Thursday, October 16, 2014

வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி கொண்டாட்டம்

தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது. தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன்.
ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது.
 இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது. தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்ததங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர். இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை. முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர். அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது. தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை.

Friday, October 3, 2014

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…



images(2)
கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள்…
Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol…
Alt + 0176 …°……degree symbol
Alt + 0177 …±….plus-or -minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fraction, three-fourths
Alt + 0215 ….×…..multi ¬plication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..black smiley face
Alt + 15…..☼…..sun
Alt + 12……♀…..female sign
Alt + 11…..♂……male sign
Alt + 6…….♠…..spade
Alt + 5…….♣…… Club
Alt + 3…………. Heart
Alt + 4…….♦…… Diamond
Alt + 13……♪…..eighth note
Alt + 14……♫…… beamed eighth note
Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)
Alt + 251…..√…..s quare root check mark
Alt + 8236…..∞….. infinity
Alt + 24…….↑….. up arrow
Alt + 25……↓…… down arrow
Alt + 26…..→…..right arrow
Alt + 27……←…..left arrow
Alt + 18…..↕……up/down arrow
Alt + 29……↔…left right arrow
கருத்துகள் வரவேற்க படுகின்றன
நன்றி

பொது அறிவு கேள்வி பதில்கள்

பொது அறிவு கேள்வி பதில்கள்



மலர் என்றால் என்ன ?
மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து) உடைய பூ எது?
சூரியகாந்தி
மஞ்சரி என்றால் என்ன?
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும். மலரின் உறுப்புகள் என்ன ?
பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று? இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
ஆகாயத்தாமரை
கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுவது?
காந்தள்(Gloriosa)
அல்லி வகைகள் என்ன ?
குளிரை தாங்குகிற நீர் அல்லிகள் பகலில் மட்டுமே பூக்கும், ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.
இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்த பூவைக் குறிக்கும் ?
தாமரை
எந்த மலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்
மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் என்றழைக்கிறார்கள்.
வில்வ மரத்தில் பூக்கும் மலரின் பெயர் என்ன?
கூவிளம்.

அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள்

அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள்



நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் :
******************************
அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
போலீஸ் SMS :- ———————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
போலீஸ் : —————————————–100
தீயணைப்புத்துறை :—————————-101
போக்குவரத்து விதிமீறல——————–103
விபத்து :——————————————–100, 103
ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பழிவாங்கும் தீவு!!

பழிவாங்கும் தீவு!!



gayola_island_004இத்தாலி நாட்டின் நேப்ல்ஸ் இல் உள்ள ஒரு சிறு தீவுதான் இந்த கயோலா தீவு.
நேப்ல்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் இந்த தீவை சபிக்கப்பட்டது என்று கூறுகின்றனர் . அதற்கு பல காரணங்களையும் கூறுகின்றனர் இந்த அழகான தீவிற்கு பின் பல மர்மங்கள் உள்ளதாம்.
இந்த தீவின் முதலாளிகள் எல்லாம் அற்ப ஆயுளில் இறந்து விடுவதால் இந்த மக்கள் இதை கண்மூடித்தனமாக நம்புகின்றனர்.
1920 களில் சுவிஸ் ஹான்ஸ் பௌன் ஒரு தரை விரிப்பில் சுருட்டப்பட்டு இறந்து கிடந்தார் . சிறிது நேரம் கழித்து அவரின் மனைவி அருகில் உள்ள கடலில் மூழ்கி இறந்தார்.
இதற்கு அடுத்து இந்த தீவை வாங்கிய ஜேர்மன் ஓட்டோ க்ருன்பக் தீவின் வில்லாவில் வசிக்கும் போது மாரடைப்பால் இறந்தார்.
அடுத்த உரிமையாளர் மிகப்பெரிய தொழில் அதிபர் மௌரிசே-ய்வேஸ் சாண்டோஸ் . இவர் பைத்தியம் பிடித்து மனநல காப்பகத்தில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு பிறகு இதை வாங்கியவர் ஒரு ஜேர்மன் இரும்பு தொழிற்சாலை அதிபர் . இதை வாங்கியவுடன் அவரின் நடவடிக்கைகள் மாறியது . அவரின் மொத்த சொத்தும் அவரின் இந்த மாற்றத்தால் அழிந்தது.
அடுத்து வாங்கிய ஜியானி அக்னெல்லி , அவரின் பெரும்பாலான உறவினர்களை மரணத்தின் பிடியில் கொடுத்தார் . பிறகு பால் கெட்டி என்பவர் வாங்கினார் . வாங்கிய பின் அவரின் பேரனை யாரோ கடத்தினார்கள்.
மீப கால நிகழ்வு 2009 இல் நடந்தது . பிரான்கோ அம்ப்ரோசியா மட்டும் அவரின் மனைவி ஜியோவன்னா சாக்கோ இருவரும் இந்த தீவின் எதிரில் உள்ள ஒரு வில்லாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கொலை செய்யபட்டனர்.
இவை அனைத்தும் தற்செயலாக கூட இருக்கலாம்! இருந்தாலும் இந்த தீவின் அருகில் இருக்கும் மக்களுக்கு உண்மை தெரியும் வரையில் , இவை அனைத்தும் புரியாத ஒரு புதிராகவே இருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை

