Friday, October 3, 2014

ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?

ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?



ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?எல்லா மாதங்களும் கிரேக்க மன்னர்களின் பெயர்களை கொண்டது …!! அதில் ஜுலியஸ் மற்றும் அகஸ்டியஸ் மன்னர்கள் இருவரும் நல்ல உயிர் நண்பர்கள். அவர்கள் இருவர்களிக்கும் சம உரிமை அளிப்பதற்கே அவர்கள் பெயர்களை கொண்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களுக்கு 31 தேதிகள் அமைக்கப்பட்டது …!!
இது ஒரு நட்பின் சிறந்த எடுத்துக்காட்டு…!!
வெற்றியின் போது கை தட்டும்
பல கைகளை விட –
தோல்வியின்போது கண்ணீரை
துடைக்கும் ஒரு விரலே
சிறந்தது – அதுதான்
” நட்பு ” .

மருத்துவ குணம் வாய்ந்த புதினா, புதினாவில் இத்தனை குணங்களா?

மருத்துவ குணம் வாய்ந்த புதினா, புதினாவில் இத்தனை குணங்களா?



உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்களின் பால பாடம். நமது முன்னோர் தங்களுக்கு வரும் பிணிகளை உணவில் மாற்றங்களை செய்வதன் மூலமே போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்கள் உணவில் அடிக்கடி இடம் பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.
புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றனவாம். இதில் ஏ.பி.சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, புரதம் என்று பல சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
ஐந்து ரூபாய்க்கு கைநிறைய கிடைக்கும் புதினாவின் மருத்துவ சக்தி அபாரமானது. புதினாவை உணவில் அனைத்து கீரைகள் மற்றும் காய்கறிகளுடனும் சேர்த்து பயன்படுத்தலாம். பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்று வலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச் சிக்கல், உப்புசம், வயிற்றுப் போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்குவதுடன், காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும். செரிமானம் ஆவதில் பிரச்சினை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கி விடும்.
ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச் சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி குழந்தைகள் வீரிட்டு அழுவது நிற்கும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மென்தால் என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து பற்பசையுடன், காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீ வைத்து, நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். மூட்டு வலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும். புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஊளைச் சதை குறைந்து ‘சிலிம்’ ஆகலாம். புதினா பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் உலக அளவில் நடந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் புதினாவை பற்றிய பல புதிர்களை அவிழ்க்க வாய்ப்பு உள்ளது.

Wednesday, September 17, 2014

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
 
உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.
 
பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.
 
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்
 
அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.
 
புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த வனசா எர், அதே சமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது. அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப் பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Saturday, September 13, 2014

கிழமையும் விளக்கமும்




undefinedSUNDAY  = கதிரவனுக்கு முதன்மை இடமளித்தால் SUNDAY என்றாயிட்டு.

MONDAY = சந்திரனின் நாளாக இரண்டாம் நாள் MONDAY

TUESDAY= ஸ்காண்டி நேவியர்களின் கடவுளாகிய TIW  என்பதே Tuesday ஆகும்.

WEDNESDAY= ஸ்காண்டி நேவியர்களின் அரசன் Wodin என்பதே WEDNESDAY.

THURSDAY=   இடி கடவுளின் (TOR) பெயரையே THURSDAY ஆகும்.

FRIDAY=      நேவியர்களின் அரசி FRIGG அவர்களின் பெயர்ப்படி  வந்ததாகும்.

SATURDAY=  ரோமானியர்களின் கடவுள் (SATURN) பெயரையே இறுதிநாளுக்கு வைத்தனர்.

புயல்கள் எப்படி உருவாகின்றன


நம் புவியில் வீசும் மிக கடுமையான, ஆவ் என நம்மை வியக்க வைக்கும் சூறாவளி காற்றே புயல்கள். புயல்களை அவை வழங்கும் இடம் பொறுத்து  பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சூறாவளிகளின் அறிவியல் பெயர் “வெப்பமண்டல புயல்கள்”. புவிநடுக்கோட்டை ஒட்டி, மகர கடக கோடுகளுக்கு இடையே உள்ள வெப்பமும் புழுக்கமும் உள்ள பகுதிகளை “வெப்பமண்டலம்” என்கிறார்கள். அட்லாண்டிக் கடலிலும் கிழக்கு பசிபிக் கடலிலும் தோன்றும் புயல்களை “ஹரிகேன்” என்கின்றனர். இந்து மாக்கடலில் தோன்றும் புயல்களை சைக்ளோன் என்றும் ஜப்பானிய கடலில் தோன்றும் புயல்களை டைஃபூன் என்றும் அழைக்கிறார்கள்.

