நம் புவியில் வீசும் மிக கடுமையான, ஆவ் என நம்மை வியக்க வைக்கும் சூறாவளி காற்றே புயல்கள். புயல்களை அவை வழங்கும் இடம் பொறுத்து பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சூறாவளிகளின் அறிவியல் பெயர் “வெப்பமண்டல புயல்கள்”. புவிநடுக்கோட்டை ஒட்டி, மகர கடக கோடுகளுக்கு இடையே உள்ள வெப்பமும் புழுக்கமும் உள்ள பகுதிகளை “வெப்பமண்டலம்” என்கிறார்கள். அட்லாண்டிக் கடலிலும் கிழக்கு பசிபிக் கடலிலும் தோன்றும் புயல்களை “ஹரிகேன்” என்கின்றனர். இந்து மாக்கடலில் தோன்றும் புயல்களை சைக்ளோன் என்றும் ஜப்பானிய கடலில் தோன்றும் புயல்களை டைஃபூன் என்றும் அழைக்கிறார்கள்.
செய்கைகோள்கள் அனுப்பிய தரவுகளை கொண்டு வரைந்த தோற்றம்.
புயல்கள் என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை உருவாகும் முறை ஒன்றேதான்.
வெப்பமண்ட்ல
புயல்கள் ஈரமும் வெதுவெதுப்புமான் காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும்
பெரிய இயந்திரங்கள் எனலாம். எனவே தான் அவை, புவிநடுகோட்டு பகுதிகளில்
வெதுவெதுப்பான நீர் உள்ள கடலின் பரப்பில் உருவாகின்றன. கடல் மட்டத்தில்
இருந்து ஈரமும் வெதுவெதுப்புமான காற்று மேல் நோக்கி எழுகின்றது. அப்படி
கடல் மட்டத்தை விட்டு மேல் எழுகையில் கடல் பரப்பை ஒட்டி உள்ல காற்று
குறைகிறது. அதாவது சூடான காற்று மேல் எழுகையில் அங்கு காற்றின் அழுத்தம்
குறைக்கிறது.
அதனால்,
சுற்றுப்பகுதிகளில் உள்ள உயர் அழுத்த காற்று, அழுத்தம் குறைந்த பகுதிக்குள்
முட்டிக்கொண்டு நுழையும். அப்படி நுழையும் காற்றும் சூடாகிறது. சூடான
காற்று தொடர்ந்து மேல் எழ, சுற்றிலும் உள்ள காற்று சுழன்று அதன் இடத்தை
பிடிக்கிறது. இந்த சூடான, ஈரமான காற்று மேல் உயர்ந்து குளிரும்போது அதில்
உள்ள ஈரம் மேகம் ஆக மாற்றம் பெறுகிறது. இவ்வாறு கடலின் சூட்டாலும் அதன்
பரப்பில் ஆவியாகும் நீராலும் மேககத்திரளும் காற்றின் சுழற்சியும்
பெருகுகிறது
புவிநடுக்கோட்டின் வடபுலத்தில் உருவாகும் புயல்கள்
வலஞ்சுழியாகவும், தென்புலத்தில் உருவாகும் புயல்கள் இடஞ்சுழியாகவும்
சுழலுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு புவி தன் அச்சு மேல் சுழல்வதே காரணம்.
ஒரு உருமு மேகம். “வெப்பமண்டல புயலில் இது போன்ற பல மிகபெரும் வட்டவடிவு கற்றைகளாக உருவாகின்றன
உருமு
மேகத்தை குமுலஸ் நிம்பஸ் என்கிறார்கள். இது இடியும் மின்னலும் கூடிய ஒரு
வகை மேகம். இது அடர்த்தியான கோபுரங்கள் போல் வானில் 30,000 அடிக்கும்
மேலான உயர்மட்டத்தை எட்டும் தன்மையுடையதாக இருக்கும். அதில் உறைபனி
துகள்களால் இழைகள் ஓடிவது போல உச்சி தவிர பிற கூம்பு வடிவில் இருக்கும்.
இரு ஒரே மேகமாகவோ அல்லது பல தலைகளுடன் அடிப்பாகம் மட்டும் இணைந்த மேக
திரளாகவோ இருக்கும்.
இந்த சூறாவளி
அமைப்பு வேகம் வேகமாக சுழல, அதன் நடுவிலே அதன் சுழிக்கண் உருவாகிறது. அதன்
சுழிக்கண் அமைதியாகவும் தெளிவாகவும், குறைந்த காற்றழுத்தம் உள்ளதாகவும்
இருக்கும். உயர் அழுத்த காற்று அந்த மேலிருந்து சுழிக்கண் வழியாக கீழ்
நோக்கி பாயும்.
வெப்பமண்டல சூறாவளியின் குறுக்குவெட்டு தோற்றம்.வெப்பமண்டல சூறாவளியை குறுக்காக வெட்ட இயலுமானால், அது இப்படித்தான் இருக்கும். அந்த சிறிய சிவப்பு அம்பு, ஈரமான காற்று கடலின் பரப்பில் இருந்து மேலெழுந்து புயலின் கணணை சுற்றி மேக கற்றைகளை உருவாக்குவதை சுட்டுகிறது. நீல நிற அம்பு, குளிர்ந்த வரண்ட காற்று அதன் கண்னில் அந்த மேக கற்றைகளின் ஊடே இறங்குவதை சுட்டுகிறது. பெரிய சிவப்பு அம்புகளோ, மேல் எழும்புகின்ற மேக கற்றைகளின் சுழற்சியை சுட்டுகிறது
சுழலுகின்ற சூறாவளி காற்றின் வேகம் 39 மைல்/மணிக்கு எட்டும்போது அந்த சூறாவளியை ”வெப்ப மண்டல சூறாவளி” என்று
அழைக்கப்படும். அதுவே 74 மைல்/மணிக்கு எட்டும்போது அலுவல மொழியாக “ட்ராபிகள் சைக்ளோன்” (தமிழில் வெப்ப மண்டல புயல் எனலாம்) அல்லது ஹரிகேன் எனப்படும்.
வெப்ப
மண்டல புயல்கள் வழமையாக நிலப்பகுதியை தொடும்போது தன் வலுவை இழக்க
தொடங்கும். காரணம், அவற்றுக்கு, இனி மேலும் சூடான கடல்நீரின் ஆற்றல்
ஊட்டப்படுவது இல்லை. இருப்பினும், அவை உள்நாட்டில் வெகு தொலைவு நகர்ந்து
முற்றிலும் மடிவதற்குள், பல அங்குல மழையை கொட்டுவதோடு, காற்றினால்
விளையும் சேதங்களுக்கு காரணமாகிறது.
வெப்ப மண்டல புயல்களின் வகைப்பாடுகள்
நாசா
வடிவமைத்து அமெரிக்க தேசீய கடல் மற்றும் வளிமணடல நிருவாகத்துறைனரால்
இயக்கபப்டும் GOES செயற்கஈகோள்கள் தரைமட்டத்தில் இருந்து 23,000 மலை
உயரத்தில் நிலைகொண்டு இந்த புயல்களை கண்காணித்துக்கொண்டு உள்ளன.
இக்கோள்கள், வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கு புயல்கள் எங்கு எப்போது
தோன்றும் என கணித்து சொல்வதால் பல உயிர்களை காக்க முடிகிறது.
http://spaceplace.nasa.gov/hurricanes/
No comments:
Post a Comment