உலக அளவில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ உருவானது எப்படி?

உலக அளவில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ உருவானது எப்படி?



mothers-dayபல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ‘அன்னையர் தினம்’ உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் ‘சைபெலி’ என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்த கொண்டாட்டம் ‘மாதா’ திருக்கோவிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது நவீன காலத்தில் ‘மதர்ஸ் டே’ கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி வித்தியாசமானது.
இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடும் ‘அன்னையர் தினம்’ அமெரிக்காவில் தான் உருவானது.
அனா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் ‘கிராப்டன்’ என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது அங்கு நடந்த யுத்தக் களத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபுறமும் சிதறிப் போனது. அப்படி பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், சமாதானத்துக்கும் கடுமையாக போராடியவர் தான் அனா ஜார்விஸ். இறுதியில் அவருடைய பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904-ம் ஆண்டில் மறைந்தார்.
அந்த பார்வையற்ற மகள் அன் ரீவ்ஸ் ஜார்விஸ் முதன்முதலாக தன் தாயின் நினைவாக உள்ளூரில் உள்ள ‘மெத்தடிஸ்ட் சர்ச்’சில் 1908-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ‘சிறப்பு வழிபாடு’ ஒன்றை நடத்தினார். தன் தாயாரின் நினைவை போற்றியதைப் போலவே, எல்லோரும் அவரவர் அன்னையை கௌரவிக்க வேண்டும், எல்லோருடைய இல்லங்களிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
இந்நிலையில, 1913-ம் ஆண்டு தன் வேலை நிமித்தம் காரணமாக பார்வையற்ற அன் ரீவ்ஸ் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறினார். அவருடைய தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையை ஒரு கடமையாகவே எண்ணி அதை தொடர்ந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டார்.
அதன் பிறகு, நீண்ட நாட்களாக தன் மனதில் உறுத்தி வந்த எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்கு தெரிவிக்க அரசாங்கமும் அவருடைய கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்து அறிவித்தது.
அதன் பிறகும், ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்பட வேண்டும், அந்த நாளை அரசின் ‘விடுமுறை’ நாளாக அறிவிக்க வேண்டுமென அப்போது அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வ அன்னையர் தினமாக அறிவித்தார்.
அமெரிக்காவை அடுத்து கனடா அரசும் இதனை அங்கீகரித்தது. அதுமட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் இருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளை ‘அன்னையர் தினம்’ என அறிவித்து நடைமுறைப்படுத்தியது.
ஆனால், அங்கு அன்னையர் தின கொண்டாட்டங்கள் வணிகமயமாக மாறியது. எதையும் வியாபாரமாக்கி பணம் சேகரிக்கும் அமைப்பு அன்னையர் தினத்தன்று அன்னையின் படம் பொறித்த கொடியை விற்று பணம் சேர்த்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜார்விஸ். 1923-ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.  ”அன்னையர் தினம் உணர்ச்சிபூர்வமான நாளாகவே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். பணம் சேர்க்கின்ற நாளாக இருக்கக் கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடி வென்றார்.
தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் அவர் இறப்பதற்கு முன்னதாக,  ”உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பது தான் என் ஆசை” என்று தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.
அவருடைய ஆசை பூர்த்தியாகும் விதமாக இன்று உலகம் முழுவதும் மதர்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (11 ஆம் தேதி) இந்தியாவில் அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

144 தடை என்றால் என்ன ? மீறினால் தண்டனை என்ன ?

144 தடை என்றால் என்ன ? மீறினால் தண்டனை என்ன ?



144 தடைதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 144 தடை பற்றிய விவரம் வருமாறு:–
மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், பொது அமைதி, கலவர தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதி, நகரம் ஆகிய இடங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்.
இந்த தடை காலத்தில், தமிழகத்தில் யாரும் பொது இடங்களில் 5 பேராக கூடி செல்ல முடியாது.
உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதார கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.