செய்கைகோள்கள் அனுப்பிய தரவுகளை கொண்டு வரைந்த தோற்றம்.
புயல்கள் என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை உருவாகும் முறை ஒன்றேதான்.



வெப்பமண்ட்ல புயல்கள் ஈரமும் வெதுவெதுப்புமான் காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் பெரிய இயந்திரங்கள் எனலாம். எனவே தான் அவை, புவிநடுகோட்டு பகுதிகளில்  வெதுவெதுப்பான நீர் உள்ள கடலின் பரப்பில் உருவாகின்றன. கடல் மட்டத்தில் இருந்து ஈரமும் வெதுவெதுப்புமான காற்று மேல் நோக்கி எழுகின்றது. அப்படி கடல் மட்டத்தை விட்டு மேல் எழுகையில் கடல் பரப்பை ஒட்டி உள்ல காற்று குறைகிறது. அதாவது சூடான காற்று மேல் எழுகையில் அங்கு காற்றின் அழுத்தம் குறைக்கிறது.
அதனால், சுற்றுப்பகுதிகளில் உள்ள உயர் அழுத்த காற்று, அழுத்தம் குறைந்த பகுதிக்குள் முட்டிக்கொண்டு நுழையும். அப்படி நுழையும்  காற்றும் சூடாகிறது. சூடான  காற்று தொடர்ந்து மேல் எழ, சுற்றிலும் உள்ள காற்று சுழன்று அதன் இடத்தை பிடிக்கிறது. இந்த சூடான, ஈரமான காற்று மேல் உயர்ந்து குளிரும்போது அதில் உள்ள ஈரம் மேகம் ஆக மாற்றம் பெறுகிறது. இவ்வாறு  கடலின் சூட்டாலும் அதன் பரப்பில் ஆவியாகும் நீராலும் மேககத்திரளும் காற்றின் சுழற்சியும் பெருகுகிறது
புவிநடுக்கோட்டின் வடபுலத்தில் உருவாகும் புயல்கள் வலஞ்சுழியாகவும், தென்புலத்தில் உருவாகும் புயல்கள் இடஞ்சுழியாகவும் சுழலுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு புவி  தன் அச்சு மேல் சுழல்வதே  காரணம்.
ஒரு உருமு மேகம். “வெப்பமண்டல புயலில் இது போன்ற பல மிகபெரும் வட்டவடிவு கற்றைகளாக உருவாகின்றன
உருமு மேகத்தை குமுலஸ் நிம்பஸ் என்கிறார்கள்.  இது இடியும் மின்னலும் கூடிய ஒரு வகை மேகம். இது  அடர்த்தியான கோபுரங்கள் போல் வானில் 30,000 அடிக்கும் மேலான  உயர்மட்டத்தை எட்டும் தன்மையுடையதாக இருக்கும். அதில் உறைபனி துகள்களால் இழைகள் ஓடிவது போல உச்சி தவிர பிற கூம்பு வடிவில் இருக்கும். இரு ஒரே மேகமாகவோ அல்லது பல தலைகளுடன் அடிப்பாகம் மட்டும் இணைந்த மேக திரளாகவோ இருக்கும்.
இந்த சூறாவளி அமைப்பு  வேகம் வேகமாக சுழல, அதன் நடுவிலே அதன் சுழிக்கண் உருவாகிறது. அதன் சுழிக்கண் அமைதியாகவும் தெளிவாகவும், குறைந்த காற்றழுத்தம் உள்ளதாகவும் இருக்கும்.  உயர் அழுத்த காற்று அந்த மேலிருந்து சுழிக்கண் வழியாக கீழ் நோக்கி பாயும்.
வெப்பமண்டல சூறாவளியின் குறுக்குவெட்டு தோற்றம்.

