பல ஆயிரம் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் திறன் மிகச் சிறிய எறும்புகளுக்கு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செம்மர எறும்புகள் நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதாக துய்ஸ்பர்க் சென் பல்கலைகழக புவியியல் நிபுணர் உல்ரிச் ஸ்கர்பர் தெரிவித்துள்ளார்.
உல்ரிச்சும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கு ஜேர்மனியின் எபல் பிராந்தியத்தில் 2 ஆண்டுகளாக எறும்பு மலைப்பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அருகாமையில் ஏற்படும் சிறு நிலநடுக்கத்தின் போது இந்த எறும்புகள் விநோதமாக நடந்து கொள்வதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். உல்ரிச் ஸ்கர்பர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் உள்ள அப்ருசோ பகுதிக்கு சென்றிருந்தார். எல் அகுய்லா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் உல்ரிச் அந்தப் பகுதிக்கு சென்றார். அப்போது புவியியல் கோட்டு பகுதியில் எறும்புக் கூடுகள் இருப்பதை கண்டார்.ஆய்வாளர் உல்ரிச் இஸ்தான்புல் பகுதிக்கு சென்று இந்த ஆய்வை தொடரத் திட்டமிட்டுள்ளார். மிக விரைவில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். தமது ஆய்வு துவக்க நிலையிலேயே இருப்பதாக கூறும் உல்ரிச் வருங்காலத்தில் மனித உயிர்களை காக்கும் வகையில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் சிற்றினமாக எறும்புகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment