கொண் ட இதற்கு 8.75  9% வட்டி வழ ங்கப்படுகிறது. மூத்த குடிமக் களுக்கு 0.25   0.5% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. முத லீட்டில் ரிஸ்க் இல்லை. அதேநேரத்தில் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இது அவர வரின் வருமான வரம்புக்கேற்ப 10%, 20%, 30% என இருக்கும். அதிக வருமான வரம்பில் இரு ப்பவர்கள் அதிக வரி கட்ட வே ண்டி இருக்கும் என்பதால் அவ ர்கள் இந்த முதலீட்டை தவிர் ப்பது நல்லது.
லைஃப்  இன்ஷூரன்ஸ்  பாலிசிகள் ஆயுள் காப்பீடு பாலிசிகளில் (யூலிப் மற்றும் எண்டோவ் மென்ட் பாலிசிகள்), வரிச் சேமிப்புக்காக முதலீடு செய் வது லாபகரமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஐஆர்டி ஏன் புதிய விதிமுறைப்படி, யூலிப் பாலிசிகள் மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிக ளில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அதிகரி க்கப் பட்டுள்ளதால் 56% வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயம்.  
ரிஸ்கை பரவலாக்க நினைப்ப வர்கள், கூடுதலாகத் தரப்பட்டி ருக் கும் 50,000 ரூபாய்க்கான முதலீட்டை விபிஎஃப், இஎல் எஸ் எஸ், என்பிஎஸ், பேங்க் எஃப்டி போன்றவற்றில் பிரித்து மேற்கொள்ள லாம்.
வீட்டுக் கடன் வட்டியில் சலுகை 
குடியிருக்கும் வீட்டை வீட்டுக் கடனில் வாங்கியிருந்தால் திரும் பச் செலுத்தும் வட்டியில் அளிக்க ப்படும் சலுகை ரூ.1.5 லட்சத்தி லிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக் கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை யால் யாருக்கு லாபம் என்று பார் ப்போம்.
சென்னை, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களை யொட்டி இருக்கும் புறநகரங்களில் ரூ.25  40 லட்சம் ரூபாய்க்குள் வீடு வாங்குபவர்க ளுக்கு இதனால் லாபகரமாக இரு க்கும்.
இந்தச் சலுகையை முதல் ஆண்டி ல் முழுமையாகப் பெற, ஒரு வர் குறைந்தது ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி இருப்பது அவ சியம்.
அதாவது, ஒருவர் ரூ.20 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும்விதமாக 10.50% வட் டியில் வாங்கியிருந்தால், முதல் ஆண்டி ல் வட்டிக்கு மட்டும் செல்லும் தொகை ரூ.2,01,520. அந்த வகையில் ரூ.2 லட்சம் வட்டிக்கான வரிச் சலுகையை முழுமை யாக பெற முடியும்.
அடுத்துவரும் ஆண்டுகளில் வட்டிக்குச் செல்லும் தொகை குறையும்போது, இந் தச் சலுகையை முழுமையாகப் பெற முடி யாமல் போகும்.
அதுவே, கடன் தொகை ரூ.25 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என்கிறபோது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இந்தச் சலுகை யைத் தொடர்ந்து பெற முடியும்.
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் களுக்கு வரிச் சலுகை அளி க்கப்பட்டிருக்கும் அதே நேர த்தில், அவர்களின் முதலீட்டி ன் வருமானத் தை பாதிக்கும் சில மாற்றங் களும் செய்ய ப்பட்டிருக்கின்றன.
கடன் ஃபண்டுகளுக்கு மூல தன ஆதாயசலுகைகுறைப்பு 
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கடன் ஃபண்டு களின் யூனிட்க ளை ஓராண்டுக்குமேல் வைத் திருந்து விற்றால், அது நீண்ட கால முதலீடாகவும் அதற்கு 10 சதவிகிதம் அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20 சதவிகிதம், இதில் எது குறை வோ அதை வரியாகக் கட்டினா ல் போதும் என்று இருந்தது.  
இப்போது இது மாற்றப்பட்டுள் ளது நீண்ட காலம் என்பது  36 மாதங்களாகவும், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளி யாகி இருக்கிறது.
இந்த  பட்ஜெட் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஃபிக் ஸட் மெச்சூரிட்டி பிளான் (எஃப்எம்பி) திட்டங்கள்தான். இந்த முதலீட்டில், 366 நாட்க ளுக்கு மேற்பட்ட முதிர்வுக்கு இரண்டு ஆண்டுகளின் பணவீக்க விகித சரிக்கட்டலை மேற்கொ ண்டு, அதன்பிறகு 20% வரி கட்டினால் போதும் என்று இருந்தது. இப்போது மூன் று ஆண்டுகள் முதிர்வுக்கு மட்டுமே நீண்ட கால மூல தன ஆதாயம் அனுமதிக்க ப்படுகிறது.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் டைவிட  எஃப்எம்பி வருமா னம் அதிகமாக கிடைக்கவே பெரும்பணக்காரர்கள், அதில் அதிக மாக   முதலீட்டை மேற்கொண்ட னர். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் து றை மொத்தம் ரூ.9.74 லட்சம் கோ டியை நிர்வகித்துவருகிறது. இதி ல் ரூ.6.95 லட்சம் கோடி கடன் சார் ந்த மியூச்சுவல் ஃபண்டுகள். அதா வது, சுமார் 70% கடன் சார்ந்த மியூ ச்சுவல் ஃபண்ட் திட்டங்களாக இருக்கின்றன.
கடன் சார்ந்த ஃபண்ட் முதலீட்டில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி எஃப் எம்பி முதலீடு ஆகும். இந்த முதலீட்டுக்கு வரிச் சலுகை குறை யும்போது இந்த முதலீடு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாறும். அந்தத் தொகையைக் கொண்டு வங்கிகள் தாராளமா க கடன் வழங்கும் என்பது நிதி அமைச்சரின் திட்டம். அப்போது பொருளாதாரம் வளரும் என்ப து அவரின் கணிப்பு.
எஃப்எம்பி திட்டத்தில் முன்போல் வரிச் சலுகை இல்லை என்பதா ல் ஓரிரு மியூச்சுவல் ஃபண்ட் நிறு வனங்கள், அண்மைக்காலத்தி ல் இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டிய தொகையை முதலீட்டாளர்களுக் கு திருப்பி அளித்துள்ளதாக தகவ ல்.
இனி இவற்றை பின்பற்றவேண்டியது நீங்கள்தான்!

No comments:

Post a Comment