வெப்பமண்டல சூறாவளியை குறுக்காக வெட்ட இயலுமானால், அது இப்படித்தான் இருக்கும். அந்த சிறிய சிவப்பு அம்பு, ஈரமான காற்று கடலின் பரப்பில் இருந்து மேலெழுந்து புயலின் கணணை சுற்றி மேக கற்றைகளை உருவாக்குவதை சுட்டுகிறது. நீல நிற அம்பு, குளிர்ந்த வரண்ட காற்று அதன் கண்னில் அந்த மேக கற்றைகளின் ஊடே இறங்குவதை சுட்டுகிறது. பெரிய சிவப்பு அம்புகளோ, மேல் எழும்புகின்ற மேக கற்றைகளின் சுழற்சியை சுட்டுகிறது
சுழலுகின்ற சூறாவளி காற்றின் வேகம் 39 மைல்/மணிக்கு எட்டும்போது அந்த சூறாவளியை ”வெப்ப மண்டல சூறாவளி” என்று
அழைக்கப்படும். அதுவே  74 மைல்/மணிக்கு எட்டும்போது அலுவல மொழியாக “ட்ராபிகள் சைக்ளோன்” (தமிழில் வெப்ப மண்டல புயல் எனலாம்) அல்லது ஹரிகேன் எனப்படும்.
வெப்ப மண்டல புயல்கள் வழமையாக நிலப்பகுதியை தொடும்போது தன் வலுவை இழக்க தொடங்கும். காரணம், அவற்றுக்கு, இனி மேலும் சூடான கடல்நீரின் ஆற்றல் ஊட்டப்படுவது இல்லை. இருப்பினும், அவை உள்நாட்டில் வெகு தொலைவு நகர்ந்து முற்றிலும் மடிவதற்குள்,  பல அங்குல மழையை கொட்டுவதோடு, காற்றினால் விளையும் சேதங்களுக்கு காரணமாகிறது.
வெப்ப மண்டல புயல்களின் வகைப்பாடுகள்

நாசா வடிவமைத்து அமெரிக்க தேசீய கடல் மற்றும் வளிமணடல நிருவாகத்துறைனரால் இயக்கபப்டும் GOES செயற்கஈகோள்கள்  தரைமட்டத்தில் இருந்து 23,000 மலை உயரத்தில் நிலைகொண்டு இந்த புயல்களை கண்காணித்துக்கொண்டு உள்ளன. இக்கோள்கள், வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கு புயல்கள் எங்கு எப்போது தோன்றும் என கணித்து சொல்வதால் பல உயிர்களை காக்க முடிகிறது.
http://spaceplace.nasa.gov/hurricanes/

​

முத்து உருவாகுவது எப்படி



Image result for முத்து imagesஇயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?




முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.



கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Image result for முத்து images



சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள்.





சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும். ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.




அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம்.






கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.



அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.


 இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் எறும்புகள்: ஆய்வறிக்கை!


பல ஆயிரம் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் திறன் மிகச் சிறிய எறும்புகளுக்கு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செம்மர எறும்புகள் நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதாக துய்ஸ்பர்க் சென் பல்கலைகழக புவியியல் நிபுணர் உல்ரிச் ஸ்கர்பர் தெரிவித்துள்ளார்.




உல்ரிச்சும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கு ஜேர்மனியின் எபல் பிராந்தியத்தில் 2 ஆண்டுகளாக எறும்பு மலைப்பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.



அருகாமையில் ஏற்படும் சிறு நிலநடுக்கத்தின் போது இந்த எறும்புகள் விநோதமாக நடந்து கொள்வதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். உல்ரிச் ஸ்கர்பர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் உள்ள அப்ருசோ பகுதிக்கு சென்றிருந்தார். எல் அகுய்லா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் உல்ரிச் அந்தப் பகுதிக்கு சென்றார். அப்போது புவியியல் கோட்டு பகுதியில் எறும்புக் கூடுகள் இருப்பதை கண்டார்.
ஆய்வாளர் உல்ரிச் இஸ்தான்புல் பகுதிக்கு சென்று இந்த ஆய்வை தொடரத் திட்டமிட்டுள்ளார். மிக விரைவில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். தமது ஆய்வு துவக்க நிலையிலேயே இருப்பதாக கூறும் உல்ரிச் வருங்காலத்தில் மனித உயிர்களை காக்கும் வகையில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் சிற்றினமாக எறும்புகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.